Tuesday, November 24, 2020

CHILD PSYCHOLOGY


 

கொஞ்சூண்டு  மனோதத்துவம்    J K  SIVAN 


கண்ணாடி முன் நின்றி  நிறைய  ஆசாமிகள்  அண்ணாவைப் போல், கலைஞரைப் போல் பேச குரலை அமைத்துக்கொள்ள  முயற்சித்து பல கூட்டங்களில் பேசி   கை தட்டலை பெறுவதும், சிவாஜி, M .R  ராதா  போல் பேசுவதும்,   சில சங்கீத  வித்வான்கள் பாணியில்  அவர்களை போல பாட முயற்சித்து வெற்றி   பெறுவதும் பெருமை பெறுவதும் நாம்  அறிந்த வேடிக்கையான  உண்மை தானே .

இதிலிருந்து என்ன புரிகிறது?   மனோதத்துவ  சாஸ்திரம்,  ''நீ யார் போல் ஆக வேண்டும் என்ற எண்ணம் உன் மனதில் தோன்றி,   அதற்கான ஒரு உதாரண  புருஷனை மனதில் நிலை  நிறுத்திக் கொண்டு   அதே போல்  ஆவதற்கு   விடாமல் முயற்சித்தால்   நீ அப்படியே,  மனதில்  நினைத்த வனாகவே  மாறிவிடுவாய்''  என்கிறது.

பிறக்கும்போது நமது மனது  எந்த எண்ணமும் இல்லாமல் காலியாக  சுத்தமானதாக பிறக்கிறது.  பிறந்தது முதல்  ஒருவன் காணும்   ஒவ்வொரு காட்சி, , கேட்கும் வார்த்தை, அவன் மனதில் பதிந்து  அடுக்கடுக்காக  அவனோடு சேர்ந்து வளர்கிறது. அந்த பதிவுகள்  பின்னால் அவன் குணமாக  மாறுகிறது.  அவன்  யார்  என்று தன்னை நினைக்கிறான் என்று புலப்படுகிறது.   ''நீ  யார்  என்று நீ   நினைக்கிறாயோ  அது நீ அல்ல,  உன் மனதில் பதிந்த எண்ணங்கள் தான்  நீ யாகி விட்டாய்.''     இந்த ரெண்டுக்கும் உள்ள வித்யாஸம் கடலளவு.  மெதுவாக   யோசியுங்கள்.

நாம்  என்ன  பதிவை மனதில் ஏற்றுக் கொண்டோ மோ  அதுவாக நாம் இன்று வளர்ந்துள்ளோம்.  அதனால் தான் சிறு வயதிலிருந்தே  குழந்தைகளுக்கு நல்ல எண்ணங்களை, பழக்கங்களை சொல்லித் தரவேண்டும்,  அன்பு, பாசம், கருணை, பக்தி எல்லாம் சொல்லிக் கொடுப்பதன் காரணம் இது தான்.

அப்பா   அம்மா  தாத்தா  பாட்டி  எல்லோரும்   '' அடே  ராமுப்பயலே,  நீ  அருமையானவன், நல்லவன்''  , என்று அன்பை பொழிந்து,  உன்னை  உற்சாகப்படுத்தி, தன்னம்பிக்கையை வளர்த்து, ஊக்குவித்தால், உன்னை  யறியாமலேயே   நீ நல்லவனாகி இருப்பதை உணர்வாய்.   

மூன்று  வயது ஆகும்போது  ஒரு குழந்தையின் மனதில் எண்ணங்கள் ஸ்திரமாக பதிவாகிவிடும். அதுவே  அவனாக்கிவிடும்.  இதை தான்  ஆங்கி லத்தில் PERSONALITY  என்பது. ஆளுமை, பண்புத்திறன்.

