Monday, January 18, 2021

PASSING OF ARTHUR


 A.L.TENNYSON  -  Morte d'Arthur         -  J K SIVAN  



          ''நான் போகிறேண்டா நண்பா...!


டென்னிஸனை எனக்கு பிடிக்கப்  பண்ணினவர் ஸ்ரீ T.N . சுந்தரம் ஹெட்மாஸ்டர். தி.நகர் உயர்நிலைப்பள்ளி. டென்னிசன் எப்போது வாழ்ந்தாலும் என்னிடம் 1955ல் வந்தவன் இன்னும் மனதில் குடியிருக்கிறான்.

மஹா பாரத யுத்தம் முடிந்து விட்டது. மிச்சம் இருந்தது உயிரற்ற உடல்களும், ரத்த வெள்ளமும் அடையாளம் காணமுடியாத மனித மிருக பிணங்களும் தான். உற்றார் உறவினர், உடன் பிறந்தோர், சுற்றம் நண்பர்கள், எதிரிகள் அனைவரும் கௌரவ சேனையோடு   மறைந்து விட்டார்கள். தனிமையில் நிற்கிறான் அர்ஜுனன்.
குருக்ஷேத்ரத்தில்  என்று நினைத்துக் கொள்வோம்.

இது போன்ற நிலையில் ஒரு வெள்ளைக்கார ராஜா தான் ஆர்தர். மகா வீரன். அவனுக்கு இறைவன் அருளால் ஆற்றில் ஒரு மஹா சக்தி வாள் (EXCALIBRE ) கிடைத்து (அர்ஜுனனின்
 காண்டீவம் போல) அதனால் எவரும் வெல்ல முடியாத உயரத்தில் இருந்தவன். கூட இருந்த அவன் வளர்த்த அவனை நேசித்த அவனுக்கு பிடித்த, வட்ட மேஜை வீரர்கள் யாருமில்லை. தனது முடிவு ஒன்று தான் பாக்கி என அறிந்து கொண்டான். எஞ்சியவன் ஒரே ஒரு வீரன் பெடிவியர் மட்டும் ஒரு நாள் இரவு ஆர்தரைக் காண அவன் கூடாரத்திற்குள்  வருகிறான். 
அதற்குள் தான் ஆர்தர் சோகமாக படுத்திருக் கிறான். உள்ளே நுழைந்து தனது தலைவன் ராஜா ஆர்தரை கட்டி அணைத்து ஆறுதல் சொல்கிறான் பெடிவியர். ஆர்தரும்  பெடிவியரும் பேசுவதை டென்னிசன் நமக்கு சொல்கிறார்:

''பகவானே, நான் உன்னை நக்ஷத்திர கூட்டத்தில் கண்டேன் , கண்ணுக்கெட்டிய தூரம் பூத்து குலுங்கிய மலர்த்தோட்டத்தில் ஒரு மலராக கண்டேன், மனிதர்கள் விஷயத்தில் மட்டும் ஏனோ உனக்கு பாரபக்ஷம். உனக்கு பதிலாக வேறு யாரோ இந்த உலகத்தை படைத்து விட்டார்களோ? பின் எதற்காக என்னை கை விட்டுவிட்டாய்? என் மரணத்தில் நீ என்னை மறக்கலாம், நான் போகிறேன், ஆனால் நான் இறவாதவன். ஞாபகம் வைத்துக்கொள்.''

பெடிவியர் : '' ராஜா, மனம் தளராதீர். எதிரிகள் கூட உங்கள் வீரத்தை ஒரு அணுவளவும் குறை சொன்ன தில்லை. மதிக்கிறார்கள். மீண்டும் எழுந்து முழு மூச்சோடு போராடுங்கள். வெற்றி நமதே''

ஆர்தர்: "நண்பா, எதிரிகளை வெல்வது சுலபம். கூட இருந்தோரை வெல்வது வேறு. அவர்களுடன் போரிடுவது என்னோடு நானே போரிடுவது மாதிரி. நான் அவர்களை வெட்டி வீழ்த்துவது என்னை நானே கொல்வது மாதிரி.  விதிவழியே எல்லோரும் செல்லட்டும். வரும் சோதனைகளை சந்திக்கட்டும்.

உனக்கு லியோநெஸ் (LYONNES ) போர்க்களம் நினைவிருக்கிறதா? எண்ணற்றவீரர்கள் இரு பக்கமும் கூடினார்கள், அப்போது அதிக குளிர் காலம். எங்கும் பனி மூட்டம். எதிரிலிருப்பவன் யார் என்றே தெரியாத நிலை. சொந்த பந்தத் தையே நண்பர்களையே எதிரியாக வீழ்த்து கிறோம். பேய்த்தனமான யுத்தம். நான் என் வாளால் அனைவரையும் கொல்கிறேன். எல்லாம் முடிந்தது. முடிவில் நீயும் நானுமே. இது தான் வெற்றியா. நான் ஒரு வெற்றி வீரனா?

