Sunday, June 7, 2020

PESUM DEIVAM




பேசும் தெய்வம்     J K   SIVAN    
                                                                                                         
'' எண்ணெய்த் தூக்கு......''

கடல் நீருக்கு  அளவு உண்டா?   அது போல் தான் மஹா பெரியவாவின் மஹாத்மியத்தை, அபார கருணையை,  தீர்க்க தரிசனத்தை, தாராள மனசை, அனுகிரஹத்தை பற்றி பக்தர்க ளிடமிருந்து வரும் செயதிகளுக்கும்  எல்லையே  இல்லை.   எத்தனை வருஷங்கள் ஆகிவிட்டது மஹா பெரியவா நம்மிடமிருந்து மறைந்து?     இன்றும்  ஒவ்வொரு கணமும்  நித்ய அனுகிரஹ  தெய்வம் அவரை லக்ஷோப லக்ஷம்  குடும்பங்கள்  பரிபூர்ண நம்பிக்கையோடு வழிபட்டு வருகிறதே.
என்னை உலுக்கிய  ஒரு சம்பவம் சொல்கிறேன். கேளுங்கள்:
மஹா பெரியவா பக்தர்  ஒருவர்  தமிழ்நாட்டி லிருந்து   கல்கத்தா துறைமுகத்தில் ஒரு கப்பலில் வந்து இறங்கும்  நண்பரை  வரவேற்க காத்துக்கொண்டிருக்கிறார்.  கப்பல் வர ரெண்டு மணி நேர தாமதம். அது  வரை  என்ன செய்வது.  துறைமுகம் அருகே இருக்கும்  ஒரு நல்ல உணவு கிடைக்கும்  ஹோட்டலை  விசாரித்து தெரிந்து கொண்டு  உள்ளே  சென்று அமர்கிறார்.  ஹோட்டல் முதலாளி வங்காளி.   கல்லாவில் பிசியாக  இருக்கிறார்.  பெரிய கடைத்தெருவில்  ஒரு நல்ல உணவு  கிடைக்கும்  ஹோட்டல் என்று பெயர் என்பதால்  எப்பவும் கூட்டம். நல்ல வியாபாரம்.  முதலாளி இருக்கைக்கு   பின்னால்  சுவற்றில் ஒரு மர   ஷெல்ப். SHELF . அதில்   மஹா  பெரியவா படம். பூக்களால் அலங்கரித்து சிறிதாக  அளவோடு எரிந்து கொண்டிருக்கும் இரு   தீபங்கள். ஊது வத்தி சாம்பிராணி  மணம் . எதிரே சிறிய தட்டில்   வெற்றிலை பாக்கு பழம்,  விபூதி குங்கும சிமிழ்கள்.
அபய  ஹஸ்தத்தோடு மந்தகாச புன்னகையும், கருணை பார்வையோடு பெரியவர்  கல்கத்தா விலா??  என்ன ஆச்சர்யம். வழக்க மாக காளி,  விவேகானந்தர், பரமஹம் சர்  தானே இருப்பார்கள் .  வங்காளி முதலாளி  காஞ்சி முனிவர்  பக்தனா?  தமிழ் பக்தர்  ஆவலால்  உந்தப்பட்டு   முதலாளி இருக்கை அருகே   சென்று  ஹிந்தி யில்  பேச்சு  கொடுத்தார்.
'' படத்தில் இருக்கும் இந்த சாமி யார்  யார்?
.ஹிந்தியில் பதில் வந்தது.   கண்கள் பளிச்சிட,  பெருமையோடு  மார்பில் கை  வைத்து ''  என்  தாகுர்ஜி , மேரா தாக் குர்ஜி... என் குருநாதன்.''
''அவரைப்பற்றி சொல்லுங்கள்?''
வேவு பார்க்கிறார் தமிழர். உணர்வு  பொங்க பக்திமேலிட்டு,  வெள்ளம் போல்  மகா பெரியவாவை பற்றி  அசாத்தியமாக சொன்னார் வங்காளி. நடுநடுவே  பெரியவாளை பற்றி  தமிழரும்  அவருக்கு சில  விஷயங்கள் கூற  வங்காளி முதலாளிக்கு ஆச்சர்யம்.
''உங்களுக்கு அவரை தெரியுமா? தெரிந்துமா  என்னிடம் கேட்டீர்கள்?
