Friday, January 15, 2021

GITANJALI

 

கீதாஞ்சலி -    தாகூர்        J K SIVAN

1  எங்குமே  ஆனந்தம்.

1. Thou hast made me endless, such is thy pleasure. This frail vessel thou emptiest again and again, and fillest it ever with fresh life. This little flute of a reed thou hast carried over hills and dales, and hast breathed through it melodies eternally new. At the immortal touch of thy hands my little heart loses its limits in joy and gives birth to utterance ineffable. Thy infinite gifts come to me only on these very small hands of mine. Ages pass, and still thou pourest, and still there is room to fill.

தாகூருக்கு கிருஷ்ணன் ஞாபகம் வந்திருக்கி றதோ? எப்படி அவன் குழலிசை கீதத்தை நினைவிலிறுத்தி ஆரம்பிக்கிறார்?கீதை  தந்தவனுக்கு அஞ்சலி தான் கீதாஞ்சலியோ?  யாராயிருந்தாலும்  எந்த பாஷை பேசினாலும் கிருஷ்ணனை மறந்து இயற்கையையோ தெய்வத்தையோ நினைக்க வழி உண்டா?
''பகவானே, எனக்குகடைசிகாலம் என்று ஒன்று இல்லை. நிரந்தரமாக்கி விட்டாய். அதில் உனக்கு எவ்வளவு சந்தோஷம். இந்த தேகம் எனும் மண்பாத்திரம் அடிக்கடி உடையும், காலியாகும். மறுபடியும் உருவெடுக்கும், காற்று நிரப்பும்.  பிராணன் காற்று தானே.   மீண்டும் புது வாழ்க்கை. !!
கிருஷ்ணா, நீஎப்படியப்பா, இந்த சாதாரண நாணல் மூங்கில் குழாயில்   உன் மூச்சுக்காற்றை செலுத்தி ஒரு தெய்வீக  ஜீவ நாதத்தைக்  கொடுத்து, காடு மலை, நதி பள்ளத்தாக்கு  என்று  ஒன்று விடாமல் எங்கும் உயிர்ப்பிக்கிறாய்.  உன் குழலொலி ஒவ்வொன்றும் உயிரோட்டம் நிறைந்த ஒரு புது நாதம்.  ஜீவ கானம். .எல்லை யற்ற நிரந்தர அமர  இன்னிசை.   உன் மூச்சுக் காற்று மட்டுமா?.
உன் தெய்வீகக் கரங்கள் தாங்கி விரல்கள் அசைந்து  உன் குழலின்  சாஸ்வத சங்கீதம் என் மேல் காற்றில் படும்போது  நான் எங்கே இருக்கிறேன் என்றே தெரியவில்லை!   என் நெஞ்சத்திற்கு அதை எடுத்துச்  சொல்லும் சக்தி இல்லை.  வார்த்தைகள் மொழிகள் மீறிய ஒரு எல்லையற்ற இன்பம்.  அதன் அர்த்தங்கள்   எத்தனை வேதத்திலும் அடக்க முடியாதது.
நீ பரோபகாரி, எவ்வளவு அதிசயதானமாக  இதை அளிக்கிறாய்.யுகங்கள் தான் மாறி மாறி வருமே தவிர உன் கருணைப் பரிசு தொடர்ந்து தான் அளித்துக் கொண்டிருக் கிறாய்.  பெறுபவன் எனக்கு சிறிய கைகள் தானே. எவ்வளவு கொள்ளும்?
காலம் காலமாக  இடைவெளியில்லாமல்  நீ  உன்  எல்லையற்ற கருணையை,  அருளை வாரி வழங்கி கொண்டு தான் வருகிறாய். இந்த பிரபஞ்சத்தில்  எங்கேயம், எல்லாமும்  அதால் நிரம்பிக் காண்கிறதே.  மேலும் மேலும் நீ  வழங்க வழங்க   அது அத்தனையும்  பெற  எப்படியும் கொஞ்சம் இடம் இங்கே காலியாகத்தான் இருந்து கொண்டிருக்கிறது . அதுவும் உன் கருணையே அல்லவா?
எங்குமே ஆனந்தம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...