Sunday, June 21, 2020

PESUM DEIVAM

பேசும் தெய்வம்  J K  SIVAN  

                                 ஒரு பிரசவ அதிசயம்  

மஹா பெரியவா பற்றி எழுதும்போது எல்லா அதிசயங்களும் எனக்கு மட்டும் தெரிந்ததாகவே இருக்க முடியாது. எத்தனையோ பேர் எங்கோ தேடி பிடித்து, தங்கள் அறிந்த, தமக்கு தெரிந்த வற்றை பல பத்திரிகைகளில், மீடியாக்களில் தெரிவித்து அது கசிந்து எனக்கும் கிடைத்து அதை உங்களுக்கு நான் என் வழியில் பரிமாறியும் வருகிறவன். 

மஹான்கள்  எல்லோருக்கும்  பசுவைப்  பிடிக்கும். மஹாத்மாக் களுக்கு  பசு  தெய்வம்.  மக்களுக்கு ,  பசு தாய். மற்றவர்களுக்கு  அதாவது மனித மாக்களுக்கு  அது ஒரு சாதாரண விலங்கு.... நாம்  மாக்கள் நிலையிலிருந்து மஹான்களாக பல வழிகளில்  பசு நேசம், வழிபாடு அவசியம். ரமணரிடம் லக்ஷ்மி  என்ற பசு கடைசிவரை இருந்தது. ரமணாஸ்ரமத்தில் தனி சந்நிதியே இருக்கிறது லக்ஷ்மிக்கு.

கிருஷ்ணன் பசுக்களோடு புரண்டு விளையாடி அவற்றோடு வாழ்ந்தவன்.  கோ என்றால் பசு.   கோவிந்த னையும் கோவையும் பிரிக்க முடியாது.  கோசாலை நடத்தும் அநேகர் புண்யம் செய்தவர்கள்.  அய்னாவரத்தில்   மெட்ராஸ்  பிஞ்சராபோல் என்றபஞ்சாபி  கோசாலை  நூறு வருஷங்களுக்கு மேலாக  இருக்கிறது.  ரெண்டாயிரத்துக்கும் மேல் பசுக்கள் அழகாக பராமரிக்கப்பட்டு  இன்றும் வளர்கின்றன. அநேகம் அதில் வெட்டுக்கத்திக்கு தப்பியவை. அனாதையாக விடப்பட்டவை.   மறுவாழ்வு பெற்ற  பசுக்களில் சில  நூற்றுக்கணக்கான கன்றுக்  குட்டிகளின் தாய்கள் . பசுவின் உடலில் முப்பத்து முக்கோடி தெய்வங்கள் உண்டு  என்ற நம்பிக்கை ஹிந்துக்களுக்கு உண்டு.  நினைத்ததை தரும் பசு காமதேனு ஒரு தெய்வம். 

கோ தர்சனம் கோடி ஜன்ம சாபல்யம் என நம்புகிறோம்.  அதாவது  விடிந்ததும்  கண்  விழித்து முதலில்  பசுவைப் பார்த்தால்  பல ஜன்ம பாவங்கள்  விலகும் என்பது ஐதிகம்.

மஹா  பெரியவா முக்யமாக  தங்குவது  கோசாலைகளில் தான்.  காஞ்சிமடத்தில்  கோசாலை  உண்டு.  மஹா  பெரியவா பேசும்போதெல்லாம்  கோ சம்ரக்ஷ்ணம் பற்றி  பேசாத நாளே கிடையாது.  மடத்தில் அவர் வாழ்ந்த காலத்தில்  தினமும்   விடியலில்  கோ தரிசனத்துக்கு பிறகு தான்  நித்யாநுஷ்டானம்.  வெளியில் செல்லும் இடங்களில்  அவர்  கேம்ப்  போடுவது  பசுக்கள் இருக்கும் கொட்டகைகளில் மட்டுமே.  


ஒரு சமயம்  காஞ்சி மட   பசுக்கள் கொட்டிலில்  ஒன்று  நிறைமாத கர்ப்பமாக  இருந்தது. பிரசவிக்க காலம் ஆகியும்  வேதனையில் அதால்  கன்றை  ஈன்றெடுக்க இயலவில்லை.   என்ன காரணம் என்று  புரிபடவில்லை. தாய்ப்பசுவின் அவஸ்தை அதிகமாகியது. கண்களில் நீரோடு  கத்தியது. மூச்சு இரைத்தது. இரை  எடுக்க வில்லை. 

