Sunday, January 3, 2021

KARMA


 

கர்மா - வினையும் தினையும் J K SIVAN

பொதுவாக கர்மா என்பது நாம் செய்யும், செய்த, செய்யப்போகும் செயல் என்று புரிந்து கொள்ளவேண்டும்.
கர்மாக்களின் பெயர்கள்
நித்யகர்மா என்பது அன்றாடம் செய்வது.
நைமித்யம் என்பது ஏதோ ஒரு காலத்தில், அதன் நிமித்தமாக நடப்பது
காம்யம் என்பது எதையாவது விரும்பி அது நிறைவேற புரிவது.
எல்லோரும் நன்றாக இருக்கவேண்டும், நாடு சுபிக்ஷமாக இருக்கவேண்டும்..என்று குறிப்பிட்ட விருப்பமாக இல்லாமல் நமது அன்றாட கடன்களை விடாமல் செய்வது தான் நித்ய கர்மா நுஷ்டானம். சந்தியாவந்தனம், பூஜை போன் றவை. பாராயணம், தியானம் போன்றவை. இவற்றால் மனம் உடல் இரண்டும் சுத்தப்ப டுகிறது. நல்ல காரியங்களை செய்ய மனம் நினைக்கிறது. ஐம்புலன்கள் ஒத்துழைக்கிறது.


சந்திர, சூர்ய கிரஹணம், கிரஹங்களின் பீடா பரிஹாரம் போன்ற சில இயற்கைச் செயல்களுக்காக நாம் செய்யும் பரிஹாரம் நைமித்திக கர்மா. இது அந்த சந்தர்ப்பத்தில் தான் செய்யவேண்டி இருக்கிறது.

சுவர்க்கம் மோக்ஷம் போன்றவற்றை அடையவேண்டும், சுகம் பெறவேண்டும் என்று எதையோ மனதில் கொண்டு அது நிறைவேற நாம் செய்கிற காரியங்கள் காம்ய கர்மா

நைமித்திக கர்மா அந்தந்த சமயங்களில், கிரஹணம் குரு பெயர்ச்சி ஸ்ரார்த்த திதி போன்ற நிகழ்வுகளின் போது செய்வது.

காம்ய கர்மா நாம் எப்போதெல்லாம் விரும்பு கிறோமோ அப்போது எல்லாம் செய்வது

நித்ய கர்மா என்பது அன்றாடம் நாம் செய்ய வேண்டிய நமது கடமைகள். அதற்கு பலன் இல்லை. ஆனால் செய்யாவிட்டால் பாபம் வந்தடையும். நித்ய கர்மா என்பதற்கு பலன் ஒன்றும் கிடையாது. தினந்தோறும் குளிக்கி றோம், அழுக்கு போகிறது, சாப்பிடுவதால்
வயிறு நிரம்புகிறது. அது போல நித்யம் நாம் ஏதாவது செய்வது. மனசுக்கு தெளிவு (சித்த சுத்தி) மாத்திரமே பலன். பண்ணினால் மனத்தெளிவு, நித்யகர்மா பண்ணா விட்டால் மாபெரும் பாவம். ஆகவே விரும்பிய போது பண்ணுவதல்ல நித்யகர்மா.

இவ்வாறு பல காரியங்களை நாம் செய்வது ,மூன்று வகைப்படும். சஞ்சிதம், ஆகாமியம், பிராரப்தம். இது நன்றாக புரிந்து கொள்ள வேண் டிய சமாச்சாரம்.

இப்போது ஒரு மானிட பிறவி எடுத்திருக்கிறோம். இதில் சில வியாதிகளும், சில சுகங்களும், துன் பங்களும் இந்த சரீரத்தின் மூலம் அனுபவிக் கிறோம் அது தான் பிராரப்த கர்மா . நாம் இப்போது அனுபவிப்பது ப்ராரப்தம் என்ற கர்மா. நல்லது கெட்டது ரெண்டும் சேர்ந்தது.

இப்போது இந்த சரீரத்தின் மூலம் நான் செய்யும் நல்ல, கெட்ட காரியங்களுக்கும் பலன் உண்டே. அது வரப்போகும் காலத்தில், எதிர் காலத்தில், பலன் அளிக்குமே, அதை தான் ஆகாமிய கர்மா என்கிறோம்.

