Friday, June 26, 2020

PESUM DEIVAM




பேசும் தெய்வம்  J K SIVAN

                          நயன  சம்பாஷணை 


வெள்ளைக்காரன்  காலத்திலேயே  1893லேயே  விவேகானந்தர் மனத்தில் ஒரு  கவலை இருந்தது. 

''வெள்ளைக்காரன், அந்நியர்  வரவால்  ஹிந்து கலாச்சாரம், புராணம், வேதம், சாஸ்திரம், இதிகாசம், தெய்வ பக்தி, ஆன்மிகம், எல்லாமே கொஞ்சம் கொஞ்சமாக அழியப்போகி றது....

''ஹிந்துக்கள் ஆகிய  நாம் நமது   ரிஷிகள், மஹான்கள் நமக்கு  விட்டுவிட்டுப்போன  சொத்தை  மதிப்பு தெரியாமல்  புறக்கணிக் கிறோம், பராமரித்து வளர்க்க தவறுகிறோம். அதன் பலன் கடுமையாக இருக்கும் ''.

அந்த காலகட்டத்தில் தான் 1894 ல்  காஞ்சி பரமாச்சார்யா தோன்றினார். அந்த எளிய  ஆச்சாரியார் நூறு ஆண்டுகள் வாழ்ந்து எண்ணற்ற  மக்களை சந்தித்து  நாட்டில் பல இடங்களில்   நடந்தும் பல்லக்கி லும்  சென்று  ஹிந்து சனாதன தர்மத்தை போதித்தார் புத்துணர்வு, அளித்தார். அவரைப் பற்றி எழுத எழுத வற்றாத நீரோடையாக  அற்புத தகவல்கள் வந்து கொண்டே இருக்கிறது அல்லவா. 

அப்படிப்பட்ட பரமாச்சார்யா  திருவண்ணா மலை யில் வந்து வசிக்கத்  தொடங்கிய    (பச்சை தலைப்பாகை, தாடி,  கையில் விசிறி,  -- ரமண பக்தர் )  யோகி ராம் சுரத்  குமார் பற்றி சொல்லும்போது    ''யோகி  ஒரு உயர்ந்த மஹான், ரமணரின் கருத்துகள், சித்தாந்தத்தை
 ஆத்ம ஞானத்தை தொடர்ந்து மக்களிடையே  ராமணருக்கு பிறகு    பரப்ப  தோன்றியவர்'' என்று சொல்வார்.   

இந்த வட  நாட்டு  யோகி  இளம் வயதில் இருந்தே  ஆன்மீகத்தில்  வேரூன்றியவர். ஆத்மஞானி.  கங்கையை பக்தியோடு  வணங்கி போற்றுபவர். மணிக்கணக்காக  எத்தனையோ நாட்கள்  இரவு பகலாக  கங்கைக்கரையில் தியானம் செய்தவர். கங்கையின் ஓசை, இருளில்  ஆகாய விண்மீன்களின் அசைவு, ஒளி, இதில்  ஞானம் பெற்று தன்னை மறந்தவர்.  பல இரவுகள் அப்படியே கரையில் படுத்து உறங்கியவர்.  நாம ஜெபத்தில் நேரம் போக்கியவர். 

இந்த  திருவண்ணாமலை  யோகி  எப்போதும்  காஞ்சி  பரமாச்சார்யாவை பற்றி  சொல்லும் போது  பக்தியில் உறைந்துவிடுவார்.  கரைந்து விடுவார். 

 ''இந்த உலகமே அந்த மஹா பெரியவருக் கு
 கடமை பட்டிருக்கு'. நமது வேதங்கள், பண்பாடு, சாஸ்திரங்கள் பக்தி உணர்வு இதெல்லாம் பாதுகாத்து தர என்றே  பிறந்தவர் '  என்பார்.   

யோகியின் திருவண்ணாமலை ஆஸ்ரமத்தில்  அவர் அனுமதித்த முதல் படம்  பரமாச்சார் யருடையது.  அவர் படத்தின் முன்பு ஏற்றப்பட்ட   விளக்கும் என்றும் எரிந்துகொண்டே இருக்கவேண்டும் என்பார்.

