Saturday, January 16, 2021

SUR DAS

 ஸூர்தாஸ் J K SIVAN

3. ''வெண்ணையை நான் பார்க்கவே இல்லை''
''டேய் கிருஷ்ணா இங்கே வா. ?''
''.............................................''
''எங்கேடா இருக்கே, கூப்பிடறேனே காதில் விழலை. வா இங்கே உடனே.''
''.................................'
''உன்னை விட்டேனா பார்?''
யசோதை ஒளிந்து கொண்டிருக்கும் கண்ணனை பிடித்து விட்டாள் . தரதர வென்று கூடத்துக்கு வெளிச்சத்தில் இழுத்துக் கொண்டு வருகிறாள்.
''எங்கே இப்போ சொல்லு ? வெண்ணை எடுத்து திருட்டுத்தனமாக தின்றாயா?''
''அம்மா அம்மா, நீ என் ஆசை அம்மா இல்லை நீ. நான் பொய் சொல்வேனா? நான் வெண்ணையை தொடவே இல்லை. அப்புறம் தானே சாப்பிடமுடியும்? நீ சொன்ன மாதிறியே தான் நான் செய்தேன். பொழுது விடிந்து எழுந்தேன். பசுக்களை கட்டி அணைச்சுண்டேன். அதுகளோடு மதுவனம் போனேன். அங்கே அதெல்லாம் மேயும் போது மரத்தடியில் உட்கார்ந்து இடுப்பிலே இருந்த புல்லாங்குழலை எடுத்து ஊதினேன். பொழுது போச்சு. அந்தப் பக்கமெல்லாம் சுத்தினேன். சாயந்திரம் ஆனதும் பசுக்களை அழைத்துக்கொண்டு நேரே இங்கே வந்துட்டேன்..இப்போ சொல்லு? நான் எப்போ வெண்ணை எடுத்து தின்பதற்கு நேரம்? நீயே சொல்லு? நான் வெண்ணையை மேலே ஏறி எங்கேயோ எடுத்தேன் என்கிறாயே . நான் என்ன உயரமானவனா? எப்படி எனக்கு மேலே வைத்திருக்கும் வெண்ணைப் பானை எட்டும்? இந்த கன்னுக்குட்டிகள் எல்லாம் அம்மா கிட்டே பால் குடிக்கிறதில்லையா. வாய் நிறைய வெள்ளை நுரையோடு என்னை வாயிலே முகத்திலே, ,உதடுலே எல்லாம் ஆசையாக நக்கும். அதனாலே என் மேலே பால் வாசனை. அது என் தப்பா?'' கிருஷ்ணன் வக்கீல் போல வாதாடினான் ..
''அம்மா இந்தா, என்கிட்டே இருக்கிற கொம்பு கம்பளி எல்லாம். போதும் இது. இப்போ தான் தெரிகிறது நீ என் அம்மா இல்லை என்று ? அதனால் தான் என் நண்பர்கள் இல்லாததும் பொல்லாததும் என்னைப்பற்றி சொல்வதை நம்புகிறாய். நீ அம்மா இல்லை .வேறே யாரோ?''
''ஐயோ, என் கண்மணி கிருஷ்ணா அப்படி எல்லாம் பேசாதேடா''. கிருஷ்ணனின் வாயை பொத்துகிறாள் யசோதா. கண்களில் நீர் துளிர்க்கிறது.
''என் கண்ணப்பா, நீ நல்லவன். உண்மை தான் சொல்கிறாய். நீ வெண்ணை எடுத்து தின்னவில்லை . ஆமாம் நீ வெண்ணையை தொடவே இல்லை ஒப்புக்கொள்கிறேன்.....'' என்கிறாள் யசோதை.
''அம்மா அம்மா இப்போ உண்மையை சொல்றேன். நான் தான் வெண்ணையை எடுத்துத் தின்றவன் '' என்று சிரிக்கிறான் கிருஷ்ணன்.
கண்ணில்லாத சூர்தாஸ் எப்படி நமது கண் முன்னால் மேலே சொன்ன காட்சியை கொண்டு நிறுத்துகிறார் பார்த்தீர்களா? கண் எதற்கு? அது டிவி பார்ப்பதற்கும் பத்திரிகை படிப்பதற்கும் தேவையானவர்களுக்கு உபயோகப்படட்டும் . மனக்கண் தான் வேணும் எனக்கு.
o maiyyā morī, maiń nahiń mākhan khāyo
bhor bhayo gaiyana ke pāche
(tune) madhubana mohi paṭhāyo
cāra prahara vaḿśī vaṭa bhaṭakyo
sāñjha paḍe ghara āyo
(maiyyā, maiń kab mākhan khāyo)
maiń bālaka vahi yan ko choṭo
yeh chīko vidhī pāyo
gvāla bāla sab bair paḍe haiń
bar-bas mukha lapaṭāyo
yeh le apani lakuṭa kamarīya
bahuta hī nāca nacāyo
jiye tere kachu bheda upaj hai
jāni parāyo jāñyo
sūra dāsa tab hasī yaśodā
le ura kaṇṭha lagāyo
(naina nīra bharī āyo)
(tai nahin mākhan khāyo)
Image may contain: 2 people
Banu Srinivas and Hari Aiyer

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...