Thursday, January 24, 2019

CLEVER OLD MAN



கெட்டிக்கார கிழவன் - J.K. SIVAN

ஒரு மேல் நாட்டு கதை. சுவாரஸ்யமாக இருந்ததால் தமிழாக்கி தமிழ் மண் கலந்து அளிக்கிறேன்.

சுப்பாண்டிக்கு மீன் பிடிப்பது தொழில். பிடிக்கும். ஆயிற்று 80 வயது எனவே அதிகம் கடலுக்கு சென்று வலை வீசி மீன் பிடிக்க முடியவில்லை. எங்காவது படகில் சென்று ஒரு இடத்தில் நிறுத்தி அமைதியாக தூண்டில் போட்டு மீன் பிடித்தான். மீன் சிக்க வில்லை. சிந்தனை வீட்டை சுற்றி வந்தது. குப்பாயி போய் ஆறு வருஷங்கள். பிள்ளை வேலு, அவன் மனைவி பாக்கியம் எல்லோரும் அவர்கள் குடும்ப விஷயத்துக்கே அதிக நேரம் போதாமல் எவருக்கும் கிழவன் சுப்பாண்டியோடு பேச நேரவில்லை. கிழவன் தனக்கு தானே பேசிக்கொள்வான். பாடுவான். தூங்குவான்.

''அட இன்று மீன் பிடிக்க இவ்வளவு நேரமாகிறதே''
'' இதோ நான் இங்கிருக்கிறேன் என்னை பிடித்துக் கொள் '' என்று ஒரு குரல் கேட்டது. சுற்றி முற்றி பார்த்த அந்த உப்பங்கழியில் யாரும் இல்லை. யார் பேசினது?
''ஏதோ கற்பனையோ, கனவோ போல் இருக்கிறது என்று நினைத்தான். மீன் தூண்டில் அசைந்தது. ஏதோ சிக்கி இருக்கிறதே.
தண்ணீர் மேல் ஒரு தவளை தெரிந்தது.

நீயா தவளை என்னோடு பேசினது?
ஆமாம் நான் தான்.
அட நன்றாக பேசுகிறாயே.
சரி நேரம் வீணாக்காதே. என்னை பிடித்து ஒரு முத்தம் கொடுத்தாயானால் நான் ஒரு அழகிய பெண்ணாவேன். உனக்கு உறுதுணையாக இருப்பேன். எல்லோரும் உன்னைப் பார்த்து இவ்வளவு அழகான பெண்ணா இவனுக்கு என்று பொறாமைப் படுவார்கள்''

சிறிது நேரம் அந்த தவளையை உற்றுப் பார்த்து யோசித்தான் சுப்பாண்டி.
பிறகு அதை எடுத்து தனது மேல் துணியில் முடிந்து வைத்துக் கொண்டான்.

''ஏய் சுப்பாண்டி உனக்கு பைத்தியமா? நான் சொன்னது காதில் விழவில்லையா? என்னை எடுத்து ஒரு முத்தம் கொடு. உனக்கு ஒரு அழகிய பெண்ணாக நான் கிடைப்பேன்.''

சுப்பாண்டி பதில் அளித்தான்.

''இதோ பார் தவளையே , இந்த வயதில் எனக்கு புது தொந்தரவு எல்லாம் வேண்டாம். நீ பேசாமல் என்னோடு ஒரு பேசும் தவளையா
கவே இருந்து விடு என்பதற்காகவே உன்னை என் மேல் துண்டில் முடிந்து வைத்திருக்


கிறேன்.வா வீட்டுக்கு போய் நிறைய பேசலாம்''

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...