Saturday, January 12, 2019

MORAL STORY

 பெயர் மாற்றம்        J.K. SIVAN 
            

பக்தி சிலருக்கு  ஒரு தெய்வத்திடம் மட்டும்  இருக்கலாம்.  இஷ்ட தேவதை  என்று  அந்த  தெய்வத்தை மட்டும் வணங்குவதால் தவறில்லை.  மற்ற  தெய்வங்களை  தாழ்த்தியோ  இகழ்ந்தோ குறை சொல்வது, தூற்றுவது,  மிகப் பெரிய  தவறு.  

ஒரு  கிராமத்தில் ஒரு  மிராசுதார்  சிவ பக்தர்.  அவரிடம்  ஒரு  அருமையான   நம்பகமான பணியாள் .  அவனிடம் அவருக்குகொஞ்சம்  அதிருப்தி அவன் பெயரில்   மட்டும்  தான்.  அவனை எப்போதும்  ஏ ஆளு என்று தான் கூப்பிடுவார்.  அவனில்லாமல் ஒரு காரியமும் நடக்காது அவருக்கு.  

காரணம் தெரிந்துகொள்ள  அவர்களுக்குள் நடந்த சம்பாஷணையை நாம் ஒட்டு கேட்போம்:

''எலே உன் பேர்  என்னடா?
''பெருமாளுங்க''
''எதுக்குடா அந்த பேர்?
''எங்க சாமிங்க ''
''சரி  போ''

வெகுநாள்  அவருக்கு  உள்ளே  இது  உறுத்திக்கொண்டே  இருந்தது. எப்போது பார்த்தாலும் ''பெருமாளு  பெருமாளு;;  என்று  நொடிக்கொருதரம்  அவன்  பெயர் சொல்லிக்கூப்பிடுவது எனக்கு  சங்கடத்தை  அளிக்கிறதே  என்று  ஒரு நாள்  அவனைக் கூப்பிட்டு

''இந்தா பாரு,  நீயி  உன் பேரை  மாத்திக்கிடணும். புரியுதா?''
 ''புரியில்லீங்களே சாமி''
  ''இதோ பார்ரா,  உன் பேரை  பெருமாளு ன்னு  இல்லாம  வேற   பேர்  மாத்தி  வச்சுக்கோ  எங்கறேன்?''
  ''எதுக்கு  சாமி?''
   ''எனக்கு  அப்போ  உன்னை  இன்னும்  ரொம்ப  பிடிக்கும்  நிறைய  சம்பளம் கொடுக்கணும்னு  ஆசை.''
    ''ஊட்டிலே  கேக்கறேங்க.''
    ''கேக்கறதுன்ன,  மாத்திக்கிறேன்னு   சொல்லு.''

 பெருமாள் சாது. அப்பாவி.   தனது வீட்டில் பெயர் மாற்றிக்கொள்வது பற்றி கேட்டதற்கு   ''நமது  ஊரில்  கிராம  பூசாரி கிட்ட  போய்  சொல்லு''  என்று  சொன்னார்கள்.  பெருமாள்  ஊருக்கு போனான்.  பூசாரி  விஷயம்
கேட்டான்.

''சரி  உன் பேத்தை  மாத்த   நிறைய  செலவாகுமே.  ஊரிலே  சோறு  போடணும் அம்புட்டு பேருக்கும். அவங்க  முன்னாலே கோவில்லே  உனக்கு  பேர்  மாத்திடறேன். கோவிலுக்கு  நூறு  ரூவா. எனக்கு  இருநூறு ரூவா.  படையலுக்கு  ஊர்  சாப்பாட்டுக்கு  ஆயிரம்  ரூவா  கொண்டுவா. ஓடு''

எஜமான் கிட்ட  சொன்னதும்.  அவருக்கு  இது  ஒரு பெரிய  விஷயமாக  படலை.  பெருமாளு என்ற அவன் லபேர் மாறினால் போதும் என்பதற்காக  அவன் கேட்ட  பணம் கொடுத்தார்.  ஒருவாரம்  கழித்து  பெருமாள்  வந்தான்.
வெகு  ஆர்வமாக   ''என்னடா ஆளு,  பேர்  மாத்திட்டியா? ''
''ஆமாம் எஜமான்.''
'' என்னடா  பேர்"?''
''பெத்த  பெருமாள்''  அய்யா.''

எஜமான்  அசந்து போய்  உட்கார்ந்தார்.  ஒவ்வொருவரும்  தத்தம் மனதில்  எதிலும்  எந்த மனிதரிலும்  தன் விருப்பத்தையே காணும்  அன்பு தான்  பேரன்பு.  அன்பே கடவுள்,  அவருக்கு நாம் இடும் பெயர்கள் நாம் அவரை சுண்டி இழுக்கும் நமது விருப்பம். நமது ஆர்வம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...