Monday, November 16, 2020

KOUPEENA PANCHAKAM


 கோவணாண்டி பாக்கியசாலி     J K  SIVAN

கோவணாண்டி என்றால்  அருவருப்பு வேண்டாம்.  அவமரியாதையும் கிடையாது.  எவ்வளவு உயர்ந்த தியாகி அவன் என்று  உணர ஆதி சங்கரரின் கோவணதாரி ஸ்லோகங்கள் ஐந்து பற்றி  சொல்கிறேன். அர்த்தத்தை ஊன்றி கவனியுங்கள்.  .
ஆதி சங்கரரின் இந்த ஐந்து  கோவண ஸ்லோகங்கள்  தான்  ''கௌபீன பஞ்சகம்''. ஒரு மனிதன் மானத்தை மறைக்க வேண்டிய அளவு துணி ஒரு கோவணம் தான். உலகத்தை துறந்த, வாழ்க்கையை துறந்த ஞானிகள் விரும்பி அணிந்தது கோவணம் தான். ஆண்டிகளையே கோவணாண்டி என்று தான் சொல்வது. முருகனே மாம்பழம் சமாச்சாரத்தில் கோபம் கொண்டு கைலாசத்தை துறந்து, பெற்றோரை துறந்து பழனியில் கோயில் கொண்டபோது அவன் தோற்றம் இன்றும் கோவணாண்டி தானே.
நிறைய சித்தர்கள், முனிவர்கள், ரிஷிகள் இவ்வாறு கோவணதாரிகளாக, வடமொழியில் கௌபீன தாரிகளாக வாழ்ந்தார்கள். ரமணர், சேஷாத்திரி ஸ்வாமிகள், பட்டினத்தார் எல்லோருமே அப்படித்தானே. மஹா பெரியவாளும் அப்படி இருந்த ஒரு படம் இத்துடன் இணைத்துள்ளேன்.    எனக்கு தெரிந்து இளம் வயதில் நிறைய வயல் வெளிகளில் வேலை செய்பவர்களும் கூட கௌபீன தாரிகளாகத் தான் வாழ்ந்தார்கள்.
वेदान्तवाक्येषु सदा रमन्तो भिक्षान्नमात्रेण च तुष्टिमन्तः । विशोकमन्तःकरणे चरन्तः कौपीनवन्तः खलु भाग्यवन्तः   1
வேதாந்த வாக்யேஷு  சதா ரமந்தோ , பிக்ஷான்ன மாத்ரேண   த்ரிஷ்டி மந்த,   விசோகமந்த; கரணே சரந்த ;  கௌபீனவந்த; கலுபாக்யவந்த:;
''வேறென்ன வேண்டுமடா உனக்கு?   என் மனம் எல்லாம் வேதாந்த விசாரங்களை பற்றி நிரம்பி இருக்கிறது. ஆனந்த நிலையில் இருக்கிறேன்.  என் புலன்களின்  தேவை எனக்கு லக்ஷியம் இல்லை.  நான் என்ன பசியாலா  துடிக்கிறேன் ? வாடுகிறேன், ஒரு கவளம் அன்னம் என் கப்பரையில், விழுகிறதே கிடைத்ததை மகிழ்ச்சியோடு  மரத்தடியில் அமர்ந்து   உண்பவனுக்கு தனியாக எது ருசி எதற்கு ருசி?  . எனக்கு ஒரு கவலையும் இல்லை, நான்  ப்ரம்மானந்தத்தில் சந்தோஷத்தில் மிதக்கிறேன். அந்த பகவான் என் சித்தத்தை கொள்ளை கொண்டு என்னை சதானந்தத்தில்  இரவும் பகலுமாக ஆழ்த்தும்போதே எனக்கென்ன குறை?- இப்படிச் சொல்லும் இந்த கோவணதாரி யல்லவோ ஈடிணையற்ற பாக்கியவான். பெரும் அதிருஷ்ட காரன், ,குபேரனும் கூட.....
मूलं तरोः केवलमाश्रयन्तः पाणिद्वयं भोक्तुममन्त्रयन्तः । कन्थामिव श्रीमपि कुत्सयन्तः कौपीनवन्तः खलु भाग्यवन्तः
மூலம் தரோ கேவலமாஸ்ரயந்த,  பாணித்வயம்  போக்தும மந்த்ரயந்த,  கந்தாமிவ  ஸ்த்ரீமபி  குத்சயந்த; கௌபீனவந்த; கலுபாக்யவந்த:;  2