'''உங்களுக்கு தெரிந்ததை கேட்க ஆவல். நானும் பெரியவா பக்தன் தான் ''
பையிலிருந்து பெரியவா படம் எடுத்து காட்டினார். எழுந்து நின்று வணங்கின  முதலாளிக்கு பரம சந்தோஷம். ''ஒரு வேலையாளிடம் ''கல்லாவை பார்த்துக்கொள் '' என்று சொல்லி விட்டு  தமிழர் தோளில்  கை போட்டுக்கொண்டு  அழைத்து ஒரு தனி  மேசைக்கு  சென்று இருவரும்  ஒரு மணிக்கும்  மேலாக பெரியவா பற்றி  பேசினார்கள்.
''கப்பல் வந்து பயணிகள் இறங்குகிறார்கள் என்று செய்தி வந்ததும்  பேச்சு நின்றது
''நான் நண்பரை சந்தித்து விட்டு  மீண்டும்   வருகிறேன்''
''அவசியம்  இங்கேதான் என் வீடு. வாருங்கள்  தாக்குர்ஜி  பற்றி ஒரு முக்கியமான விஷயம் சொல்லவேண்டும்.''
''அமிர்தம் சாப்பிட  வலிக்குமா?  அவசியம் உங்களை சில மணிநேரங்களில் வந்து பார்க்கிறேன்''
தமிழர் துறைமுகம் சென்றார்.அன்றுமாலை கல்கத்தாவில் ஒரு  ஒதுக்குப்புறத்தில் அமைதியான ஒரு சிறு இல்லத்தில்  நுழைந்ததும்  ஹாலில் எதிர் சுவற்றில் பெரியவா  சிரத்தில் குஞ்சித  பாதத்துடன்  ''வாடா '' என்று வரவேற்றார்.  கம்மென்று நறுமணம். புஷ்பங்கள்  மாலையாக சாற்றி இருந்தது. . மஹா பெரியவா படம் முன்னால் ஒரு சிறு மேஜை. அதன் மேல் ஒரு  பெரிய  பித்தளை  பேழை.  வங்காளி பக்தர்  கையை பிடித்து  வீட்டுக்குள் அழைத்து சென்று  இருவரும் பெரியவா படத்துக்கு  நமஸ்காரம் செய்தனர்.  பேழையிலிருந்து ஒரு பாத்திரத்தை  பயபக்தியோடு எடுத்தார்.   கடகடவென்று மனப்பாடம் செய்தது போல் ஒரு சோகக்கதை சொன்னார்:   அதன்  சுருக்கம்::
கல்கத்தாவில் ஒரு  குடும்பம். தலைவர்  செக்கு மாடு வைத்து  செக்கு எண்ணெய்கள் வியாபாரம்.  சிலகாலம்  .அப்புறம் போட்டி, மலிவு   கலப்பட எண்ணெய்கள் அவர் வியாபாரத்தை முடக்கி  கஷ்ட ஜீவனம்.  ஐந்து குழந்தைகள்  ஒரு பிள்ளை, நான்கு பெண்கள்.. ஒருநாள் திடீர் மரணம். மனைவியை குழந்தை களை  கணவன்  வீட்டார் விரட்டினர். பிறந்த வீட்டிலும்  அவர்களுக்கு  வரவேற்பில்லை .   இருக்கும் பணத்தை வைத்து ஒரு வேளை கஞ்சியில் காலம் ஒட்டி, அது போதாமல்  கல்கத்தா பெரிய கம்பனிகளில் குப்பை, பேப்பர் எல்லாம்  பொறுக்கி  விற்று ஜீவனம். படிக்காதவள்  என்ன செய்வாள்?  அருகே துறைமுகம்  அங்கே தரையில்    போக்குவரத்து வாகனங்கள் சிந்திய கோதுமை, அரிசி, கேழ்வரகு, போன்றவற்றை  சேகரித்து  சமைத்து அன்றன்று குழந்தைகளோடு உயிர் வாழ்கிறாள்.
யாரோ தமிழ்நாட்டிலிருந்து ஒரு தாக்குர்ஜி கல்கத்தா  வந்திருக்கிறார்,தெய்வமே வந்தது போல்  அன்பாக,கருணையாக அருள் புரிகிறார் என்று கேள்விப்பட்டு  அவரை தரிசித்து, வறுமை நீங்க வழி தேடுகிறாள்.
