Tuesday, June 23, 2020

ADI SANKARAR



ஆதிசங்கரர் J K SIVAN அற்புத படிகள்
எவ்வளவு எழுதுகிறோம் அது எத்தனை பேரை அடைகிறது என்பதை விட எத்தனை பேருக்கு அதால் பயன் விளைகிறது என்பது தான் முக்கியம். கொஞ்சமாவது மாற்றம் அவர்களில் தெரிந்ததா, தெரிகிறதா? இதை யாரிடமும் சொல்லவேண்டாம். டாக்டர் மருந்து கொடுத்து வியாதியை குணப்படுத்த மருந்து மாத்திரை கொடுத்து வியாதி தீர்ந்த வுடன் நாம் டாக்டரை கூப்பிட்டு ''டாக்டர் வயிற்று வலி இப்போது இல்லை'' என்று சொல்வதில்லை. அவரும் எதிர்பார்ப்பதில்லை. அது போல் தான் இதுவும்.
ஆதி சங்கரர் எவரெல்லாம் நான் சொல்வதை கேட்பார், படிப்பார் புரிந்து கொள்வார் என்று கவலையே படாமல் மேலே மேலே எழுதி தள்ளிவிட்டு போதும் இதுவரை சொன்னது என்று 32லேயே மூட்டை கட்டிக்கொண்டு புறப்பட்டு விட்டார்.
அவரது ''எத்தனையோக்களில்'' இப்போது சாதனா/உபதேச பஞ்சகம் எனும் ஐந்து ஸ்லோகங்களுடன் ஒரு 40 படிகள் நம்மை உயர்த்திக் கொள்ள கொடுத்து வருகிறேன். படிப்படியாக தான் மேலே முன்னேற வேண்டும். மூன்று ஸ்லோகங்களும் 24 படிகளும் தந்தேன். இன்று 4வது ஸ்லோகம் அதோடு இன்னும் 8 படிகள். இதுவரை 32 படிகள். அற்புதமானவை. சறுக்கியே விடாது. மேலே தூக்கிவிடும் தன்மை கொண்டவை. நன்றாக இருக்கிறதா? புரிகிறதா? திருப்தியா?? உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்
அன்பர்களே, உங்களில் சிலர் விடாமல் எனக்கு அவர்களது திருப்தியை வெளிப் படுத் துகிறீர்கள். நன்றி ரொம்ப. அப்படி கருத்து தெரிவிப்ப வர்கள். ஓரிரு வார்த்தைகள் மட்டும் எழுதுங் கள். தொப்பி போட்ட குள்ள நீல கோட்டுக்காரன் விடாமல் எனக்கு கைதட்டுகிறான். வெள்ளைக்காரன் விடாமல் கல்யாண மண்டப கைகூப்பும் பெண் பொம்மை போல் கை தட்ட வேண்டாம். GIF கள் ஆன்மீகத் தோடு ' ஜெல்' ஆகாது. குரங்கோ கரடியோ டமாரம் தட்டுவது வேண்டாம். மலர்ச் செண்டுகள் நிறைய பெறுகிறேன். wfm என்பதன் அர்த்தம் works for me . இது நிறைய விஷயங்க ளுக்கு பொருந்தாத விஷயம். ஜாக்கிரதையாக கையாள வேண்டும். ரெண்டு வார்த்தை போதுமே.. உங்கள் மனத்தை வெளிப்ப டுத்த வார்த்தைகள் பகவான் தந்திருக்கிறானே . நான் பொம்மை களை யாருக்கும் அனுப்பு வதில்லை. ஓரிரு வார்த்தைகள் மட்டுமே பதிலாக தருவது வழக்கம்.
இன்றைய சாதனா/உபதேச பஞ்சக 4வது ஸ்லோகம்.
