Thursday, November 5, 2020

THOUGHTS

 

ஆணும் பெண்ணும் J K SIVAN
என்னைப்போல் நிறையபேர் ஏன் தினமும் IPL மேச் பார்க்கிறார்கள் என்பதன் ரகசியம் ''வாழ்க்கை நிலையாமை'' எவன் நிறைய அடிப்பான் என்று எதிர்பார்க்கிறோமோ அவன் 0 அடித்துவிட்டு மட்டையை சுழற்றிக்கொண்டு அசட்டு பார்வையோடு கிளம்பிய இடத்துக்கே திரும்புவதும், இல்லாத ரன் இருப்பதாக எண்ணி நாயாக ஓடி அதற்கு முன் மூன்று குச்சிகளில் ஒன்று கவிழ்ந்திருப்பதை அருகே சென்று பார்த்து விட்டு திரும்புவதும், எங்கோ ஒரு இடத்தில் பந்து பட்டு அது எங்கோ இருப்பவன் ஒருவன் கையில் அடைக்கலம் ஆவதும் வேடிக்கை. இந்த மேச் பார்ப்பதில் ரொம்ப கஷ்டமான காரியம், அடிக்கடி ஒருவன் குறைந்த ஆடையோடு குளிப்பது, ஒருதடவை கூட பார்க்க முடியாத விளம்பரங்கள் அடிக்கடி பார்க்க வேண்டிய நிர்ப்பந்தம். நான் கண்ணை மூடிக்கொண்டு அப்போது சின்னதாக மனதில் த்யானம் செய்வேன். மீண்டும் மைதான சத்தம் கேட்டதும் கண்ணைத்திறப்பேன்.
++
இன்று ஒரு சிந்தனையை உங்களோடு பகிர்ந்து கொள்ளத்தான் ஆரம்பித்தேன்.
''ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் வித்யாசம் தெரியல அம்மாடி ஆத்தாடியோ'' என்று நாகேஷ் ஒரு சினிமாவில் பாடியது ஞாபகம் வருகிறதா?
இந்த இருபாலர் வித்யாசம் இல்லாமல் இருப்பது ஒருவிதத்தில் உத்யோகம். சம்பளம். வேலை வாய்ப்பு, உடை, படிப்பு போன்ற விஷயத்தில் வேண்டுமானால் காணப்படும். ஆணையும் பெண்ணையும் பிறவியிலேயே கண்டிப்பாக வித்யாசத்தோடு தான் பகவானே படைத்து இருக்கிறான். நான் உடல் ரீதியில் இல்லை மனரீதியில் சொல்கிறேன்:
1. பெண்ணின் மனசுக்குள், மூளைக்குள், ஒரே நேரத்தில் பல வேலைகளை தீர்மானிக்கும் சக்தி உண்டு. நிறைவேற்றி காட்டுவாள். அவளது மூளை அப்படி திறன் வாய்ந்தி ருக்கிறது. டிவி பார்த்துக்கொண்டே கோமதியி டம் சாவித்ரியின் புடவையைப் பற்றி ஆயிரம் குறை கூறுவாள். பாகுபலி கதையை நடிப்பை விமர்சித்துக் கொண்டே ருசியாக சமைத்துக்கொண்டிருப்பாள் . அவளால் முடியும். மொபைலில் வம்படித்துக்கொண்டே குழந்தைக்கு பாடம், கணக்கு சொல்லிக் கொடுப்பாள்.
குப்புசாமியால் இது முடியாது. ஒரு வேலை. ஒரு நேரம், தான் அவனுக்கு. தொந்தரவு பண்ணினால் ''வள்'' ளென்று விழுவான். இன்னொன்று செய்ய சொன்னால் அவனால் முடியாது. IPL மேச் பார்த்துக்கொண்டே போனில் கோபுவோடு பேசமுடியாது. ''அப்புறம் டா'', என்று போனை மூடுவான். 2. தெலுங்கு கன்னட, மலையாள மாமிகளோடு பட்டுவால் விரைவில் நட்பு கொண்டு அவர்கள் பாஷை பேச இயலும் . பார்த்தசாரதி திணறுவான். ப்ராப்ளம் சால்வ் பண்ண அவனால் முடியும். பட்டு நழுவி விடுவாள். மூணு வயசு பெண் பேசுவது, மனப்பாடம் பண்ணுவதை அதே வயசு பையன் பண்ண முடியவில்லை. 3. ஆணின் மூளையில் இடம் ஜாஸ்தி. விஷயங்களை அலச, வழி கண்டுபிடிக்க முடியும். திட்டம் தீட்டி ஒரு விஷயத்தை எப்படி அணுகவேண்டும் என்று தீர்மானிக்கும் சக்தி உண்டு.
கொஞ்சம் குளறுபடியான விஷயத்தை சொல்லிப்பாருங்கள். அவன் நழுவுவான்:
கோமளா '' இதெல்லாம் என்கிட்டே கொண்டு வரவேண்டாம். நீங்களே இந்த வேண்டாத வேலையை எல்லாம் பார்த்துக்கோங்கோ'' என்று சாமர்த்தியமாக தப்பித்துக் கொள்வான்.
