Sunday, June 28, 2020

GOD GIVEN TREASURE




நமக்களித்த பொக்கிஷம் .  J K SIVAN

அண்ணாசாமி  மொறுமொறுவென்று  மூன்றாவது   முருங்கைக் கீரை வெங்காய   அடையையும் சூடாக அவன் மனைவி  செல்லம்மா   அவன் தட்டில் கொண்டு  போட்டதும்   சட்டையை மடக்கி விட்டுக்கொண்டு   ஒரு கை  பார்க்க தயாராகிவிட்டான் .
எதிரே இருந்த மிளகாய்ப்பொடி நல்லெண்ணையை  அடைமேல் குழைத்து தடவி அதை முக்கால் வாசிசிகப்பாக   மறைத்தான்.  கண்களில் நீர் வடிய  சூடாக விழுங்கி சுகமாக பாதிக்கு மேல்  சாப்பிட்டுக்  கொண்டு  இருக்கும்போதா  திடீரென  ஒரு தாங்கமுடியாத பளிச்சென்ற  வலியோடு, வியர்த்துக் கொட்டி, மார்பு அடைத்துக் கொள்ளவேண்டும்?
கண நேரத்தில் கண் இருட்டியது. மூச்சு முட்டியது.  ''செல்லி''   என்று கூப்பிட வாய் திறந்தான் வாயில் வார்த்தை வரவில்லை, சைகையால் அவளை அழைத்தான். அவள் திரும்பி பார்க்காமல் சமையல் அறையில் அடுத்த அடையின் மறுபக்கத்தை அவனுக்கென்று  சூடாக  தோசைக்  கல்லில்  திருப்பிப் போடுவதில் கவனமாக  இருந்தாள் .  ஹாலில்  டிவி யில்  தேவதாஸ் படம் ஓடிக்கொண்டிருந்தது.  கண்டசாலாவின் குரல்  ''உலகே மாயம் ''  என்று இருமிக்கொண்டிருந்தது.
ஒரு  க்ஷணம்  திக்குமுக்காடிய அண்ணாசாமியின் தலை மேசையில் தட்டின்  இருந்த  பாதி அடையின் மேல்
கவிழ்ந்தது  கண்கள் குத்திட்டு நின்றது. பேச்சு மூச்சு இல்லை.  4.47 மணிக்கு மாலை  அடை  சாப்பிட டைனிங் டேபிள் எதிரே  உட்கார்ந்த  அண்ணாசாமி   ண்டரை அடையோடு   5.12க்கு  காலமாகிவிட்டான்.
நான்காவது  அடையோடு அவனை நெருங்கிய செல்லம்மா  திகைத்தாள். ஏன் இப்படி டைனிங் டேபிளில்  தட்டுமேலேயே  சாய்ந்து படுத்துவிட்டார்?
''என்னங்க? ''.  கூப்பிட்டாள் , அசைத்தாள்,  சரிந்தான். அலறினாள்,  வீட்டில் இருந்த அவன் மகன் மகள் சகோதரி எல்லோரும் வந்தார்கள். அப்புறம் என்ன? டாக்டர் வந்து உதட்டை பிதுக்கினார். செய்யவேண்டிய  காரியங்கள் நிறைய இருக்கிறதே.
அதெல்லாம் அவர்கள் கவனிக்கட்டும். நாம்  அண்ணாசாமியைப்   பின் தொடர்வோம்.
அண்ணாசாமி தனது வீட்டை விட்டு எங்கு போய்கொண்டிருக்கிறான்?  
புது இடமாக இருக்கிறதே? ரொம்ப லேசாகி விட்டானே, நல்ல குண்டு தொந்தியும் தொப்பையுமாக இருந்தவன் எப்படி காற்றில்  ஆடும்  துளிர்  இலைமாதிரி அசைந்து நகர்கிறான்.
யார் அவன் எதிரே அவனை நட்போடு புன்னகையோடு  தலைஅசைத்து வரவேற்பது?
 அவர் கையில் என்ன பெரிய பெட்டி.    உற்று பார்த்தான். அட  என் கிருஷ்ணன் தான்.''
''என்ன இது கிருஷ்ணா, எனக்கு ஒன்றுமே  புரியவில்லையே?''
உனக்கு என்னை சந்திக்கும் நேரம் வந்துவிட்டதே''
''நாளைக்கு  மைலாப்பூரில் ஒரு  காம்ப்ப்ளெக்ஸ்  ரெண்டு பில்டிங் கான்க்ரீட் ROOF  போடணும் கிருஷ்ணா. ஆள் எல்லாம் வருவார்கள் எல்லா ஏற்பாடும் பண்ணிவிட்டேன்''  கிருஷ்ணா பிளேட்ஸ் FLATS   என்று பெயர் சூட்டப்போகிறேன்
.என் பெண்  நாட்டிய  அரங்கேற்றம் அடுத்த ஞாயிறு   நங்கநல்லூர்  ரஞ்சனி சபாவில்  ஏற்பாடு பண்ணி யிருக்கிறேன். 
பையன் கார்  டெலிவரி எடுக்கிறான் நாளன்றைக்கு.   
மனைவி  தென்னாங்கூர் போகவேண்டும் என்கிறாள் ஞாயிறன்று அங்கே  நீ  மஹாராஜா.  அப்படி உன்னை  பார்க்க  வேண்டும் என்று   எனக்குக்கூட  ஆசை