இன்றும் அவ்வாறே  அந்த தீபம் ஒளி தந்து கொண்டிருக்கிறது.

ஒரு சம்பவம் சொல்கிறேன். 
காஞ்சி மடத்தில்  அப்போது  இருந்த   ஸ்ரீ  சந்த்ரமௌளி ஒரு தடவை மஹா பெரியவா ளிடம் '  எனக்கு  திருவண்ணாமலை சென்று யோகியை தரிசனம் செய்து வர பெரியவா அனுமதி தர  வேண்டுகிறேன் '' என்கிறார்

''இப்போ வேண்டாம் ''

மறுநாள் யோகிக்கு  ஜென்ம தினம்.    அன்று   காலை  ஏகாம்பரேஸ்வரருக்கு விசேஷ பூஜை அபிஷேகம் ஹோமம் எல்லாம்  ஏற்பாடு  பெரியவா பண்ணி இருந்தார்.

''சந்திரமௌளி  ''இப்போ  கிளம்பு,  திருவண்ணா மலைக்கு போய்  யோகி கிட்ட  ஏகாம்பரேஸ் வரர் விசேஷ பூஜை, அபிஷேக  பிரசாதம் எல்லாம் கொண்டு போய் கொடு''

இதை   நினைவு கூர்ந்து யோகி  '' இந்த பிச்சைக்காரன் மேல்  பரமாச்சார்யாவுக்கு அவ்வளவு காருண்யம், தயை''  என்பார். 

இன்னொரு சந்தர்ப்பம்.
''சந்திரமௌளி ,  ஐநூறு ரூபாயை  மடத்தில் ஆபிஸ் லே கேட்டு வாங்கிண்டு  திருவண்ணா மலை போ.  யோகியை அங்கிருந்து ஒரு  டாக்சியில் அழைச்சுண்டு  கோவிந்தபுரம்  ஸ்ரீ போதேந்திரா அதிஷ்டானம் போ. அங்கே  யோகியை சில மணி நேரம்  நான் தியானம் பண்ண சொன்னேன்னு சொல்லு . அப்புறம் அவரை திருவண்ணாமலையில் கொண்டு விட்டுட்டு  வா ''.
சந்திரமௌளி  திருவண்ணாமலை சென்றபோது  யோகி ஆஸ்ரமத்தில் யாரோ ஒரு டிஸ்ட்ரிக்ட் ஜட்ஜ் அவர் மகளோடு அங்கே யோகியை தரிசிக்க வந்திருந்தார்.  யோகி
எப்போதும்  ''எனக்கு தெரிந்தது ஒண்ணே ஒண்ணு  தான்.  '' ராம் ராம்'' அது தான் எல்லாமே. விடாமல்  நாள் முழுதும் சொல்லிக் கொண்டே  இருக்கவேண்டும். என் குரு எனக்கு அதை தான் உபதேசித்தார். '' என்பார். 
சில பேருக்கு  வேண்டுமானால்  இதில் இதில் நம்பிக்கை இருக்கலாம்.   ஆனால்  பலர் இதை அனுபவித்தி ருக்கிறார்கள்.  கோவிந்தபுரத்தில்  போதேந்திர ஸரஸ்வதி   அதிஷ்டானத்தில்  ராம நாமம்  இரவு பகலாக3  எப்போதும் ஒலித்துக்கொண்டே இருக்கும். 

சந்திரமௌளி  சொன்ன விஷயம்,  மேலும்
 அவருக்கு  பெரியவா  இட்ட  பொறுப்பு பற்றி  கேட்டதும்  யோகி  அசந்து போனார்.  1959க்கு  பிறகு  யோகி திருவண்ணாமலையை விட்டு எங்குமே செல்லவில்லை. 

''அப்பா  அப்பா என்று குருவை, கடவுளை
  தியானிப்பவர்  யோகி.  கண்ணை மூடி தியானித்தார்.   தான் கோவிந்தபுரம் போவதா வேண்டாமா  என்று உத்தரவு தியானம் மூலம் அப்பாவிடம் கேட்டார். 