ஒன்றா இரண்டா, எத்தனை எத்தனையோ பிறவிகள் ் எடுத்து நாம் சேர்த்து வைத்த கர்மாவுக்கு பலன் உண்டு அல்லவா? இப்படி சேர்த்து வைத்த ஆகாமிய கார்யங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு பெரிய மூட்டையாகிவிட்டது. அந்த சேர்த்து வைத்த சமாச்சாரம் தான் சஞ்சித கர்மா.

அவ்வளவு கர்ம பலனையும் எப்படி ஒரே பிறவியில் அனுபவிக்க சாத்தியம்? வாழ்நாள் போதாதே. இன்ஸ்டால்மென்டில் ஒவ்வொரு பிறவியாக அனுபவிக்கும் சுக துக்கங்கள் தான் பிறந்ததிலிருந்து நாம் இப்போது அனுபவிக்கும் ப்ரராப்த கர்மா.

எப்போதோ ஏதோ செய்ததன் பலன் இந்த பிறவியில் அனுபவிப்பது ப்ராரப்தம்.

வீட்டில் நமது சாமான்கள் 100 டன் எடையில் இருக்கிறது. அதை இன்னொரு இடத்துக்கு எப்படி கொண்டு போக முடியும். நம்மால் தூக்க முடிந் தது 20 கிலோ எடை தான். தலைமேல் அதற்கு மேல் எடை சுமக்க முடியாது. இருபது இருபது கிலோவாக எத்தனை தரம் தூக்கிக் கொண்டு அலைய வேண்டும். அதற்கு மேல் தூக்க முடியாதே. அது தான் சஞ்சித கர்மாவை ஒவ்வொரு பிறவியிலும் அனுபவிக்கும் பிராரப்த கர்மா.
அந்த எடையை சீக்கிரம் சுமந்து கொண்டு வேகமாக நகர்வது தான் சீக்கிரமே மரணம் அடைந்து அடுத்த பிறவி எடுப்பது.

இப்போது செய்து கொண்டிருப்பதன் பலன்-- (பிற்காலத்தில் எப்போதோ இந்த பிறவியில் அல்ல ) -- வீட்டில் சேர்த்து கட்டி வைத்த மூட்டையில் சேர்ந்துவிடும். இப்போது லேசான பஞ்சு மிட்டாய் சேர்க் கிறோம். அது வீட்டில் உள்ளே இருக்கும் கனமான புளி மூட்டை யோடு எடையற்ற மூட்டையாக சேர்கிறது .புளிமூட்டை யின் எடை அதிகமாகவில்லை... மேலே மேலே புளி சேராமல் பஞ்சு மட்டும் சேர்ந்தால் மொத்தமாக சாமானை தூக்கிச் செல்ல முடியும்.

இருபது முப்பது கிலோவாக கொஞ்சம் கொஞ்ச மாக எடை குறைய கூறிய புளி மூட்டை ஒரு சமயத்தில் இல்லாமல் போய்விடும்..அது இருந்த இடத்தில் பஞ்சு மிட்டாய் பெருகிவிடும். சுலப மாக தூக்கிக் கொண்டு போனதும் எல்லா மூட்டைகளை சுமந்து சென்றாகிவிட்டது. அப்புறம் பழைய வீட்டுக்கு போய் தூக்கிக் கொண்டு வர சாமான் எதுவுமே இல்லை. வீடு காலி பண்ணியாகி விட்டதே.

கர்ம வினை தீர்ந்ததும் பிறவி எடுத்து அனுப விக்க ஒன்றும் இல்லையே . அது தான் மோக்ஷ நிலை. சித்தர்கள் மஹான்கள் அடையும் நிலை.
வரிசையாக ஒவ்வொரு பிறவியாக அந்த பலன்கள் பாட்டரியில் சார்ஜ் ஆவது போல நாம் அனுபவித்துக் கொண்டே வருவோம். ஒரு பிறவியில் எல்லாம் தீர்ந்து போனால் அடுத்த பிறவி கிடையாது. பிறவி தேவை இருக்காதே அனுபவிக்க. மூட்டை காலி ஆகி விட்டதே.
நல்ல எண்ணம், நல்ல செய்கைகள் மூலம் வரப்போகும் ப்ராரப்தத்தை சுகமாக ஆக்கிக் கொள்ளலாமே .

கடவுள் பக்தி, பெரியோர் ஆசிகள் மூலமாக சத் கர்மாக்கள் புரிந்து கொண்டே வந்தால் மூட்டை யின் எடை அளவு கொஞ்சம் கொஞ் சமாக சுமக்க முடியும் அளவுக்கு குறை யுமே. அதன் பலன் பின்னால் வரப்போகும் பிறவிகளில் அனுபவிக்கலாமே .

மழை ஜோ வென்று விடாமல் பெய்கிறது. மழையை நாம் கண்ட்ரோல் control பண்ண முடியாது. என்ன செய்கிறோம். மழையில் நனையாமல் வெளியே செல்ல தலைமுதல் கால் வரை மழைக் கோட்டு raincoat அணிகிறோம். மழை பெய்தாலும் நனையவில்லை.

நமது சுக துக்கங்களை குறைத்து நல்லபடியாக வாழ்ந்தோமானால் பிற்காலத்தில் ''சஞ்சித'' மழையிலிருந்து தப்ப வாய்ப்பு உண்டு.
இதனால் பழைய தீய செயல்கள் பலன் குறை யாது. அவை இன்னும் அதிக மாக மூட்டை யில் சேராமல் பார்த்துக் கொள்ளும். கர்ம பலனிலிருந்து யாரும் தப்பவே முடியாது.

பழசு தீர தீர புதுசு சேரும் அல்லவா. நல்லதாக புதுசு அமைந்தால் பின்னால் சுகம் தானே.
இந்த ஜென்மத்தில் பகவான் அருள் பரிபூரண மாக நிறைந்து விட்டால் இந்த நல்வினை, தீவினைப் பயன்கள் அடிபட்டு விடுகின்றன. ஞானமும், ஆனந்தமும் கிட்டிவிடும்.

ஒவ்வொருவரும் தமது நித்ய கடமைகளை விடாமல் செய்து முடித்து விட்டு இஷ்ட தெய்வத் தின்நாமத்தை மறக்காமல் நினைக்கவேண்டும், சொல்லவேண்டும். வீட்டில் அனைவரும் ஒன்று கூடி ஸ்லோகம், நாமாவளி சொல்லும் பழக்கம் அதனால் தான் பெரியோர்கள் முன்னோர்கள் செய்ய கற்பித்தார்கள். நாம் மறந்து விட்டோம். தினமும் ஒரு சில நிமிஷங்கள் இப்படி தியானம் அவசியம்.

எல்லோருடனும் பிரியமாக, சினேகமாக, இருக்க வேண்டும். நல்லவர் நட்பு பலன் தரும். இதைத் தான் சத் சங்கம் என்கிறோம். நல்ல காரியங் களை, எண்ணங்களை சதா கொண்டவன் நல்லவனாக இருக்கிறான்.. இதை தான் கீதை யில் நீ எதை நினைக்கிறாயோ அதாகி விடுகி றாய் என்பது. அது எவ்வளவு அவசியம் என்று இப்போது புரிகிறதா? புளிமூட்டை ஞாபகப் படுத்தும்.

''என் தலைவிதி ஸார்'' என்பது தப்பு. ஏதோ எங்கிருந்தோ வந்து நம்மை துன்பத்தில் ஆழ்த் துவது போல் நினைக்க கூடாது. நமது வயலில் நாம் விதைத்து அறுவடை செய்து கட்டி வைத்த நெல் மூட்டையையோ, புளி மூட்டையையோ , நாம் சுமக்கிறோம். இந்த பிறவியில் நல்ல ஆகாமியத்தை சேர்த்து வைப்போம். பின்னால் சுமக்க சுகமாக இருக்கும்.

வீட்டில் அடைத்து கிடக்கும் தூக்கிச் செல்ல
வேண்டிய பெரிய புளிமூட்டை தான் ஊழ்வினை என்பது. திருவள்ளுவர் அதன் எடையைப் பற்றி சொல்வது தான் ''ஊழிற் பெரு வலி யாவுள?''
தர்மம் செய்தால் கர்மம் தொலையும் என்பது. வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை விதைத்தவன் தினை அறுப்பான் புரிகிறதா?
ஏதோ எனக்கு தெரிந்தவரை விளக்கி இருக்கி றேன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...