4. உதாரணமாக கார் ECR தெருவில் ஓட்டும்போது நிறைய ஆண்களை தான் பார்க்க முடிகிறதே தவிர காரோட்டும் காமாக்ஷிகள் அபூர்வம். எதிரே வருபவன், அவன் மனதில் ஓடும் எண்ணம், பெரிய, சிறிய வண்டியா, அது எப்போது எப்படி நடந்துகொள்ளும். வேகமாக எந்தப்பக்கம் எப்படி அணுகும் என்று ஆணால் அனுமா னிக்க முடிகிறது. காரில் பாடிக் கொண்டிருக் கும் பாட்டு அந்த நேரம் அவன் மனதில் இடம்பெறாது. ''ஒரு நேரம் ஒரு வேலை'' இந்த சமயங்களில் கைகொடுக்கிறது. 5 பெண்ணின் எதிரே ஆண் பொய் பேசினால் ''கப்'' என்று பிடித்து விடுவாள். நிறைய பேருக்கு இந்த அனுபவம் இருக்கலாம் . ஆணின் அங்க அசைவு, பேந்த பேந்த விழிக்கும் கண், காட்டிக்கொடுக்கும் முகம், உளரும் வார்த்தைகளை வைத்தே அவன் புளுகுவதை கண்டு பிடித்து விடுவாள். அப்புறம்?.... தெரிந்த விஷயம் தான்.... அவ்வளவுதான். ஆனால் , பெண்ணால் சரளமாக கோர்வையாக, உண்மையாக, நேரில் பார்த்தது போல், இப்போது நடந்தது போல் புளுக முடிவது ஏனோ ப்ரம்ம தேவனின் பாரபக்ஷம்.
6. சுப்பிரமணி ஒரு மூட்டை பிரச்சினைகளை, தொந்தரவுகளை மனதில் சுமந்து கொண்டு தனியாக எங்கோ வானத்தை பார்த்து கொண்டு திண்ணையில் உட்கார்ந்து விடுவான். அவன் மூளை ஒவ்வொரு துணியாக எடுத்து இஸ்திரி போடும். ஒரு வழியாக எல்லா இடையூறுகளையும் எப்படி சமாளிப்பது என்று முடிவு எடுத்து அப்படியே செய்வான். வெற்றியும் பெறுவான். அம்மணிகள் நிறைய பேர் அழுவதோடு சரி. அவளுக்கு யாராவது ஆறுதலுக்கு வேண்டும் தோளில் சாய்ந்து கொள்ள. அவர்களிடம் சுமையை தள்ளிவிட்டு தூங்கப் போவாள். கவலையோ அதன் முடிச்சோ அவளை பாதிக்காது. குறட்டை விடுவாள்.
7. ஆண் தேடுவது அந்தஸ்து. வெற்றி, பிரச்னைக்கு தீர்வு, வழி முறை.இதெல்லாம் தான். அம்மாக்களை பொறுத்தவரை சிநேகிதம், நட்பு, உறவு, குடும்பம், பொழுது போக்கு இந்த அளவில்..... இதெல்லாம் நான் சொல்வதாக நினைக்காதீர்கள். சத்தியமாக என் கற்பனை இல்லை இதெல்லாம். பெரிய மனோதத்துவ ஆராய்ச்சியாளர்கள் மண்டையை உலுக்கிக் கொண்டு கண்டுபிடித்தது. 8. ஒரு நிர்பந்தம், சிக்கல் என்று வந்தால், வழக்கமாக கேட்கும் வாசகம்:
''இதோ பாருங்கோ உங்க அக்கா தங்கைகள், அம்மா பண்றதை என்னால் தாங்கமுடியலே''.
அலமேலுவால் அன்று முழுதும் ஒருவேலையும் செய்ய முடியாதே.
அப்பாதுரை அப்படி இல்லை. ஆபிஸ்லே பிடுங்கல் என்றால் யாரோடும் பேச கூட மாட்டான். ''ஒரு வேலை ஒரு நேரம்'' தான் அவனுக்கு. 9. குத்தலாக, ஜாடையாக, குதர்க்கமாக கோவிந்தனால் பேச முடியாது. வராது. மீதியை நான் சொல்லப் போவதில்லை. 10. உணர்ச்சியை வெளிப்படுத்துவதில் பெண் வேறு வகை. யோசிக்காமல் பேசுவதில் வல்லவள். ஆறுமுகம் யோசிக்காமல் ஏதாவது ''செய்து'' விடுவான். அதனால் தான் ''ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு '' பழமொழி
யே அவனால் நமக்கு கிடைத்தது.


தோணும்போதெல்லாம் ஏதாவது இதுபோல் கிறுக்குவதில் நான் மானான். IPL மேச்சில் இன்று டெல்லி சுதப்பியது போல் இதற்கு முன் பார்த்ததில்லை.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...