 ''அப்பா  ஒரு பிக்ஷா டனர். கபாலம் ஏந்துபவர், எப்போதும் இருப்பவர். நான்  காஞ்சிபுரம் போய்  பரமாச்சார்யாவை பார்ப்பதா  கோவிந்தபுரம் போவதா.  ரெண்டும் ஒன்று தான் எனக்கு '' என்றவர்  நேராக  காஞ்சி புரத்து

க்கு  சந்திரமௌளியோடு  கிளம்பிவிட்டார் 

அவர்கள் காஞ்சிபுரம் வந்தடைந்த நேரம், பெரியவா நித்ய பூஜா அனுஷ்டானங்கள் முடிந்து தனது அறைக்கு ஓய்வுக்கு சென்றுவிட்டார். அறைக்கதவு சார்த்தியாகி விட்டது.

''பெரியவா கிட்டே  நான் வந்திருக்கேன்னு  சொல்லுங்கோ'' என்று சந்த்ரமௌளியிடம்  யோகி சொல்கிறார். சந்த்ரமௌளிக்கோ  கலக்கம்.  பெரியவா ''என்னடா நா சொன்னது ஓண்ணு  நீ செஞ்சது ஒண்ணு'' என்று கோபிப்பாரோ?? என்ன செய்வது?

யோகி கொடுத்த தைரியத்தில், மெதுவாக  பெரியவா அறை க்  கதவை மெல்லிதாக தட்டினார் . 
அந்த  திரிகால ஞானிக்கு  நடந்தது எல்லாம் தெரியாமலா இருக்கும்?. அவரே வந்து  யோகிக்கு தரிசனம் தருவார்'' என்று தோன்றியது சந்திரமௌளிக்கு .  நடுக்கம் குறைந்தது. 

உண்மையில் காஞ்சிபுரம்  கோவிந்தபுரம் ரெண்டுமே ஒன்று தான்.   கோவிந்த புர அதிஷ்டானத்தில் இருக்கும் போதேந்திர ஸரஸ்வதி  வழி தோன்றல் தானே   காஞ்சி பரமாச்சார்யா.  

யோகியின் வார்த்தைகளில் சொன்னால்   ''இந்த பிச்சைக்காரன் சாஷ்டாங்கமாக மகா பெரியவா காலில் விழுந்தேன். அவர் இவன் மேல் பெரும் கருணை கொண்டு  ஆசிர்வதித் தார்.  நீ சூர்ய வம்சமா?? என்று கேட்டார் . இந்த பிச்சைக்காரனுக்கு பதில் சொல்ல தெரிய வில்லை''

ரெண்டு யோகீஸ்வரர்களும்  நேருக்கு நேராக சில நிமிஷங்கள் பார்த்துக்கொண்டே இருந் தார்கள்.   நயன பாஷை  அங்கே  நடந்து கொண்டிருக்கும்போது  வாய் பேச்சுக்கு ஏது  இடம்?   நேரம்  நழுவிக்கொண்டே இருந்தது.
யோகி திரும்புகிற நேரம் வந்துவிட்டது.    காமாக்ஷி பிரசாதம் கை நிறைய  தன்னுடைய  ப்ரசாதத்தோடு சேர்த்து அளித்தார் யோகிக்கு.    யோகிக்கு  பரமானந்தம்.  மிகுந்த சந்தோஷத் தோடு  பிரசாதத்தை திருவண்ணாமலைக்கு எடுத்து சென்றார்.
''அண்ணாமலையார்  கோவிலில் பக்தர்க ளுக்கு  இந்த பிச்சைக்காரன் அந்த தெய்வத் தின் ப்ரசாதத்தை அளித்து  பாக்யம் பெற வைத்தான். இந்த பிச்சைக்காரன் மேல் தான் அந்த பரமாச்சார்யாருக்கு எவ்வளவு பாசம், கருணை அன்பு ''   

பெரியவாளிடமும்  யோகியிடமும்  அனுமதி பெற்று இந்த விஷயத்தை சந்த்ரமௌளி  நம் போன்ற பக்தர்களுக்கு கசியவிட்டார்.   

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...