Tuesday, June 2, 2020

THIRUKKOLOOR PEN PILLAI




திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள் 
J K SIVAN  

  67  அனுகூலம் சொன்னேனோ மால்யவானைப் போலே

ராவணேஸ்வரின்  அம்மா வழி தாத்தா  தான்  மால்யவான்.   அவனது  சபையில் மூத்த  மந்திரி. மால்யவானின்  சுமாலி, மாலி  என்ற  ராக்ஷஸர்கள்.  பலசாலிகள். மால்யவானின் பிள்ளைகள்  வஜ்ரமுஷ்டி,, விரூபாக்ஷன், துர்முகன், சுப்தாக்னன் , யஞ கோபன், மத்ரா , உன்மத்ரா,  

சுமாலியின் மகள் கேகசி  தன  ராவணனின் தாய். மாலியின் மனைவி ஒரு கந்தர்வ பெண். அவள் பிள்ளைகள்  அனுல்,, அநில், ஹர்,  சம்பாதி    நால்வரும் விபீஷணனின் மந்திரிகள். வி
பீஷணனுடன் சேர்ந்து ராமனிடம் தஞ்சம் புகுந்தவர்கள்.

ஒரு முறை மால்யவானிடம் நாரதர், ''த்ரேதாயுகத்தில்  ராக்ஷஸர்கள் அத்தனைபேரும் ராமரால் வதம்  செய்யப்படுவார்கள் '' என்று சொல்லி இருக்கிறார்.

முதல் நாள் யுத்தத்திலேயே  எண்ணற்ற  ராக்ஷஸர்கள் வானர ஸைன்யத்தால் அழிந்ததில்  ராவணனுக்கு பெரிய அதிர்ச்சி.  அப்போது மால்யவான்   ''ராவணா, உன்னை எதிர்க்கும் ராமன் மனிதனல்ல, ஸ்ரீ மஹா விஷ்ணு. இப்போது நீ சீதையை அவனிடம் ஒப்படைத்துவிட்டு  அனைவரும் உயிர் தப்புவது தான் சரி ''  என்று சொன்னதை ராவணன் ஏற்கவில்லை.  கடின மொழிகளால் திட்டினான். முகத்தில் கரி பூசிக்கொண்டு நீயும் ராமனிடம்  ஓடு, அவன்  காலில் விழு''  என்று  கத்தினான்.  

நாரதர் முன்பே சொன்னதை  மால்யவான் நினைவு கூர்ந்தான்.வேறுவழியின்றி சக்தியின்றி வெறுமே பார்த்துக் கொண்டி ருந்தான். 

மால்யவான் வேத சாஸ்திரங்கள் அறிந்தவன். நியாயவான். தன் கண்ணெதிரே  அனைத்து  ராக்ஷஸர்கள் அழிவதை கண்டவன்.

ராவணன் முடிந்ததும் விபீஷணனுக்கு  பிரதம ஆலோசகனாக, மந்திரியாக இருந்தவன். 

திருக்கோளூர் பெண்பிள்ளை அனைத்தும் அறிந்தவள்  ராவணன் குடும்ப சரித்திரமும் அதனால் அவளுக்கு நன்றாக  தெரியுமே  அம்மாள், “ஸ்ரீ ராமானுஜர், நான் எந்த நல்ல காரியமும் செய்யாதவள் .  மால்யவானைப் போல  எப்போதாவது  எம்பெருமானிடம் சரணாகதி அடையுமாறு நல்வழி யாருக்காவது கூறியது உண்டா? எவ்விதத்தில் இந்த புண்ய க்ஷேத்ரம் திருக்கோளூரில் வசிக்க  எனக்கு அறுகதை? என்று அல்லவோ  கேட்கிறாள்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...