Tuesday, January 8, 2019

ADHI SANKARAR

ஆதி சங்கரர் J.K. SIVAN
சுப்ரமணிய புஜங்கம் 5

சுப்ரமண்யோம் ஹரஹர சுப்ரமண்யோம்!

இந்த குழு மூலம் செந்தூர் குமரனின் இளைத்திருநீறு மஹிமையை ஆதி சங்கர் அனுபவித்து நன்றியோடு எழுதிய சுப்ரமணிய புஜங்கம் 33 ஸ்லோகங்களில் அறிய ஒரு வாய்ப்பு எனக்கு கிடைத்தது நான் செய்த பூர்வ ஜென்ம பலன். ஆறு முகனின் சுப்ரமணிய புஜங்கம் ஆறு பகுதிகளாக எழுதி நிறைவு செய்ய உத்தேசம். அது அவனருளால் அடுத்த பகுதியோடு நிறைவு பெறும் . இதை சிறு புத்தகமாக்கி இலவச விநியோகத்துக்கு யாரேனும் முன்வந்தால் என்னை அணுகவும். (ஜே.கே. சிவன் 9840279080) நிறைய காரியங்கள் இது போல் செய்ய வாய்ப்பு இருக்கிறது. மனமும் தனமும் ஒன்று சேரவேண்டும். நிச்சயம் எண்ணம் கைகூடும். இதுவரை கிட்ட தட்ட 35 வெளியீடுகள் வந்துவிட்டதே. இனி குட்டி குட்டி புத்தகங்கள் தான்.
பத்ரம் என்றால் வடமொழியில் இலை .திருச்செந்தூரில் விபூதி பன்னீர் இலையில் தான் பிரசாதமாக வைத்து கொடுப்பது வழக்கம். அதில் கமழும் நறுமணம் தெய்வீகமானது.

திருச்சீரலைவாய் என்று திருச்செந்தூருக்கு பெயர். ஓ வென்று சீறும் அலைகளின் வாயில், கரையில் சூரனை வென்றுவிட்டு நிற்கின்ற ஷண்முகன் செந்தூர் முருகன். இங்கு நிற்கும் பன்னீர் மரங்களின் இலைகளுக்கு தனி சக்தி. வேதமந்த்ர சக்தி கொண்டவை. ஆகவே தான் மந்திரமாவது நீறு என்று பன்னீர் இலையில் வைத்து அளிக்கும் விபூதி பிரசாதம் சகல நோய்களையும் தீர்க்கும் பன்னிரு கரத்தானின் பாசமிகு திருநீறு. பன்னீர் இலையிலுள்ள 12 நரம்புகள் முருகனது பன்னிரு கரங்களை நினைவூட்டுவ

ரிஷி விச்வாமித்ரருக்கு ஒரு முறை குன்ம ரோக வியாதி. தாடகையை ராமன் கொல்ல காரணமாக இருந்ததால் நேரிட்டது. அதை திருச்செந்தூர் இலைத் திருநீறு தீர்த்தது. ஆதி சங்கரருக்கு விஷமி அபிநவ குப்தனால் ஏவப்பட்ட வியாதி உடனே ஷண்முகனால் விலகியது.

கிட்டத்தட்ட 400 வருஷங்களுக்கு முன்பு ஸ்ரீ ல ஸ்ரீ தேசிகமூர்த்தி என்கிற திருவாவடுதுறை மடாதிபதி திருச்செந்தூர் ஆலய ,மேற்கு நுழைவு வாயில் கட்டியபோது வேலையாட்களுக்கு கொடுக்க பண தட்டுப்பாடு. முருகன் அருளால் எல்லா கூலியாட்களுக்கும் பணத்திற்கு பதிலாக இலை திருநீறு மட்டுமே அளிக்கப்பட்டது. அவரவர் கைகளில் திருநீறு அவர்களுக்கு சேரவேண்டிய பணமாக மாறியது அனைவரும் அறிந்த உண்மை. ஆலய சரித்ரத்தில் இது காணப்படுகிறது.