தமிழ் தாக்குர்ஜி  எங்கு தங்கியிருக்கிறார்?  மறுநாள் அவரை எங்கே எப்படி எந்த நேரம் தரிசிக்கலாம் என்று இரவெல்லாம் யோசனை. பிரார்த்தனை.   மறுநாள் விடிகாலை ஸ்னானம் செய்துவிட்டு கையில் ஒரு காலி எண்ணெய்  தூக்கை எடுத்துக்கொண்டு  காஞ்சி  மஹா பெரியவா  முகாம் இட்ட இடம் அடைகிறாள்.
பெரிய  கூட்டம். நீளமான பக்தர்கள் வரிசை. தலை சுற்றுகிறது. பசி மயக்கம் வேறு.  திகைத்து நின்றாள். கூட்டத்தில்  எல்லோருமே வசதியானவர்கள் போல் தோன்றினார்கள், பளிச்சென்று ஆடை, நகைகள், கையில் தட்டுகளில் பழங்கள், கிழிந்த ஆடையோடு நின்ற அவளை  பல கண்கள் ஏளனமாக அருவருப்பாக  பார்த்தன.  மகா பெரியவா விதவைகளை சம்பிரதாயமாக பார்ப்பதில்லை என்ற சேதி வேறு அவளை பயப்படுத்தியது.  எண்ணெய்  செக்கு முதலாளி மனைவி என்று பேர் தானே தவிர  பரட்டைதலை , எண்ணெய் கண்டு பலகாலம்.
''தெய்வமே  தாக்குர்ஜியை எப்படியாவது பார்த்துவிட வேண்டும். நமஸ்கரித்து ஆசி பெறவேண்டும்.'' ஒருவேளை கிட்டே போக அனுமதிக்காவிட்டால்  தூரத் திலிருந்தாவது அவரை தரிசிக்கவேண்டும்.''
மூன்று நாலு மணிநேரம் கால் கடுக்க  வரிசையில் காத்திருந்து மெதுவாக முன்னேறினாள்
மஹா பெரியவா சர்வ வியாபி, எங்கு எது எப்படி நடந்தாலும் தெரியுமே அவருக்கு.  எப்படி அவர் பார்வை இவள் மேல் விழுந்ததோ? ஒரு அணுக்க தொண்டரை விட்டு அவள் கையிலிருந்த காலி எண்ணெய்  தூக்கு பாத்திரத்தை வாங்கி வர சொன்னார்.  அவளைத்தேடி வந்த தொண்டர்,
''பெரியவா உன்னுடைய  பாத்திரத்தை வாங்கிண்டு வர சொன்னார் கொடு அம்மா''
பாத்திரம் மட்டும்    பெரியவா தரிசனத் துக்கு போயிற்று. அவளுக்கு தரிசனம்??
தொண்டரை  பிந்தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருந்தாள். நேர் எதிரே  வரிசையின் , எங்கோ  ஒரு முனையில்  ஒரு கணம்  தாக்கூர்ஜி யை சுற்றி ஒரு கூட்டம் சூழ்ந்தி ருந்தது. உற்று பார்த்தாள். கும்பலில் சிலர்  திடீரென்று   கொஞ்சம்  விலக,  ஒரு க்ஷணம்  தாக்குர்ஜி  முகம் தெரிந்தது.  தனை மறந்தாள் .பரவசமானாள் .இரு கரம் சிரம் மேல் சென்றது. கண்களிலிருந்து கங்கை வடிந்தது. தாகுர்ஜியின் முன் அவள் பாத்திரம் வைக்கப் பட அதில் மஹாபெரியவா தன் கமண்டலத் திலிருந்து தீர்த்தத்தை  ஊற்றுவதைக் கண்டாள். கூட்டம் மீண்டும் நிலவை மேகம் மறைப்பது போல்  அவரை சூழ்ந்துகொண்டு மறைத்தது.
''எனக்கு இந்த தரிசனமே போதும். இதுவே  எப்போதோ  எந்த ஜென்மத்திலோ பண்ணிய புண்ணியம்'' .