.''சாரிடா  அண்ணாசாமி,  டைம் ஆயிடுத்தே''''
என்ன  உன் கையிலே பெட்டி , நான் தூக்கிக்கொண்டு வரட்டுமா?''''
அது உன் சமாச்சாரங்கள் இருக்கிற உன் பெட்டி தாண்டா''
'என் சாமான்களா,  என் துணி பணம், துண்டு வேஷ்டி  புஸ்தகம், சீப்பு கண்ணாடி, சங்கிலி மோதிரம் வாட்ச்  எல்லாமா?
''''அதெல்லாம் உனது என்று யார் சொன்னது? அது இந்த பூமிக்கு சொந்தம்''
''என்ன சொல்றே கிருஷ்ணா?  அப்போ இதிலே என்ன  என் சிந்தனைகளா, ஞாபகமா?''''
அது உனதில்லையே, காலத்துக்கு அல்லவோ சொந்தம்?''
''நான் ரொம்ப கெட்டிக்காரன் சாமர்த்தி யசாலி என்பார்களே, அப்போ  அதில்    என் சாமர்த்தியம், திறமையா?
'''உளறாதே அண்ணாசாமி, அது சமய சந்தர்ப்பம் கொடுத்தது.   அதனிடமே திரும்பி  போய்விடும் '
'''ஓஹோ என் நண்பர்கள்  குடும்பம் அதெல்லாம் போட்டு திணித்து வைத்திருக்கிறாயா, நீ  தந்திரசாலி ஆச்சே?''
''டேய்  அண்ணாசாமி, அதெல்லாம் , வீதி வரை மனைவி, காடுவரை  பிள்ளை  விஷயங் கள் .உனதில் லை யப்பா''

'''என்ன சொல்கிறாய்  கிருஷ்ணா?'' என் மனைவி பிள்ளை குட்டி எல்லாம் .......எனதில்லையா?''''
உன் உடம்பில் இருந்த மனதுக்கு  தோன்றிய உறவு அதெல்லாம்''
' ஆமாம் கிருஷ்ணா  நான் தான் இப்போது உடம்பு இல்லாதவனாகி விட்டேனே. என் உடம்பை அதில் வைத்திருக்கி றாயா?

''''இல்லேடா  அது மண்ணுக்கு சொந்தம். வந்த இடத்துக்கு திரும்பிவிடும்''
''ஆஹா  மலையை கிள்ளி எலியை  பிடித்துவிட்டேன்.  அப்போது உன் கை  பெட்டியில் இருப்பது என் ஆத்மா ''
''தப்புடா  அண்ணாசாமி பையா.  உன் ஆத்மா என்னுடையது. அது எனக்கு அல்லவோ சொந்தம்''
அண்ணாசாமி கண்களில் தாரை தாரையாக கண்ணீர்.     கையெடுத்து கிருஷ்ணனை கும்பிட்டு மெதுவாக தழுதழுத்த குரலில் கேட்டான்:  ''அந்த பெட்டியை திறந்து காட்டு.  என்ன  அதில் ?''''

காலி பெட்டி . உள்ளே ஒன்றுமே இல்லையே.'
' கண்களில் நீர் பெருக கை கூப்பிக் கொண்டே  ''கிருