Wednesday, January 20, 2021

MERCURY LINGAM


 சிவ மகிமை: J.K. SIVAN



மகாதேவனுக்கு, சிவனுக்கு, நடராஜன், நடேசன், சபாபதி, தாண்டவன் என்றெல்லாம் பேர் உண்டு.. ஆடல் வல்லான் அவன். நம்மைப்போல் தையா தக்கா ஆட்டம் இல்லை அது. சிவனின் ஆடலில் ஒரு ரகசியம் இருக்கிறது. இடது கையில் ஒரு டமருகம். ஆடி முடிக்கும்போது அதை 14 தடவை ஒலிக்கிறான்.

அதை மஹேஸ்வராணி சூத்ராணி -- ஸம்ஸ்க்ருதத்தின் ஆதார அக்ஷரங்கள் சப்தங்கள் என்பார்கள். எல்லா மொழிகளுக்கும் இதே ஆதார சப்தம். சமஸ்க்ரித மஹா பண்டிதன் பாணினி இதைத்தான் ''அஷ்ட த்யாயி''யில் சொல்கிறார்.

ஒரு குட்டிக் கதை. பாணினி பாடலி புத்ரத்தில் படித்துக்கொண்டிருந்த காலம். அவரில்லை இயற்கையாகவே கொஞ்சம் மந்த புத்தி, லாஸ்ட் பெஞ்ச் ஸ்டூ டென்ட் அவர். எனவே இமயமலைக்குச் சென்று தவம் செய்ய புறப்பட்டார். தவம் செய்யும்போது தான் பரமசிவனின் ஆனந்த நடனம் பார்க்கிறார். டமருகத்தின் ஒலி கேட்கிறது. ''அட என்ன சப்தம் இது'' ? ஒவ்வொருமுறை ஒலிக்கும்போதும் எண்ணுகிறார். 14 முறை அது ஒலித்ததை கேட்டவர் பாடலிபுத்ரம் திரும்புகிறார். பின்னால் புகழ் பெற்ற ஸம்ஸ்க்ரித இலக்கண மேதையாகிறார். இந்த ''மஹேஸ்வராணி சூத்ராணி'' யை தனது அஷ்டாத்யாயியில் இலக்கண விதிகளுக்கு குறுக்கு வழியாக அளிக்கிறார்.

முதலாவது சூத்ரம் ''அ '' என்கிற ஒலி யில் ( अ ) அக்ஷரத்தில் ஆரம்பித்து கடைசி அக்ஷரம் '' லு'' ( ल् ), எனவே ''அலு '' ( अल् ) வரை சப்தம் ஒலிக்கும். எல்லாவற்றிற்குமே இந்த '' அலு'' தான் ஆணி வேர். இங்கிலீஷில் ''ஆல்'' பபெட்'' Alphabet எனும் வார்த்தையில் '' அல் '' வந்துவிட்டதே. ஆடல்வல்லானின் திரு நடம் தான் சகலத்திற்கும் ஆதாரம். சிவபெருமானை லிங்கமாக வழிபடுகிறோம். லிங்கம் என்பது அருவத்துக்கு நாம் கொடுத்த உருவம். ஒரு வடிவம். லிங்கத்தின் பீடம் பராசக்தி. ஸ்வயம்புவாக இருக்கும் பல லிங்கங்கள் சிவனாக கோவிலில் பூஜிக்கப் படுகிறது. லிங்கம் என்பது 12 வஸ்துக்களின் கலவை. மணல், அரிசி, சாதம், களிமண், பசுஞ்சாணம், வெண்ணை, ருத்ராக்ஷம், சாம்பல், சந்தனக்கட்டை, தர்பை, மாலை, பாகு என்பவை அவை என்று சிவபுராணம் உரைக்கிறது. லிங்கம் ஒரு ஒளிக்கற்றை, பிழம்பு, அடி முடி காண முடியாதது. நம் உடலின் உள்ளே இருக்கும் ஜீவன் தான் சிவன்.

குண்டலினி என்னும் சக்தி நாண் , மூன்றரை சுற்றாக அதோடு பிணைந்திருக்கிறது. இதை உணர்த்தவே லிங்கத்திற்கு மூன்று சுற்று நாக ஆபரணம் அணிவிக்கிறோம். இதன் தத்வம், பரமாத்மா சிவன், சக்தி நாகமாகிய குண்டலினி.