திருச்செந்தூர் பிள்ளை தமிழ் எழுதிய பகழி கூத்தருக்கு தாங்கமுடியாத வயிற்றுவலி. கனவில் குமரன் தோன்றினான். ''பிள்ளைத் தமிழ் எழுது வயிற்றுவலி காணாமல் போகும்'' என்று சொன்னபடியே பிள்ளைத்தமிழ் நமக்கு வந்தது. வயிற்று வலி அவரை விட்டு போனது.

"தாரகாசுரனை வதம் செய்தவனே! வலிப்பு, காசம், குஷ்டம், சுரம், மேகவெட்டை, குடல்புண், புற்றுநோய், பிசாசு மற்றும் மனப்பயம் எனும் நோய்களனைத்தும் பன்னீர் இலையில் வைத்துத் தரப்படும் உன் திருநீற்றைப் பார்த்த மாத்திரத்தில் பறந்தோடி மறைந்துவிடும்."

ஆதி சங்கரர், திருச்செந்தூரில் பாடிய சுப்ரமண்ய புஜங்கத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார். பார்த்த மாத்திரத்திலேயே நோய்களைப் பறக்கடிக்கும் என்று அவர் குறிப்பிடும் 'பத்ர பூதி' என்பது என்ன?

தாடகை எனும் பெண்ணை ராமபிரான் மூலமாக வதம் செய்த காரணத்தினால் தனக்கு ஏற்பட்ட குன்மம் முதலான நோய்கள் தீர, ராமபிரான் தன் கனவில் கூறியபடி, செந்திலாண்டவன் இலை விபூதியைத் தரித்துக் கொண்டு நோய்கள் நீங்கப் பெற்றார் விசுவாமித்திர மகரிஷி.

ஆறுமுறை ஆறுமுகம் என்று கூறி திருச்செந்தூர் பன்னீர் இல்லை திருநீற்றை இடுவது பற்றி அருணகிரியார் பாடுகிறார் கேளுங்கள்:

"ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் என்று பூதி (விபூதி) ஆகமணி மாதவர்கள் பாதமலர் சூடும் அடியார்கள் பதமே துணையதென்று..."

இனி 21வது சுப்ரமணிய புஜங்கம் தொடர்வோம்:


21. कृतान्तस्य दूतेषु चण्डेषु कोपाद्
दहच्छिन्द्धि भिन्द्धीति मां तर्जयत्सु ।
मयूरं समारुह्य मा भैरिति त्वं
पुरः शक्तिपाणिर्ममायाहि शीघ्रम् ॥२१॥

Krtaantasya Duutessu Cannddessu Kopaad
Dahac-Chinddhi Bhinddhi-Iti Maam Tarjayatsu |
Mayuuram Samaaruhya Maa Bhair-Iti Tvam
Purah Shakti-Paannir-Mama-[A]ayaa-Hi Shiighram ||21||

க்ருதாந்தஸ்ய தூதேஷH சண்டேஷகோபா
தஹச்சிந்தி பிந்தீதி மாம் தர்ஜயத்ஸு
மயூரம் ஸமாருஹுfய மாபைரிதி த்வம்
புரா சக்திபாணிர் மமாயாஹி சீக்ரம் (21)

''ஆஹா, வந்துவிட்டார்கள் யமதூதர்கள். பிடி அவனை, கொல், தீயில் எரி '' அவர்கள் சொல்வது கேட்கிறது. ஷண்முகா, அஞ்சேல் என உன் சக்தி வேலாயுதத்தோடு என்னை காக்க வா.

22 प्रणम्यासकृत्पादयोस्ते पतित्वा
प्रसाद्य प्रभो प्रार्थयेऽनेकवारम् ।
न वक्तुं क्षमोऽहं तदानीं कृपाब्धे
न कार्यान्तकाले मनागप्युपेक्षा ॥२२॥

Prannamyaa-Sakrt-Paadayos-Te Patitvaa
Prasaadya Prabho Praarthaye-Aneka-Vaaram |
Na Vaktum Kssamo-Aham Tadaaniim Krpa-Abdhe
Na Kaaryaanta-Kaale Manaag-Apy-Upekssaa ||22||

ப்ரணம்யா ஸக்ருத் பாதயோஸ்தே பதித்வா
ப்ரஸாத்ய ப்ரபோ ப்ரார்த்தயேஸனேக வாரம்
நவக்தும் க்ஷமோஹம் ததானீம் க்ருபாப்தே
நகார்யாந்தகாலே மனாகப்யுபேக்ஷa (22)

ஆம் எனக்கு வருஷங்கள் உருண்டோட உருண்டோட வயதும் முதிர்ச்சியும் வந்துவிடும். உன்னை நினைக்க கூட மனம் வேலை செய்யாது. ஆகவே தான் ஷண்முகா, இப்போதே உன் தாமரைத் திருவடிகளில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்குகிறேன். உன் அருள் வேண்டும். .ஆசி வேண்டும். என் பிரார்த்தனைகளை ஸ்தோத்திரங்களை ஏற்றுக் கொண்டு என் கடைசி நேரத்தில் எல்லோரும், எல்லாமும் கைவிட்ட போது உன் பன்னிரு கரங்களால் என்னை தூக்கி அருள்வாயாக.

23 सहस्राण्डभोक्ता त्वया शूरनामा
हतस्तारकः सिंहवक्त्रश्च दैत्यः ।
ममान्तर्हृदिस्थं मनःक्लेशमेकं
न हंसि प्रभो किं करोमि क्व यामि ॥२३॥

Sahasra-Anndda-Bhoktaa Tvayaa Shuura-Naamaa
Hatas-Taarakah Simhavaktrash-Ca Daityah |
Mama-Antar-Hrdistham Manah-Klesham-Ekam
Na Hamsi Prabho Kim Karomi Kva Yaami ||23||

ஸஹஸ்ராண்ட போக்தா த்வயா ஸூரநாமா
ஹதஸ்தாரக ஸிம்ஹ வக்த்ரஸ்ச தைத்ய
மமாந்தர் ஹ்ருதிஸ்தம் மனா க்லேசமேகம்
ந ஹம்ஸி ப்ரபோ கிம் கரோமி க்வ யாமி (23)

''எவ்வளவு சக்தி வாய்ந்தவன் சூரபத்மன். சர்வ லோகங்களிலும் ஆணை செலுத்தியவன். அவனோடு சேர்ந்த மற்ற பலமிக்க அசுரர்கள் தாரகாசுரன், சிங்கமுகன் ஆகியோர். அப்பாடி! இவ்வளவு பெரிய சூரர்களை வதம் செய்த நீ ஏன் இன்னும் மனக்கவலை என்கிற சூரன் என்னை வாட்டுகிறானே அவனை வதம் செய்ய வரவில்லை. நான் என்ன செய்வேன்? நீயன்றி யாருள்ளார் எனக்கு ஷண்முகா. வா மயில் மீது விரைந்தோடி வா'' என்கிறார் ஆதி சங்கரர்..

24 अहं सर्वदा दुःखभारावसन्नो
भवान्दीनबन्धुस्त्वदन्यं न याचे ।
भवद्भक्तिरोधं सदा क्ऌप्तबाधं
ममाधिं द्रुतं नाशयोमासुत त्वम् ॥२४॥

Aham Sarvadaa Duhkha-Bhaara-Avasanno
Bhavaan-Diina-Bandhus-Tvad-Anyam Na Yaace |
Bhavad-Bhakti-Rodham Sadaa Klpta-Baadham
Mama-[A]adhim Drutam Naashayo[a-U]maa-Suta Tvam ||24||

அஹம் ஸர்வதா துக்கபாரா வஸந்நோ
பவான் தீனபந்து ஸத்வதன்யம் நயாசே
பவத்பக்தி ரோதம் ஸதா க்லுப்த பாதம்
மமாதிம் த்ருதம் நாசயோமா ஸுதத்வம் (24)

உமா புத்ரா, என்னை சிந்தாகுலம் எனும் மனக்கவலை வாட்டுகிறதே. அநாதி ரக்ஷகன் என்று உன்னை தானே ஷண்முகா எல்லோரும் சொல்கிறார்கள். தீனபந்து, நீ தானே. என்னை காப்பாற்ற நான் யாரிடம் செல்வேன். உன்னைத்தவிர யார் எனக்கு தெரியும்? என் மனத்தை கவலைகளின்றி வெறுமையாக்கி அதில் உன் மீது பக்தியை நிரப்பிக்கொள்ள நீ தானே வழி செய்யவேண்டும். '' என்கிறார் இந்த ஸ்லோகத்தில் ஆதி சங்கரர்

25 अपस्मारकुष्टक्षयार्शः प्रमेह_
ज्वरोन्मादगुल्मादिरोगा महान्तः ।
पिशाचाश्च सर्वे भवत्पत्रभूतिं
विलोक्य क्षणात्तारकारे द्रवन्ते ॥२५॥

Apasmaara-Kusstta-Kssaya-Arshah Prameha_
Jvaro[a-U]nmaada-Gulma-Adi-Rogaa Mahaantah |
Pishaacaash-Ca Sarve Bhavat-Patra-Bhuutim
Vilokya Kssannaat-Taaraka-Are Dravante ||25||

அபஸ்மார குஷ்ட க்ஷயார்ச ப்ரமேஹ
ஜ்வரோன்மாத குல்மாதிரோஹான் மஹாந்த
பிசாசஸ்ச ஸர்வே பவத் பத்ர பூதிம்
விலோக்ய க்ஷணாத் தார காரே த்ரவந்தே (25)

இந்த ஸ்லோகத்தில் என்னென்ன வியாதிகள் செந்தூர் ஷண்முகன் பன்னீர் இளைத்திருநீறால் குணமாகும் என்று பட்டியலிடுகிறார் சங்கரர்.

'' ஹே ஷண்முகா, தாரகாசுர ஸம்ஹாரா, உன் திருநீற்றை கண்டதுமே , வலிப்பு, குஷ்டம், இருதய, நுரையீரல் நோய்கள், வயிற்று வலி, சரும கொடிய வியாதிகள், ஜுரங்கள், எல்லாவித நோய்களுமே ஓடிவிடுமே . பில்லி சூனிய ஏவல்கள் பறந்துவிடும்.உன் புகழ் பாடினால் சகல பேய் பைசாசங்கள் ஆட்டமும் காணாமல் போகுமே'' என்கிறார் ஆதி சங்கரர்.

26. दृशि स्कन्दमूर्तिः श्रुतौ स्कन्दकीर्तिः
मुखे मे पवित्रं सदा तच्चरित्रम् ।
करे तस्य कृत्यं वपुस्तस्य भृत्यं
गुहे सन्तु लीना ममाशेषभावाः ॥२६॥

Drshi Skanda-Muurtih Shrutau Skanda-Kiirtih
Mukhe Me Pavitram Sadaa Tac-Caritram |
Kare Tasya Krtyam Vapus-Tasya Bhrtyam
Guhe Santu Liinaa Mama-Ashessa-Bhaavaah ||26||

த்ருசி ஸ்கந்த மூர்த்தி ச்ருதௌ ஸ்கந்தகீர்த்தி
முகே மே பவித்ரம் ஸதா தச்சரித்ரம்
கரே தஸ்ய கருத்யம் வபுஸ்தஸ்ய ப்ருத்யம்
குஹே ஸந்து லீனா மமாசேஷ பாவா (26)

என் கண்ணை திறந்தாலும் மூடினாலும் ஷண்முகா உன் திருவுருவம் ஒன்றே என் முன் தோன்றுகிறது. கந்தா உன் புகழ் ஒன்றே என் செவியில் என்றென்றும் ஒலிக்கட்டும். வேறு எதுவும் நான் என் காதால் கேட்க தயாரில்லை. என் கரங்கள் உன்னை எப்போதும் வணங்கி கொண்டே இருக்கட்டும். என் நாவால் என்றும் எப்போதும் உன் புகழ் பேசும் ஸ்தோத்திரங்கள் தொடர்ந்து நான் பாடிக்கொண்டே இருக்கவேண்டும்.. என்னுடைய இந்த தேகம் உன் சேவைக்கும் உன் அடியார் தொண்டுக்கு என்றும் பிரயோஜனமாக இருக்கவேண்டும். என் எண்ணங்கள் உன்னைப்பற்றியே வட்டமிட வேண்டும்.''



ஆதி சங்கரரின் விருப்பம் நமது விருப்பமாகவும் இருக்க வேண்டாமா?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...