வீடு, மனைவி,  சமைக்க அடுப்பு, வெளியே சாப்பிட ஓட்டல் எதுவும் வேண்டாமய்யா. தொப்பென்று மரத்திலிருந்து விழும் காய் கனி, பூமியில் கிடைக்கும்  காய் கிழங்கு வகைகள், இலைகள், கொடிகள் இது போதும். ஆடு மாடு மாதிரி  தான் உணவு எனக்கும்.    இரு கை குவித்து அதில் என்ன விழுகிறதோ, எது கிடைக்குமோ அதுவே வயிறு நிரம்ப போதுமானது. ஒரு கையகல கிழிசல் துணி அது ஒன்றே போதும் என் வஸ்திரம்.     இதற்கு மேல் எதற்கு செல்வம்?  உண்மையாகவே சொல்லுங்கள் '' -- என்கிறாரே இந்த கௌபீன வந்தர் இவரல்லவோ பாக்கியவந்தர், செல்வந்தர்.
स्वानन्दभावे परितुष्टिमन्तः सुशान्तसर्वेन्द्रियवृत्तिमन्तः । अहर्निशं ब्रह्मसुखे रमन्तः कौपीनवन्तः खलु भाग्यवन्तः ॥ ३॥
ஸ்வானந்த பாவே பரிதுஷ்டிமந்த ;  சுஷாந்த   சர்வேந்திரிய வ்ருத்திமந்த,  அஹிர்னிசம்  ப்ரம்மசுகே  ரமந்த கௌபீனவந்த; கலுபாக்யவந்த
எனக்கு யார் கூடவும் பேசவேண்டாம். தனியாக இருக்க விட்டால் அதுவே மஹா சந்தோஷம். எனக்குள்ளேயே எனக்கு ஆனந்தம் இருக்கும்போது வெளியே எங்கே யாரிடம் அதை தேடவேண்டும் ? என்னை எதுவும் அணுகாது நான் எதையும் நெருங்காது என்னை அடக்கி ஆள்கிறேன் . எனக்கு நானே ராஜா இல்லையா இப்படிப் பட்ட ப்ரம்மானந்தத்தில் யார் என்னைப் போல் திளைக்க முடியும் ? என்கிறார் கௌபீனவந்தரான ஒரு பாக்கியசாலி தனவந்தர்.
देहादिभावं परिवर्तयन्तः स्वात्मानमात्मन्यवलोकयन्तः । नान्तं न मध्यं न बहिः स्मरन्तः कौपीनवन्तः खलु भाग्यवन्तः ॥  4தேஹாதீபாவம்  பரிவர்த்தயந்த , ஸ்வாத்ம நமாத்மந்ய வலோகயந்த ;  நாந்த  ந மத்யம்  ந  பஹி ஸ்மரந்த  கௌபீனவந்த; கலுபாக்யவந்த
நான் வேடிக்கை பார்க்க எதற்கும் எங்கும் போவதில்லை. நிறைய வேடிக்கைகள், ஆட்டங்கள் படங்கள் என் உடம்பிலேயே நிகச்சிகள் மாற்றங்களாக நிறைய நடக்கின்றனவே. அவற்றை பார்த்து ரசிக்கவே நேரம் போதவில்லையே. நான் தான் இந்த உடம்பில்லையே, பரிபூரண ஆனந்தமயன் ஆச்சே. ஆரம்பமோ, நடுவோ முடிவோ எதுவும் இல்லாதது நான் என்கிற  இந்த ஆத்மா. இப்படிப் பட்ட சுகம் வேறே  எங்கே ஐயா கிடைக்கும் ?என்கிறார் கௌபீனதாரியான பாக்கியசாலி தனவந்தர்.
ब्रह्माक्षरं पावनमुच्चरन्तो ब्रह्माहमस्मीति विभावयन्तः । भिक्षाशिनो दिक्षु परिभ्रमन्तः कौपीनवन्तः खलु भाग्यवन्तः ॥ ५॥
ப்ரம்மாக்ஷரம்   பாவனமுச்சரந்தோ, ப்ரம்மாஹமமாஸ்மீதி விபாவயந்த; பிக்ஷாஸினோ  திக்ஷு  பரிப்ரம்மந்தகௌபீனவந்த; கலுபாக்யவந்த
வாயைத் திறந்தாலும் திறக்காமல் இருந்தால் மனத்திலும் எப்போதும் எனக்கு ப்ரம்ம ஸ்மரணை தானே. விழிப்பிலும் உறக்கத்திலும் கூட. ஓரிடத்தில் நிலைத்து நிற்காமல் அலைந்து கொண்டே இருப்பது தான் என் வேலை .  எங்கு எது கிடைக்கிறதோ அதுவே உணவு. அதைத் தேடி அலைவதில்லை ஐயா. இதற்குமேல் ஒருவனுக்கு எது அதிருஷ்டம் சொல்லுங்கள்?   என்கிறார் கௌபீனவந்தரான பாக்கியசாலி தனவந்தர். இழுத்து கோவணம் கட்டும் பழக்கம்  ரெண்டு தலைமுறைக்கு முன் இருந்தது. வெள்ளைக் காரன் போட்டுக்கொள்ளும்  பேண்ட்  நிஜார்  பழக்கம் வந்ததும்  வேட்டி  கட்டும் பழக்கத்தோடு  உள்ளே அணிந்துகொள்ளும் அதுவும் காணோம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...