திருப்தி அடைந்தாள். உதவியாளர் கொண்டு வந்து தந்த பாத்திரத்தைத் தன் சேலைத் தலைப்பில் மடிப் பிச்சையாக வாங்கிக் கொண்டாள். அதை பவித்திர மாக பாவித்து  மார்போடு  அணைத்துக் கொண்டு கண்ணீர் மல்க
''தாக்குர்ஜி நன்றி ''  எனும்போது  உடல் உள்ளம் ஆவி  எல்லாம்  ஆனந்தமயம்.  அரை மயக்கம். அருகே  சுவரில் சாய்ந்தாள்.
பெரியவா எழுந்து அந்தப்பக்கமாக வந்தார்.  இதோ அவள் இருக்கும் பக்கம் தெய்வம் வருகிறது
''என்ன எதிர்பாராத அதிர்ஷ்டம்''
அவள் அருகே  ஒரு வினாடி நின்றார்.
''இவ்வளவு பேர்  மத்தியிலே  ஏன் இத்தனை நேரம் கால் கடுக்க நின்றாய். நீ உண்மையில் ரொம்பவே  பொறுமைசாலி.  க்ஷேமமாக இருப்பே ”  அவர் சொன்னதை  ஹிந்தியில் ஒருவர் சொன்னார்  ''பதினேழு வருஷம்'' என்று ஏதோ சொன்னார் புரியவில்லை .
பெரியவாளை நமஸ்கரித்தாள்.  ''நன்றி நன்றி என்று ஹ்ருதயம் சொல்லி கொண்டே இருந்தது.
அனைவருக்கும்  ஆச்சர்யம். எப்படி  இந்த ஏழைப்பெண்ணிற்கு தெய்வமே  தானாக வந்து தரிசித்து ஆசி. வழங்கியது அவள் பார்த்திரத் தில் பூஜா தீர்த்தம் வழங்கியது.?
அவள் உள்மனம் சொல்லியது.   ''நீ  விதவை, உன்னை  அவர்  எதிரே சென்று பார்க்க ஒருவேளை தொண்டர்கள் அனுமதிக்கா  விட்டால்??? அதனால்  தான்   தெய்வம் தானே  உன்னருகே வந்து அருள் புரிந்தததோ?  . திரும்பிப்  பார்த்தாள்  அவள் நின்ற இடம் அருகே கோசாலை. அங்கேதான்  தாக்குர்ஜி  போகிறார். போகும் வழியில் நான்  பாக்கியசாலி.  அதனால்  தான் தரிசித்தேன். ''
ஐந்து கிலோ மீட்டர் தூரம் அவரை தரிசிக்க   நடந்து வந்திருக்கிறாள்.  களைப் படைய வில்லை.  தாக்குர்ஜி தரிசனம் பெறவேண்டும் என்று எல்லா தெய்வங்களையும் வேண்டிய தற்கு பலன் கிடைத்தது.    உலகம் புதிதாக தெரிந்தது. நெஞ்சில் இதுநாள் வரை இருந்த ஏதோ ஒரு பாரம்  இப்போது காணோம். காற்றில் மிதந்தாள்.  வீடு சேர்ந்தாள்.  அவள் பாத்திரத்தில்  பெரியவா அளித்த  மந்திர தீர்த்தம்  ஒன்றரை  லிட்டருக்கு மேல் இருந்தறது. அதை வேறு பாத்திரத்தில் ஊற்றி மூடி ஜாக்கிரதையாக வைக்க இன்னொரு பாத்திரம் எடுத்தாள் . ஊற்றினாள் .  ஒரு அதிசயம் நடந்தது.
அவள் ஜலத்தை இன்னொரு பாத்திரத்தில் ஊற்றும்போது அது சுத்தமான  எண்ணையாக மாறி  நிரம்பியது.  அவள்  கண்களை அவளால்  நம்ப முடியவில்லை.     தாக்குர்ஜி ப்ரசாதமாக தந்தது நீர் தானா என பார்த்தாள். நீர் தான் இருந்தது. அது எப்படி இன்னொரு பாத்திரத் துக்குள்  வழியும் பொழுது எண்ணெய் ஆயிற்று? '
'ஜெய்  தாக்குர்ஜி'' என்று  ஆனந்தத்தில் குதித்தாள்.   அந்த ஒன்றரை கிலோ எண்ணையை வைத்து குலத்தொழி லான  எண்ணை வியாபாரம் செய்தாள் . ஒவ்வொரு நாளும் அந்த பாத்திரத்தி லிருந்து ஊற்றாக  எண்ணெய் சுரந்தது.     எவரிடமும் சொல்லாமல் ரகசியமாக  அடுத்த கிராமம் சென்று எண்ணெய்  விற்று காசாக்கி  வீடு சேர்ந்தாள். வீட்டில் மீண்டும்   சுபிக்ஷம் தோன்றியது. நம்பகமான  நல்ல  எண்ணெய்  வியாபாரியானாள் .
