Saturday, November 21, 2020

PESUM DEIVAM

 

பேசும் தெய்வம்     J.K.  SIVAN   


                                                ஆங்கரை பெரியவா  


 இது  முக்கியமாக  திருவல்லிக்கேணி பெரியவா என்பவரை தெரியாதவர்கள்  தெரிந்துகொள்வதற்கு. 75 வருஷம் வாழ்ந்தவர்.  திருச்சி பக்கத்தில்  ஆங்கரை கிராமத்தில் பிறந்தவர். கல்யாணராமசாஸ்திரிகள் என்று பெயர்.   காஞ்சி மஹா பெரியவாளுக்கு ரொம்ப நெருக்கமானவர்.  நன்றாக படித்தவர்,  மத்திய அரசாங்க வேலை.   பெரியவா  உபதேசத்தின் படி  உத்தியோகத்தை  35  வயதிலேயே  துறந்துவிட்டு வாரம் ஏழு நாளும்  பாகவதம்,  நாராயணீயம்  எல்லாம்  தரோவாக  படித்து  பாராயணம் செய்து, சாயந்திரங்களில் உபன்யாசம் பண்ணினவர். 1973  முதல்  1991 வரை இப்படியே  உபன்யாசங்கள், சப்தாஹ பாராயணங்கள் நிறைய பண்ணினவர்.  

ஆங்கரை பெரியவா பிரசங்கங்களை  மஹா பெரியவா அருகில் உட்கார்ந்து ஊன்றி கவனித்து ரசித்து மகிழ்ச்சி கொள்வார்.   அப்போது தான் முதல்முறையாக  கிருஷ்ணனை பற்றி தெரிந்து கொள்வது போல் ஒரு ஆர்வம் அவர் முகத்தில் எப்போதும் தோன்றும். ஆங்கரை பெரியவாளின் உபன்யாசத்திற்கு இன்னொரு பரம ரசிகர்  பெரியவாவின் சகோதரர்  சாச்சு  என்கிற  சிவன் ஸார் . நாராயணீயத்தில் ஒரு  கமா  முற்றுப்புள்ளி விடாமல்  மனப்பாடம் பண்ணி சரளமாக அத்தனை ஸ்லோகங்களையும் சொல்லி விளங்குபவர்.

ஆங்கரை பெரியவா  மனிதர்களை புகழ்ந்து பிரசங்கத்தில் பேசாதவர்.   ''திருவல்லிக்கேணியும் பார்த்தசாரதியும்''  எனக்கு இணைபிரியாத  சொத்து என்று  சொல்பவர்.  எல்லோருக்கும் இலவசமாக   சேவைகள் செய்து வாழ்ந்தவர்.   அவர் கடன் தொல்லை பாதிப்பால் கஷ்டப்படுவதை ப்பார்த்த ஒருவர்  ஒரு பிரசங்கத்தில் இவருக்கு நாம் உதவி செய்யவேண்டும் என்று மக்களிடம் சொல்லியதை  உடனே ஆக்ஷேபித்து  ஒரு ஸ்லோகம் சொன்னார்  ஆங்கரை பெரியவா: அது:

धनॆन न रमामहॆ खल जनान् न सॆवाम           
न चापलं अयामहॆ भवभयान्न दूयामहॆ ।
स्थिरां तनुमहॆतरां मनसि किंच काञ्चीरत-
स्मरान्त्क-कुटुम्बिनी चरण पल्लवॊपासनाम् ॥

 ''நமக்கு  பணம் லக்ஷியமில்லை . ஆசையில்லை.  அதை தேடி ஓடுவதில்லை.    தீயவர்களுக்கு நமது சேவை இல்லை.  உலக வாதனைகள், இச்சைகள், ஆசைகள்  நமக்கு கிடையாது.  பவ பயம்  நெருங்காது.  ஏன்  என்றால் நமது மனதில்  எந்நேரமும்  காஞ்சி  ஏகாம்பரேஸ்வர்  தேவி காமாக்ஷி அம்மன்  திருவடிகள் நாம் தொழுது வணங்குவதற்காக  நிறைந்து  இருக்கிறதே.   வேறு எதற்கும் மனதில் இடமில்லை.''  -   இது   மூகபஞ்சசதீ ச்லோகம்.

 ‘ராமாயணம்,  பாகவதம் சொல்லுவதும், கேட்பதும் ஜன்ம லாபத்திற்காகத் தானே தவிர பணம் சம்பாதிக்க இல்லை. நான் கூடாது என்று சொல்லி இருந்தும் இவர் சிலது பேசிவிட்டார். அதை நீங்கள் பொருட்படுத்த வேண்டாம்.’ என்று கூறினார்.'' என்று படித்தேன். என்னை அறியாமல் அவரை மனத்திலே அப்போதே  வணங்கி சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தேன்.

யாரோ  ''ஏன் இப்படி  பேசிவிட்டீர்கள்?  நீங்கள் என்ன  தியாகராஜ ஸ்வாமிகளா?'' ஏற்று கேட்டபோது  உடனே  
''நிச்சயம் இல்லை தான்,  ஆனால்  அவரைப்போல்  ஆக  முயற்சிக்கலாமே'' என்று பதில் வந்தது.  அந்நேரம்  ஒரு பக்தர் அங்கே வந்தார் .