 மடத்தில் பசுக்களை  அடிக்கடி  கால்நடை மருத்துவர்கள் கவனித்து வந்தார்கள்.  வழக்கமான  மருத்துவர் முகத்தில் கவலை.  அவரால்  விடை காணமுடியாமல் மற்ற பெரிய அனுபவஸ்தர்களான  மருத்துவர்கள் வந்தார்கள். அவர்களாலும்  பரிசோதனை பண்ணி  பிரசவம் காலதாமதம் ஆவதை தடுக்கமுடியவில்லை. ஆறு டாக்டர்களும்  கலந்தாலோசித்து  ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்கள்.  ''பசுவின் வயிற்றில் கன்றுக்குட்டி இறந்துவிட்டது''ஆகவே  அதன் வெளியே  தள்ள முடியவில்லை...  அதை வெளியே எடுக்காவிட்டால் பசுவின் காலம் முடிந்துவிடும்.   பசுவுக்கு அறுவை சிகிச்சை செயது தான்  இறந்த கன்றுகுட்டியஹே வெளியே எடுக்க வேண்டும்... பசு தாங்குமா?  என்ன செய்வது? மடத்து அதிகாரிகளிடம் விஷயம் சொல்லப்பட்டு  என்ன செய்வது,  விரைவில்  முடிவெடுக்க வேண்டிய விஷயம். டாக்டர்கள் அறுவைக்கு தயாராகிவிட்டார்கள். எப்படி பெரியவா கிட்ட இந்த விஷயம் சொல்வது ? யார் போய் சொல்வது?  இதுவரை இப்படி ஒரு சம்பவம் நடந்ததே இல்லையே?.

பசுவின் உயிருக்கு  ஆபத்து என்கிற விஷயம்  இப்போது முக்கியம். கன்றுக்குட்டி போய்விட்டது.. மஹா பெரியவாளுக்கு கட்டாயம் தெரிந்தே ஆகவேண்டும்.  ஆகவே  பெரியவாளிடம் தயங்கி தயங்கி விஷயத்தை போட்டு உடைத்தார்கள்.

அவர்கள்  சொன்னதையெல்லாம்   அமைதியாகக் கேட்ட பரமாசார்யர்  ஒன்றும்  பதில் பேசவில்லை.  தனது  அறையில் இருந்தவர்  இருக்கையை விட்டு எழுந்தார்.   நேராக விடுவிடுவென்று பசு கொட்டகைக்கு சென்றார்.    பசுவின் எதிரே பலகையை போட்டுக்கொண்டு  கீழே  அமர்ந்தார்.   எதிரே கண்களில் நீரோடு கதறும் பசு.  நேரே  மஹா பெரியவா த்யானத்தில் கண்மூடி சிலையாக  பிரார்த்திக்கிறார்.

பத்து பதினைஞ்சு நிமிஷத்துக்கு அப்புறம் கண்ணைத் திறந்தவர் வேற எந்தப் பக்கமும் கவனத்தை திசை திருப்பாமல் , பரிதாபமா வேதனைப்படும் பசுவையே உற்றுப்  பார்த்தார் . இமை கொட்டவில்லை . எல்லோருக்கும்  பரபரப்பு. என்ன நடக்கப்போகிறதோ என்ற எதிர்பார்ப்பு. கவலை.

மஹா பெரியவா கற்சிலையாக பேசுவின் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தார். காந்தத்தால் கவரப்பட்டது போல் அதுவும் அவரையே நோக்கிக்கொண்டிருந்தது. கதறல் அலறல் முனகல் முக்கால் நிற்கவில்லை.

கிட்டத்தட்ட  கால் மணிநேரம்  இப்படியே கழிய  அப்போது  அங்கே ஒரு ஆச்சர்யம் நிகழ்ந்தது.  அது தான் இந்த கட்டுரையின் கரு. 