''என்ன ஆச்சர்யம்,  அவள்  தனது கஷ்டத்தை  தாக்குர்ஜியிடம்  சொல்ல வில்லை . குலத்தொ ழில் சொல்ல வில்லை.   இழந்த  எண்ணெய் வியாபாரம் அவள் குடும்பத்தை  ஏழையாக் கியது. அதையே சுபிக்ஷ பாதையாக மாற்றிவிட்டார். எல்லாம் ஒரு வார்த்தை கூட பேசாமல்...
அந்த  எண்ணெய்  தூக்கை  பூஜையில் வைத் தாள்  சந்தனம் குங்குமம் இட்டு பேழை யில் மலர்களிட்டு வைத்தாள் .அன்றா டம் அதில் இருந்து ஒரு குடம் எண்ணெய்  எடுத்து விற்றாள் .
அவளை  இகழ்ந்த உறவுகள்  மீண்டும் ஒட்டிக் கொள்ள வந்தன அவள் கருணை யோடு அவர்களை ஏற்றாள் . வருஷங்கள்  ஓடின. மூத்த  பிள்ளை ஒரு  டீ  கடை வைத்து சம்பாதித்தான்.  நான்கு பெண்க ளுக்கும்  கல்யாணம் கடன் இல்லாமல் நடந்தது. ஒரு சிறு வீடு சொந்தமாகியது.  பிள்ளையின் தாக்குர்ஜி பக்தியாலும்,  கடும் உழைப்பாலும்  டீக்கடை ஒரு ஹோட்டலாகியது.   நல்ல  வியாபாரம்.
வருஷம்  17  ஓடிவிட்டதே.   முதுமையில்  அவள் நோய்வாய்ப்பட்டாள் . முடிவு நெருங்கிவிட்டது என்று உணர்ந்தாள்.  அது தான் பெரியவா சொன்ன  ''17 வருஷத்துக்கு'' அர்த்தமா?
என்  கஷ்டமெல்லாம் நீங்கி கடைசியில் முடிந்து  அவர்  பாதம் சேருவேனா?''  இரு கரத்தாலும் கண்ணீர் மல்க  தாக்குர் ஜியை வேண்டினாள். உயிர் பிரிந்தது.   அவள் மறைந்ததும்  பாத்திரத்திலும்  எண்ணெய் சுரப்பது  நின்று விட்டது. ''
ஹோட்டல் முதலாளி தமிழ் நண்பருக்கு  அந்த எண்ணெய் பாத்திரத்தை  காட்டிய தும்  இருவரும் மஹா பெரியவா படத்தை  வணங்கினார்கள்.   முதலாளி  தான் காஞ்சிபுரத்துக்கு சென்று  அவரை நேரில் தரிசனம் செய்ததை நினைவு கூர்ந்தார்.  பெரியவாளிடம் கடகடவென்று  17 வருஷங்களாக நடந்ததை சொன்னார். பிரசாதம்  தந்து அபய  ஹஸ்தம் தந்து  ஆசி தந்தார். மௌன விரதம். ஒன்றும் பேசவில்லை.
''அப்பனே  அந்த தெய்வம் தந்த வாழ்வு இது. இந்த பாத்திரத்தை தெய்வமாகப்   போற்றி வழிபடு. ஒருநாளும் ஒரு   கணமும்  தாக்குர்ஜியை மறவாதே''
என்று   அம்மா உபதேசித்ததை  கண்ணீர் மல்க  நாத்தழுதழுக்க  அந்த  ஹோட்டல் முதலாளி  சொன்னார்.
தமிழர் அவரை கட்டி அணைத்து ''ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர'' என்றார்.    இதற்கு மேல்  பெரியவா பற்றி என்ன புகழ்ச்சியாக சொல்வது ?  வார்த்தை இருந்தால் தானே பேசமுடியும்?
ஜய ஜய  சங்கரா   ஹர ஹர சங்கர

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...