Monday, January 18, 2021

GEETHANJALI

 

கீதாஞ்சலி   தாகூர்   -      J  K   SIVAN 


     4  உள்ளமெனும் கோவில்

 
4. Life of my life, I shall ever try to keep my body pure,
knowing that thy living touch is upon all my limbs.
I shall ever try to keep all untruths out from my thoughts,
knowing that thou art that truth which has kindled the light of reason in my mind.
I shall ever try to drive all evils away from my heart and keep my love in flower,
knowing that thou hast thy seat in the inmost shrine of my heart.
And it shall be my endeavour to reveal thee in my actions,
knowing it is thy power gives me strength to act.

''ஜானகி, இன்னிக்கு  சாயந்திரம்   ஆறுமணிக்கு  என்  ஆபீசர் நம் வீட்டுக்கு வருகிறார்.  ரவா கேசரி  பஜ்ஜி பகோடா  ஏதாவது பண்ணு '  என்று  சொல்லிக் கொண்டே  வீட்டுக்குள்  மேலே தொங்கும் ஒட்டடைகளை அடித்து,   கொடியில் தொங்கும்   துணிகளை எல்லாம் எடுத்து கண் காணாமல் எங்கோ ஒளித்து  வைத்து,  கண்ணில் பட்ட கண்டான் முண்டான் சாமான்களை எல்லாம் அள்ளி  உள்ளே எங்கோ  ஒரு  கட்டில் அடியிலேயோ,  பரணிலோ போட்டு,  தரையெல்லாம் பெருக்கி , மேலே  பேன் FAN   ரெக்கையை தூசி தட்டி,  துடைத்து,   நாற்காலி  சோபா, பெஞ்ச்  எல்லாம்  அழகாக நகர்த்தி அதன் மேல்  இருப்பதில் ஒரு நல்ல  கலர் கலரான   பெட்ஷீட் போர்வை போர்த்தி   வீட்டை  அழகு படுத்தி  ஆபிசருக்கு நமது வீடு, உபசாரம் பிடித்து  பாஸ் மார்க் வாங்க முயற்சி செயகிறோம்.  இது மனித  இயற்கை.   ஒரு  சாதாரண மனுஷன்  வந்து சில  நிமிஷங்கள் நம் வீட்டில் இருப்பதற்கே  இந்த தடபுடல்.   என்று சுத்தம் செய்யும்போது,  சர்வ வல்லமை  பொருந்திய, பரமாத்மா கிருஷ்ணனே நமது இதயத்தில் குடியேறப்போகிறான் என்றால்  நமது உடலை, உள்ளத்தை எவ்வளவு பரிசுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும்?   சதா சர்வகாலமும்  நினைத்து  மகிழ்ந்து போற்றும்  கிருஷ்ணன்  வரப்போகிறான், என்  இதயத்தில்  வந்து வசிக்கப்போகிறான் என்றால் எப்படி இருக்கும் ஏற்பாடுகள்?


ஹே . கிருஷ்ணா  என்  உயிரின் உயிரே,  என்  உடம்பு  தான் க்ஷேத்ரம் . அதில் குடியிருக்கும் நீ க்ஷேத்ரஞன்.  உன் ஆலய மான என்  உடலையும்  உள்ளத்தையும்  உனக்கேற்றபடி  பரிபூர்ண, பரிசுத்தமாக வைத்துக் கொள்வேன். ஆமாம் உன் விரல்  நுனிகள்  படும் அங்கமல்லவா இது.

என் எண்ணங்களில் உண்மை, நியாயம் நேர்மை   இல்லாதவற்றையெல்லாம்   ஒட்டு  மொத்த மாக மூட்டை கட்டி வெளியே எறிவேன். அதற்கெல்லாம் அங்கே இனி இட மில்லை

ஏனென்றால், நீ தான் என் உள்ளத்தில் பூரா  வியாபித்து  உறையும்  சத்யம், உண்மை, என்  மனதை முழுசாக  ஆட்கொண்டு  என்  புத்தியை,  அறிவை  அன்பின் சக்தியால் இயக்குபவன். என் மனத்தை செலுத்துபவன்.என்னை வழி நடத்துபவன்.

என் இதயத்தை  பட்டாக  துடைத்து  அதில்  இருந்த   தீயவை,  தகாதவை  வேண்டாதவை  எல்லாவற்றையும்  தேடிப்பிடித்து  அகற்றி  வெளியே  விரட்டுகிறேன்.   ஏன் என்றால், என்  உள்ளம், இதயம் மனம்  என்று அதை எப்படி சொன்னாலும் அது பூரா  உன்மேல்  எனக்கான  பக்தி  அன்பு மலர்களால்  அலங்கரித்து நிரப்புவேன் .   ஏன் எனக்கு அதில் இவ்வளவு கவனம்  தெரியுமா  கண்ணா? அது  தான்  நீ அமரும் ஆசனம். என்  இதய பீடம். உள்ளமெனும் கோவில். நீ இருக்கும்  கர்ப்ப கிரஹம்.

கிருஷ்ணா, நான் மேலே சொன்னதெல்லாம் வெறும் வார்த்தை இல்லை.  நீயே பார்ப்பாய். என் ஒவ்வொரு செயலிலும் எண்ணத்திலும் கிருஷ்ணா நீ தான்  வெளிப்படுவாய்.  நீயின்றி என்னிடம் வேறில்லை.

இது  என்னால் முடியும், காரணம் என்ன தெரியுமா,  எனக்கு அப்படி இருக்க  அந்த  விசேஷ  சக்தியை கொடுப் பவனே நீ தானே கிருஷ்ணா! நீயின்றி நான் ஏது? எனும்போது நான்  ''நீ''  யாக முயன்று   என்னை  உனக்கு அர்ப்பணிக்க வேண்டாமா?

                                 

 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...