இதுவரை நிலைகொள்ளாமல்  அசைந்து   ''அம்மா '' என்று ஓயாமல் அலறிக்கொண்டிருந்த  பசு அலறலையும்
 அசைவையும் குறைத்துக்  கொண்டது.   சௌகர்யமாக  ஒரு இடத்தில் நின்று கொண்டது.  ஒரு பெரிய முக்கல் முனகல்.    வயிற்றிலிருந்து எதையோ  தள்ளியது.  அதை தொடர்ந்து  சில நிமிஷங்களில்  அதன் வயிற்றில்  தொடர்ந்து அசைவுகள்.  கொஞ்சம் கொஞ்சமாக  கன்றுக்குட்டி பிரசவம் இயற்கையாக  அங்கே நடந்து கொண்டிருந்தது.   கன்றுக்குட்டி  வெளியே தெரிய ஆரம்பித்தது.   சில  நிமிஷங்கள் இப்படியே  கழிய  ஒரு  அழகிய  பசுங்கன்று   பூமியில்  விழுந்தது.  சற்று நேரத்தில் அது தனக்கே இயற்கையாக உரிய  துள்ளலுடன் மிரள மிரள விழித்தது.  அதன் கண் அழகை இன்றெல்லாம் பார்க்கலாம்.  தட்டு தடுமாறி  தள்ளாடி ஒரு வழியாக தனது நான்கு கால்களிலும் நின்றது.  தாய் ஆசையாக அதை நக்கியது.  கன்று தாய் மடியை தேடி  முட்டி முட்டி  பால் குடித்து நுரை,   அதன் வாயில்  வெள்ளையாக  பஞ்சு போல், பனி போல்,  வழிந்தது.  ஆனந்தத்தின் உருவம் அந்த சிறிய அழகிய  புது உயிர். 

இதுவரை வேதனையில் தவித்த பசுவின் கண்களில் எல்லையில்லா நன்றிக்  கண்ணீர்.   எதிரே  அமர்ந்
திருந்த பெரியவாளை ல் தேங்க்ஸ்  சொல்ல முடியாமல்  பார்த்துக்கொண்டே இருந்தது.  

ஆறு டாக்டர்களுக்கும் நடந்தை நம்பவே முடியவில்லை.   அதிசயம் தந்த அதிர்ச்சி.  அவர்கள் பல வருஷ அனுபவத்தில் இப்படி ஒரு அதிசயத்தை கண்டதில்லை. கன்றுக்குட்டி  பசு வயிற்றிலேயே  இறந்துவிட்டது என்பதில் ஒருவருக்கும்  ஐயமே இல்லையே. பிறகு எப்படி??? எப்படி உயிர் வந்தது அதற்கு ?

அறிவியலுக்கும் மருத்துவ ஞானத்துக்கும் எட்டாத ஆச்சரியத்தோடு  அவர்கள் திண்டாட, மஹா பெரியவா அசைந்தார். 

 இதெல்லாம் ஒரு ஆச்சரியமா?   என்கிற மாதிரி  மெதுவாக  எழுந்த  மஹா பெரியவா  வழக்கமாக  தடவிக்   கொடுக்கும் அந்த  பசுமாட்டை நெருங்கி  அதன் கழுத்தை   ''என்னம்மா  சுகப்பிரசவமா??''  என்று கேட்டு   ஆசையாக  தடவிக் கொடுத்தார்.  சில நிமிஷங்கள் தான்.  பிறகு எதுவுமே நடக்காத மாதிரி திரும்பி தனது அறைக்குள் சென்றுவிட்டார்.

அந்த ஆறு டாக்டர்களுக்கும் ஒன்று  கண்கூடாக விளங்கியது.   ''இது தெய்வத்தால் மட்டுமே செய்ய முடிந்த செயல். மனித யத்தனத்துக்கு அப்பாற்பட்ட அற்புதம்''  பெரியவா சென்ற திக்கை கீழே விழுந்து வணங்கினார்கள் . 

மடத்தில்  பெரியவாளை அனுபவித்த   பண்டித  பக்தர்கள் சிலர்  சொல்வது காதில் விழுகிறதா?

"ஸதகோடி காயத்ரீ மஹாமந்திர ஜபம் செய்த மஹான். மகாபெரியவா. பரமேஸ்வரனோட திருவிளையாடல் மாதிரி சாட்சாத் மகேஸ்வர அம்சமான ஆசார்யாளோட எத்தனை எத்தனையோ மகிமைகள்ல இதுவும் ஒண்ணு. இதையெல்லாம் நேர்ல பார்க்கும் பாக்யம் நமக்கு இன்னிக்கு கிடைச்சிருக்கு!"

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...