क्षुद्व्याधिश्च चिकित्स्यतां प्रतिदिनं भिक्षौषधं भुज्यतां
स्वाद्वन्नं न तु याच्यतां विधिवशात्प्राप्तेन सन्तुष्यताम्‌।
शीतोष्णादि विषह्यतां न तु वृथा वाक्यं समुच्चार्यतां
औदासीन्यमभीप्स्यतां जनकृपानैष्ठुर्यमुत्सृज्यताम्‌॥ ४॥
க்ஷுத்வ்யாதிஸ்ச சிகிஸ்த்யதாம் ப்ரதிதினம் பிக்ஷோஷதம் பூஜ்யதாம் ஸ்வாத்வன்னம் ந து யாச்யதாம் விதிவசாட்பராதென சந்துஷ்யதாம் சீதோஷ்ணாதி விஷஹ்யதாம் ந து வ்ரதா வாக்கியம் சமுச்சார்யதாம் ஒள தாஸின்ய மபிப்ஸ்யதாம் ண் ஜன க்ருபா னைஸ்துர் யமுத்ஸ்ர்ஜ் யதாம்
நமது வடலூர் ராமலிங்க அடிகளார் ,வள்ளலா ருக்கு, பசிப்பிணி மருத்துவர் என்று பெயர். இன்றும் வடலூரில் அவர் ஏற்றிய அடுப்பு எரிந்து கொண்டிருக் கிறது. வருவோர் போவோர் எவர்க்கும் எந்நேரமும் அன்னம் அளிக்கிறது. எவர் எப்போது அங்கு நுழைந் தாலும் முதலில் கை கால் அலம்பிக்கொண்டு இலையில் சுடசுட ரசம் சாதமோ மோர் சாதமோ சாப்பிட்ட பிறகு தான் அடுத்த வேலை. அந்த அற்புத அனுபவம் எனக்கு உண்டு.
அன்றாடம் கொஞ்சம் எவர் பசியாவது தீர்ப்போம். ருசியான உணவை விட பசிக்கு கிடைத்த உணவு அமிர்தமாக இருக்கும். இதில் சூடானது என்ன, ஆறினது என்ன? என்ற கொள்கை கொண்டவர் வள்ளலார். அதனால் பசி எனும் நோயை தீர்ப்பவர் என்ற பெயர் அவரை சேர்ந்துகொண்டது. இன்றைய எட்டு படிகள்.:
25. பசி என்னும் நோயை உன்னால் முடிந்தவரை தீர்த்துவிடு.
26. தானமாக கிடைத்த உணவு இருக்கிறதே அது தான் பசி நோய் தீர்க்கும் மருந்து
27. அங்கே மிளகாய் பஜ்ஜி, இங்கே மசால்வடை நன்றாக இருக்கும் என்று தேடி ஓடாதே. நாவை அடக்கு.
28. பகவானே இன்று படி அளந்த உனக்கு நன்றி என்று கிடைத்ததை நன்றிஉயோடு ஏற்றுக் கொள்.
29. அவன் தான் கோடை வெயிலில் வாட்டுப வனும், குளிரில் நடுங்க வைப்பவனும். அவனுக்கு தெரியும் எதை எப்போது கொடுக்க வேண்டும் என்று. சமமாக ஏற்றுக்கொள்.
30. பொறுமை தான் ஒரு வனுக்கு பூஷணம். இதை மறக்காதே.
31. சுக துக்கங்கள் வெளி உலகில் இல்லை. மனதில் தான் உருவாகிறது. மறக்காதே.
32. கருணை தயை, இரக்கம் இல்லாத இதயம் இருந்தும் பயனில்லை.
எவ்வளவு சுலபமாக இதுவரை 32 படி உயரம் வளர்ந்து விட்டோம். இன்னும் எட்டே எட்டு படி தான் இருக்கிறது நாம் உபதேச /சாதன பஞ்சகம் முழுதும் அறிவதற்கு.
அதற்கு அப்புறம்? இந்த காதில் வாங்கி அந்த காதில் விடுவதற்கா பாவம் ஆதி சங்கரர் இப்படி கஷ்டப்பட்டு ஓலையில் ஆணியால் குத்தி எழுதினார் ? அதை கடைப்பிடிப்பது ஒன்று தான் நமக்கு பாக்கி.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...