எங்கோ ஒரு எதிரி மொட்ரேட் (MODRED ) திப்பித்துவிட ஆர்தர் அவனைத் தேடிச் சென்று அவனோடு ஆர்தர் மோதி அவனைக்கொல்லும் போது தான் அவனால் ஆர்தர் படுகாயம் அடைகிறான். இப்போது கூடாரத்தில் அரை உயிரோடு கிடக்கிறான்.

பெடிவியர் ஆர்தரை தூக்கிச் சென்று சற்று தூரத்தில் இருந்த ஒரு தேவாலயத்தில் சிகிச்சை அளிக்கிறான். '' என் நேரம் வந்து விட்டது'' என்று அப்போது தான் ஆர்தர் மேலே சொல்லியபடி வருந்துகிறான்.

''இந்தாடா பெடிவியர் , இந்தா, என் வீர வாள் (excalibre ). இதை அதோ அந்த ஏரியில் உன்னால் முடிந்த அளவு தூரத்தில் வீசி எறிந்துவிட்டு வா''.
பெடிவியருக்கு அருமையான வீரவாளை எறிய மனமில்லை. ரெண்டு தடவை எறிந்ததாக பொய் சொல்கிறான். ''பொய் சொல்லாதே, போய்  சொன்னபடி வாளை  வீசி  எறி ''  என் கடைசி கட்டளை இது.. உடனே அதை தூர ஏரியில் எறிந்துவிட்டு வா ' .

பெடிவியர் அந்த வீர வாளை ஏரியில் எறிந்த அடுத்த கணமே ஒரு தெய்வீகக்  கை மேலெழும்பி அதைப் பெற்றுக் கொள்கிறது.என்ன ஆச்சர்யம்!

''ஆர்தர், என்ன ஆச்சர்யம்.. உன் வாளை ஏரியில் எறிந்தபோது வெள்ளை உடையணிந்த ஏதோ ஒரு கை நீரிலிருந்து மேலே எழும்பி, அந்த வாளை மூன்று முறை ஆகாசத்தில் சுழற்றி விட்டு பெற்றுக்கொண்டது.''

''நன்றி நண்பா. இப்போது தான் நீ உண்மையைச்  சொல்கிறாய். சரி. என்னை மெதுவாக அந்த ஏரியின் கரைக்கு தூக்கி செல்.''

ஏரிக்கரையில் கருப்பு படகு ஒன்று காத்திருக் கிறது. பெடிவியர் ஆர்தரை அந்த படகில் விடுகிறான். அதில் மூன்று கருப்பு உடை, தங்க கிரீடம் அணிந்த ராணிகள். ஆர்தரை தூக்கி மடியில் வைத்துக்கொண்டு, அவன் ரத்த காயங்களைத் துடைக்கிறார்கள். அவன் மேல் அவர்கள் கண்ணீர் மழையாகப் பொழிகிறது.

''ஐயோ,  என் தலைவா. ஆர்தர், என்னை விட்டு செல்கிறாயே, இனி தனிமையாக நான் என்ன செய்வேன். எனக்கு யார் இருக்கிறார்கள். என் தெய்வமே. என் கதி என்ன?? அலறுகிறான் பெடிவியர்.

ஆர்தர் மெல்ல பேசுகிறான். இது தான் அமர ஆங்கில கவி ஆல்ப்ரெட் லார்ட் டென்னிசனின் அற்புத படைப்பு

"பழையன கழிவதும் புதியன புகுவதும் காலத் தின் கட்டுப்பாடு. கடவுளின் சித்தம். ஒரே சட்டம் என்று என்றும் இருந்தால் அது நாளடை வில் தீமையை, கெடுதலை, விளைவி க்கும். சட்டம் காலத்திற்கேற்ப மாறவேண்டும். மனதை தைரியப்படுத்திக் கொள் நண்பா. என்னைப்பார். நான் வாழ்ந்தாகிவிட்டது. எனக்கு ஒரு குறை யுமில்லை. இனி என் முகத்தை யாரும் பார்க்கப் போவதில்லை. என் ஆத்மாவை எண்ணி பிரார்த் தனை பண்ணு . அது நம்மை இணைக்கும். மனம் கனிந்த பிரார்த்தனையால் ஆகாதது ஒன்று மில்லை. இந்த உலகம் காணும் கனவுகளை விட அது சிறந்தது. வற்றாத நீர் ச்சுனையாக இடைவிடாது இரவும் பகலும் என் ஆத்மாவுக்காக தியானம் செய். நம் உடலில் சிந்திக்க மூளையைக் கொடுத்த ஆண்டவன் அரிய பொக்கிஷம் அல்லவோ அதை தந்திருக்கிறான். மனமார இரு கரம் தூக்கி தனக்கும் பிறர்க்கும் நன்மை சேர பிரார்த்திக்காதவன் மிருகங்களில் ஒன்று. இந்த பூமி இறைவனின் காலோடு சேர்த்து ஒரு தங்க சங்கிலியால் பிணைக்கப்பட் டிருக் கிறது என்று உணர்ந்து கொள். நான் போகிறேன் நண்பா.''

