Tuesday, January 19, 2021

SURDAS

   ஸூர்தாஸ்        J  K  SIVAN 


         5  ' ப்ருந்தாவனமும் நந்தகுமாரனும் .....
 
பிருந்தாவனத்திலிருந்து கண்ணன் புறப்படுகிறான்.  '' போகிறேன்''  மட்டும் தானா. போய் '' வருகிறேன்''  
இனி  கிடையாதோ?  இனி கண்ணன்  பிருந்தாவனத்துக்கு  திரும்பி வரமாட்டானோ?. மதுராவுக்கு பிரயாணம் துவங்கி விட்டான்.
  
ஒளியும் வெளிச்சமும் இல்லாமல் சூரியன் உண்டா?

கிருஷ்ணன் இல்லாத கோபியர்கள்  மனதில் மகிழ்ச்சி உண்டா?

கிருஷ்ணன் இல்லாத பிருந்தாவனத்தை நினைத்துக்  கூட பார்க்கமுடியாதே .

கண் என்று ஒன்று இருந்தால் அது கண்ணனை தேடாவிட்டால் பயனில்லை. கண் இல்லாவிட்டாலும் கண்ணனை உள்ளே நிறுத்தி பிடித்து வைத்துக்கொண்டு பாடுவதற்கு  சூர் தாஸ் என்கிற பக்தரால் மட்டுமே முடியும்.

காட்சி ஏதாவதைக் காண கண் ஏங்கினால் அந்த கண்ணனையே அது தேடும்.  கண் என்றால் நமக்கு இருப்பது போலா? ஆஹா,   செந்தாமரையின் அழகல்லவோ அவன் கண்களின் அழகு. முழு நிலவின் குளிர்ச்சி அல்லவோ அவன் கண் வீச்சில் நாம் பெறுவது.

அவனைக் காண, நெருங்க, அணைக்க இரவும் பகலும் துடிக்கிறார்கள் கோபியர்.

ஆஹா! என்ன அழகு அவன்!. ஆளோ கருப்பு. அதில் ரத்த சிவப்பில் நெற்றியில் சிந்தூர திலகம். கருப்பு கழுத்தில் மார்பில் நிறைய பளபளக்கும் வெண்ணிற முத்து மாலைகள்.

இந்தப் பயல் பிருந்தாவனத்தில் இருந்தால் அது ஸ்வர்க லோகம் அல்லவோ நமக்கு? . இத்தனை காலம் நம்மோடு இருந்து நம்மை மகிழ்வித்தவன் ஒரு தூசியாய், ஒரு புல்லாய் நம்மை மதித்து தூர எறிந்து விட்டு பிருந்தாவனத்தையே விட்டு பிரிந்து விட்டானே. நம் கழுத்தை சுற்றி அவன் இருக்கிக் கட்டிய கயிறு மட்டும் தான் இருக்கிறது. நம்மை ஆட்டுவித்தவன் செல்கிறானே. என்ன மனதில் நினைப்பு? . ஒருவர் மனதில் இருப்பதை  மற்றவர் அறியமுடியுமா?

கண்ணற்ற சூர்தாசர் என்ன சொல்கிறார் கடைசியில்

''அடே கிருஷ்ணா, நீ இல்லையேல், உன்னைக் காணாத கண்ணிருந்து என்ன பயன். உன்னைக் காணாவிட்டால் இந்த உடலில் உயிர் தான் இருந்து என்ன பிரயோசனம்? 

உள்ளே இருக்கும் சோகத்தைக்  காட்டிக்கொள்ளாமல் ஒருவரை ஒருவர் பார்த்து மேலுக்கு சிரித்தாலும் உள்ளே கண்ணனைக்  காணாத ஏக்கமும் துக்கமும் நிறைந்தவர்கள் அல்லவோ கோபியர்கள்.

இது தான் சூர்தாஸ் பாடல்:

Ankhiyan hari dashan ki pyasi
Hari darshan ki pyasi akhiyaan hari darshan ki pyasi
dekhyo chahe kamal nayan ko nis din rahat udaasi
(akhiyaan hari darshan ki pyasi)
kesar tilak motin ki maala vrindavana ke vaasi
neh lagaai tyag gayen trin sam daal gayen gal phansi
(akhiyan hari darshan ki ……)

kahoo ke mana ki ko jaanat logan ke man haasi
surdas prabhu tumhare daras bin leho karvat kashi ankhiyaan
hari darshan ki pyasi hari darshan ki……..
(ankhiyaan hari darshan ki pyasi hari darshan ki )


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...