மிரட்டி,  பயன்படுத்தி, பேய் பிசாசு  கதைகள்   சொல்லி,  அதிகாரம், தண்டனை என்று  அவனை   வளர்க்கும்போது ,  அவன் தன்னம் பிக்கை தளர்கிறது.  வளர்ந்தபின் அவன் கோழையாக, எப்போதும்  தான் தப்பு செய்பவன் போலவும்  அதில் இருந்து தப்ப பொய்  சொல்ல வேண்டும், அடுத்தவர் மீது பழி போட வேண்டும்  என்ற  தப்பிக்கும்    எண்ணங் கள்  escapism    அவனை உரு மாற்றி விடும்.  தைர்யம் இல்லாமல் போய்விடும். எதற்கும் பயப்படுவான்.

செடிகள், தாவரங்களுக்கு  மழை, நீர்  தேவைப் படுகிறது  போல்,  அன்பு  வளரும் குழந்தைக்கு மிக மிக அவசியம்.  குழந்தைகள் அப்பா அம்மாவை விட தாத்தா  பாட்டியை விரும்புவது அவர்கள் காட்டும் அன்புக்காக  அபரிமிதமான  பாசத்துக்காக.

இளங்கன்று பயமறியாது என்பார்கள்.  சிறுவயதில் எதற்கும் பயம் இல்லாமல் பிறக்கிறோம். வளர்கிறோம்.  கீழே விழுந்து, பெரிய சப்தங்கள் கேட்டு பயம் கொஞ்சம் கொஞ்சமாக மனதில் வளர்கிறது.  மற்ற பயங்கள் எல்லாம் வெளியே இருந்து  மற்றவர் களிடமிருந்து, அல்லது  பார்த்து  கற்றுக் கொண்டது. 

நாம்  தோல்வியைக் கண்டு அஞ்சுபவர்கள்.  பிறர்   நாம்  சொல்வதை, செய்வதை  எதிர்ப்பார்களே , திட்டுவார்களே ,  மறுப்பார்க ளே ,  ஏற்க  மாட்டார் களே ,   குறை சொல்வார்களே  தப்பு ஆகி விடுமே,  என்று  மற்றவர்  சொல்லுக்கு மதிப்பு கொடுத்து  பயந்து பயந்து  வாழ்பவர்கள்  ஆகி றோம். நமது  , சுய சிந்தனை,  மன வளர்ச்சியை இது பாதிக்கும்.    தன்னம்பிக்கையை தின்று விடும்.  ''அதெல்லாம் நம்மாலே  முடியாதுப்பா''  அடிக்கடி  நம் வாயில் வரும்.

நாம்  எது செயதாலும் தப்பு என்று சொல்லி வளர்த்த பெற்றோர்  தான் முதல் குற்றவாளிகள்.  நம் குழந்தை களையாவது இனி அப்படி வளர்க்க வேண்டாம். 

சில பெற்றோர்  குழந்தைகளிடம் கோபத்தை காட்டி   ''ஸ்ட்ரிக்டாக'' STRICT ஆக கண்டிப்பாக குழந்தைகளை வளர்ப்பதாக நினைத்து குழந்தை களிடம் அன்பாக நடப்பதில்லை. அது மஹா தப்பு. 

அப்பா அம்மா சொல்வதை தான் நாம் செய்ய வேண்டும் என்று சுய நம்பிக்கை, சிந்தனை இன்றி குழந்தைகள் வளர்கிறார்கள். குழந்
தைக் கு செல்லம் எல்லாம் கொடுக்கக்கூடாது. அடி  உதவறமாதிரி  அண்ணன்  தம்பி உதவமாட்டான், நான் சொன்னதை தான் செய்யணும், பிடிவாதத்துக்கு இடம் கொடுக்க  கூடாது என்று  பெருமையாக சொல்லும்   பெற்றோர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.   இவை  அதிகாரத்தில் வளரும் குழந்தைகள் நிலை.  

எப்போதும்  பிறர் பாதுகாப்பை  தேடும் பயந்த  ஸ்வபாவ   குழந்தைகளாக வளர்ந்தவர்கள்  நம்மில் அநேகர்.  வாழ்க்கையில்  இவர்கள் அடிமை வாழ்க்கையை விரும்பி ஏற்றுக் கொள்ப வர்கள்.  நூறோடு ஒன்று  நூற்றி ஒன்றாக  வளர்ப்ப வர்கள்.  உதாரண   புருஷனாக  எப்படி ஆக  முடியும்.  


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...