இதிலிருந்து தான் எவ்வாறு மூல பிரக்ரிதி, ஏனைய விக்ரிதிக்களை ஆகர்ஷிக்கிறது என்பது புலப்படும். உலகத்தின் செயல் பாடுகள் புரியும். ஆகவே உருவமற்ற சிவன், உருவமற்ற அசைவற்ற அண்ட பகிரண் டத்தைக் குறிக்கிறது. சக்தியோடு சேர்ந்த போது விளையும் அசைவு சக்தியால் பிரபஞ் சத்தில் ஜீவன் உருவாகிறது. சிவன் தான் ப்ரகத் என்றும் புருஷன் என்றும் ஆணாக அறியப்படுகிறது. சக்தி தான் பார்க்கா என்று பெண்ணாக, பிரக்ரிதியாக உணரப்படுகிறது. பிரபஞ்சத்தில் ஆக்கல் இவ்வாறு உருவாகிறது. ஆவுடையார் சக்தி தான் பிரக்ரிதி, லிங்கம் தான் புருஷன். இவ்வாறு தான் பல கோடி ஜன்மாக்கள் திரும்ப திரும்ப தோன்றி மறைகிறது. ஜீவன் பிறக்கிறது . மாயை என்னும் பிரக்ரிதியில் மூழ்கி மறைந்து பின்னும் தோன்றுகிறது. இது தான் பிரபஞ்ச ரகசியம். நமது உடலில் 5 கலைகள் தான் உள்ளன. பகவான் ஸ்ரீ கிருஷ்ணன், சிவன், போன் றோரிடம் 16 கலைகள் உள்ளன என்பதாலேயே அவர்கள் போற்றத்தக்கவர்கள். பதினாறு மட்டுமல்ல இன்னும் எத்தனையோ கூட. ''நிஷ்களா'' என்று. அதை விளக்கப் போவதில்லை. அதனால் தான் ஸ்தோத் ரங்கள் புகழ்கின்றன. சிவலிங்கம் அப்படிப் பெருமை வாய்ந்தது. ஞாபகம் இருக்கிறதா? யார் பெரியவர் என்ற போட்டியில் விஷ்ணுவும் பிரம்மாவும் மோத இடையில் ஒரு ஒளிப்பிழம்பு ஆகாசத்திற்கும் பாதாளத்திற்கும் பரவி நிற்க. இதன் முடியும் அடியும் யார் கண்டவர்களோ அவர்களே பெரியவர் என்று சிவன் ஸ்தம்பமாக நிற்க (ஸ்தாணுமாலயன்) சிவனின் பெருமையை உணர்ந்த இருவரும் பிணக்கு தீர்ந்தனர் என்று ஒரு புராண சம்பவம்
.
கலைகளுடன் கூடிய உரு ''சகல'', ஒன்றுமே இல்லாத ஒன்று '' நிஷ்கலா'', ரெண்டுமே நான், இந்த ஒளிப்பிழம்பும் நானே என்ற சிவன் 16 கலைகளுடன் தன்னை ''சகல'' னாகவும் ஒன்றுமே அறிய ஒண்ணா நிஷ்கலாவாக உள்ளபோது பிரமம் என்றும் அறியப்படுபவன் என்று உணர்த்துகிறார். ''பிரம்மம்'' அளவற்றது. அளவிடமுடியாதது '' ப்ரிஹத்'' அதாலே தான் சிவனை '' பிருஹத் ஈஸ்வரன்'' ப்ரஹதீச்வரன் '' என்று வணங் குகிறோம். சிவலிங்கம் அம்மையப்ப தத்வத்தை உணர்த்துகிறது. அதில் அசலம், சலம், எனும் பிரபஞ்ச சக்தி ரகசியம் தெரிகிறது. சகல உயிர்களும் தோன்றக் காரணமாக இருப்பதால் தான் சிவனும் சக்தியும் உலகத்துக்கே அம்மா அப்பா. அம்மையப்பன். தாயுமானவன்.

பாண லிங்கம் கோழி முட்டை வடிவம் எதற்காக என்றால் ஈஸ்வரனுக்கு முடிவோ ஆரம்பமோ எதுவும் இல்லை என விளக்கு வதற்காக.