''சுவாமி  நான்  காஞ்சிபுரம். காமாக்ஷி அம்மன் பக்தன்.  நீங்கள்  சொன்ன  மூக பஞ்சசதி ஸ்லோகம் கேட்டேன். மனம் குளிர்ந்தது. நீங்களும்  தியாகராஜ ஸ்வாமிகள் போல்  ஆகிவிடுவீர்கள் என்கிறார்.

ஆங்கரை ஸ்வாமிகள்   ராமாயண சாரம்.,  பாகவத ஸ்வரூபம்,  நாராயணீய உருவம் என்று வாழ்ந்தவர்.   ஒரு முழு துறவியாக    ஞான  வைராக்ய  சித்தர்.   பகவான் ஸ்மரணையில்  முழு நேரத்தையும்  கழித்தவர்.  பேரும்  புகழும் தேடாதவர்.  இப்படி ஒருவரை  மஹா பெரியவாளுக்கு பிடிக்காமல் இருக்குமா?

மஹா பெரியவா மிக்க மகிழ்ச்சியுடன்  19 வருடங்கள்  விடாமல் தொடர்ச்சியாக   ஒவ்வொரு வருஷமும்   ஆங்கரை பெரியவாளை  காஞ்சி மடத்திற்கு வரவழைத்து   கோகுலாஷ்டமியை முன்னிட்டு  ஏழு நாள் ஸ்ரீமத் பாகவத  சப்தாஹம் செய்ய சொன்னார். 

தினமும் இரவில்  ப்ரவசனம்  திவ்யமாக  அருகில் அமர்ந்து கேட்டு ரசித்தார்.  

மஹா பெரியவா  வாக்கில்:   ''ஸ்ரீராமர் தன் கதையை தன புத்திரர்கள் லவன் குசன் பாடி  கேட்டது போல, க்ருஷ்ண பகவான், கோகுலாஷ்டமி விழாவில்   தானே தன் கதையை   காஞ்சிபுரத்தில் கேட்க  ஆசைப்பட்டார் போல் இருக்கிறது.  பாகவத ஸப்தாஹம் மலை போன்ற கார்யம். பாகவதருக்கு தான் ச்ரமம். நமக்கெல்லாம் ஆனந்தம். படனம் மதுரம். ப்ரவசனம் மதுரதரம்’ ''  என   ஆங்கரை ஸ்வாமிகளை  வாழ்த்தினார். 

அடிக்கடி மஹா பெரியவா  இந்த ஸ்வாமிகளை பற்றி சொல்லும்போது:  

‘எத்தனை கஷ்டம் இருந்தாலும் பொருட்படுத்தாமல், என் பேச்சைக் கேட்டு நடப்பவர்’ ‘ராமாயண பாகவதத்தை விலை பேசரி ஒரு மஹான்’ ‘தம் வாழ்க்கையை பயனுள்ளதாக ஆக்கிக் கொண்டவர். அவருக்கு மீண்டும் பிறவி கிடையாது’ என்பார்.

இந்த  ஆங்கரை பெரியவாளுக்கு   கோவிந்த தாமோதர ஸ்வாமிகள், திருவல்லிக்கேணி பெரியவா  என்று எல்லாம் கூட பெயர். 

யாருக்கெல்லாம் குறைகள், கஷ்டங்கள் இருந்ததோ  அதெல்லாம் தீர்த்து வைத்தார்.  அவரது வார்த்தைகள், ஈச்வர வாக்காய் பலித்தது. ஆனால், அந்த ஸித்திகளை மறைத்துக் கொண்டு, அதனால் கூட்டம், பணம் எதுவும் வந்து விடாமல் இருக்க, மஹா பெரியவாளிடம் ஒவ்வொரு நாளும் ‘க்யாதி லாப பூஜையிலிருந்து என்னைக் காப்பாற்றி, உங்கள் பாத பக்தியை தரவேண்டும்.’ என்று வேண்டிக்  கொள்வார்.

ஸந்யாஸம் ஏற்று  வாழ்ந்த இந்த சித்தர்   ‘சரவணபவ, சிவ, ராம, கோவிந்த, நாராயண, மஹாதேவ’ என்ற பகவானின் நாமங்களை தனிமையில் மனமுருகி ஜபித்து வந்தாலே, பகவத் பக்தி ஏற்பட்டு, இடையறாத பஜனத்தினாலேயே பக்தியின் வளர்ச்சியும், உலக விஷயங்களில் இருந்து விரக்தியும், பகவானுடைய ஞானத்தையும் அடையலாம்’   என்று  பலருக்கு உபதேசித்து  சித்தி அடைந்தவர்.   

இந்த  ஜீவன் முக்தரின்  அதிஷ்டானம்  காவிரிக்கரையில்  முசிறிக்கு அருகே  பழூர் என்ற அமைதியான  சோலைகள் மிகுந்த கிராமத்தில் உள்ளது.  அவசியம்  ஒரு முறை சென்று தரிசிக்கவேண்டும்.. மகானின்  வைப்ரேஷன் கிடைக்கும். 



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...