கண்ணுக்கெட்டாத ஒரு தூரத்தில் இருக்கும் இடத்துக்கு. அங்கு மழையோ, வெயிலோ, பனியோ இல்லை. கடுங்காற்றும் குளிரும் இல்லை. மென்மையான பூந்தோட்டங்கள், வாசமிகு நறுமண மலர்கள். எங்கும் பசுமை. இவை என் உடல் மனக் காயங்களை ஆற்றும்.''
ஆர்தர் படகில் போகிறான். வெகுதூரம் அந்த படகையே ஒரு முற்றுப்புள்ளியாக மறையும் வரை பெடிவியர் பார்க்கிறான்.

''ஆஹா எவ்வளவு பெரிய மஹா வீரன். ராஜாதி ராஜன் ஆர்தர், என் அரசன் சென்றுவிட்டான். அதே புகழுடன் வீரத்துடன் என்றோ ஒரு நாள் திரும்பி வருவான்

இனி டென்னிஸனின் ஒரிஜினல் ஆங்கில கவிதையை ரசியுங்கள்.? பிடிக்கிறதா?

 THE PASSING OF ARTHUR ( BY A.L. TENNYSON)
THEN saw they how there hove a dusky barge,
Dark as a funeral scarf from stem to stern,
Beneath them; and descending they were ware
That all the decks were dense with stately forms,
Black-stol’d, black-hooded, like a dream—by these 5
Three Queens with crowns of gold: and from them rose
A cry that shiver’d to the tingling stars,
And, as it were one voice, an agony
Of lamentation, like a wind that shrills
All night in a waste land, where no one comes, 10
Or hath come, since the making of the world.

Then murmur’d Arthur, “Place me in the barge.”
So to the barge they came. There those three Queens
Put forth their hands, and took the King, and wept.
But she, that rose the tallest of them all 15
And fairest, laid his head upon her lap,
And loos’d the shatter’d casque, and chaf’d his hands,
And call’d him by his name, complaining loud,
And dropping bitter tears against a brow
Strip’d with dark blood: for all his face was white 20
And colorless, and like the wither’d moon
Smote by the fresh beam of the springing east;
And all his greaves and cuisses dash’d with drops
Of onset; and the light and lustrous curls—
That made his forehead like a rising sun 25
High from the dais-throne—were parch’d with dust;
Or, clotted into points and hanging loose,
Mix’d with the knightly growth that fringed his lips.
So like a shatter’d column lay the King;
Not like that Arthur who, with lance in rest, 30
From spur to plume a star of tournament,
Shot thro’ the lists at Camelot, and charged
Before the eyes of ladies and of kings.

Then loudly cried the bold Sir Bedivere:
“Ah! my Lord Arthur, whither shall I go? 35
Where shall I hide my forehead and my eyes?
For now I see the true old times are dead,
When every morning brought a noble chance,
And every chance brought out a noble knight.
Such times have been not since the light that led 40
The holy Elders with the gift of myrrh.
But now the whole Round Table is dissolv’d
Which was an image of the mighty world,
And I, the last, go forth companionless,
And the days darken round me, and the years, 45
Among new men, strange faces, other minds.”

And slowly answer’d Arthur from the barge:
“The old order changeth, yielding place to new,
And God fulfils himself in many ways,
Lest one good custom should corrupt the world. 50
Comfort thyself: what comfort is in me?
I have liv’d my life, and that which I have done
May He within himself make pure! but thou,
If thou shouldst never see my face again,
Pray for my soul. More things are wrought by prayer 55
Than this world dreams of. Wherefore, let thy voice
Rise like a fountain for me night and day.
For what are men better than sheep or goats
That nourish a blind life within the brain,
If, knowing God, they lift not hands of prayer 60
Both for themselves and those who call them friend?
For so the whole round earth is every way
Bound by gold chains about the feet of God.
But now farewell. I am going a long way
With these thou seëst—if indeed I go 65
(For all my mind is clouded with a doubt)—
To the island-valley of Avilion;
Where falls not hail, or rain, or any snow,
Nor ever wind blows loudly; but it lies
Deep-meadow’d, happy, fair with orchard lawns 70
And bowery hollows crown’d with summer sea,
Where I will heal me of my grievous wound.”

So said he, and the barge with oar and sail
Mov’d from the brink, like some full-breasted swan
That, fluting a wild carol ere her death, 75
Ruffles her pure cold plume, and takes the flood
With swarthy webs. Long stood Sir Bedivere
Revolving many memories, till the hull
Look’d one black dot against the verge of dawn,
And on the mere the wailing died away.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...