லிங்கோற்பவர் என்ற லிங்கம், அருவத்தின் உரு என கொள்ளளலாம். சிவராத்ரியில் நள்ளிரவில் தோன்றிய உரு. எனவே தான் சிவரத்த்ரியன்று நள்ளிரவு வரை பூஜைகள், வழிபாடுகள். லிங்கோற்பவரை முக்ய சிவன் கோவில்களில் மூல விக்ரஹத்தின் நேராக பின்னால் வெளி பிரகாரத்தில் காணலாம். சிவலிங்கத்தின் அடி பாகம் பிரம்மபாகம், பிரம்ம பீடம் என்ற பெயரில் பிரம்மனைக் குறிக்கும். அதற்கு மேல் உள்ள நடு பாகம் எட்டு பக்கம் கொண்ட விஷ்ணு பாகம், விஷ்ணு பீடம் என்று காக்கும் கடவுள் விஷ்ணுவைக் குறிக்கும். இவை இரண்டுமே சிவலிங்கத்தின் தாங்கி நிற்கின்ற பாகம். இவற்றின் மேலே காணப்படும் உருளை பாகம் தான் ருத்ர பாகம். சிவ பீடம் எனப் படும். இதற்கு பூஜா பாகம் என்றும் பெயர் உண்டு. இதைத் தான் முக்யமாக வழிப டுகிறோம். இந்தமேல் பாகம் அக்னி பிழம் பாகவும் ஏற்றுக் கொள்ளப்படுவதால் சிவனை அழித்தலைக் கையிலெடுத்த சம்ஹார மூர்த்தி என்கிறோம். இந்தியாவில் 12 அதி முக்ய ஜோதி லிங்கங்கள் பரவி இருக்கின்றன. கேதார்நாத், காசி விஸ்வ நாத், சோம்நாத், வைத்யநாத், ராம்நாத், க்ரிஷ்நேச்வர்(ஒளரங்காபாத்) , பீமசங்கரர், மஹாகாளர் , மல்லிகார்ஜுனர் , அமலேஸ் வரர், நாகேஸ்வரர், த்ரையம்பகேஸ்வரர், என்று அவருக்குப் பெயர்கள். பஞ்ச பூதங் களில் சிவன் விரைவி நிற்பதை, காலஹஸ்தி, ஜம்புகேஸ்வரம், அருணாசலம், காஞ்சி, சிதம்பரம், ஆகிய லிங்கங்களில் காளஹஸ் தீஸ்வரர், ஜம்புகேஸ்வரர், அருணாசலேஸ் வரர், ஏகாம்பரநாதர், நடராஜர் என்றும், தீருவிடமருதூரில் மகாலிங்கமாகவும் வணங்குகிறோம். சில கோவில்களில் பாதரச லிங்கம் காணலாம். இவை சக்தி வாய்ந்தவை. 'பராத்பரா'' என்ற பெயரில் ''பராத்'' பாத ரசத்தைக் குறிக்கும் சொல். சிவ தாது என்றும்வடமொழியில் அதற்குப் பெயர். பாதரச லிங்கங்கள் தெய்வீக சக்தி கொண் டவை. இம்மாதிரி பாதரச லிங்கங்களை வழிபட்டு பெறுகிற பலன், நூற்றுக் கணக்கான அஸ்வமேத யாகங்கள் செய்த பலனுக்கு சமம். இன்னொன்றும் சொல்லலாம். இந்த சிவலிங்க பூஜையின் பலனுக்கு முன்பு, பல லக்ஷம் பசுக்களை கோ தானமாகக் கொடுத்த புண்யம் கூட ஈடாகாது.
எந்த இல்லத்தில் பாதரச சிவலிங்கம் பூஜிக்கப்படுகிறதோ, அங்கு சகல சம்பத் துகளும் தானே கூடும். எடுத்த காரியம் யாவிலும் வெற்றி. சிவனே அந்த வீட்டில் ஒருவராக இருக்கிறாரே. வாஸ்து குறைபாடுகள் எதுவும் நெருங்காது.
பிரதி திங்கள் அன்று பாதரச சிவலிங் கத்திற்கு பூஜை செய்து வந்தால் மந்திர தந்திர தீவினைகள் எதுவும் அந்த வீட்டையே அணுகாது. லட்சோப லட்சம் சிவலிங் கங்களுக்கு செய்த பூஜா பலன் ஒரு பாதரச சிவலிங்கத்திற்கு செய்த பூஜையின் பலனுக்கு சமானமாகும் என்று சிவ புராணம் சொல்கிறது. அந்த லிங்கத்தைத் தொட்டாலே மோக்ஷம். கோயம்பத்தூரில் ஈஷா நிறுவனத் தின் சிவன் கோயில் குளத்தில் பாதரச லிங்கம். தொடுவதற்கு காசு கொடுக்க வேண்டும். சிவனைக் கட்டிப்பிடித்து தொட்டேன். மனசுக்கு சந்தோஷமாக இருந்தது. இன்னொரு விஷயம். சிவலிங்கத்தின் மீது குளிர்ந்த ஜல தாரை எதற்கு என்றால், சிவனின் ஜடாமுடி மீது கங்கை ஆகாசத்திலிருந்து இறங்கியதை குறிக்கிறது. சிவ வழிபாட்டில் ஹோமத்தில் இடும் நெய், நம்மையே அந்த சர்வ சக்திமான் சிவனுக்கு அர்ப்பணிப்பது ஆகும். இன்னும் எவ்வளவோ கூட சொல்ல லாம். இடம் போதாது.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...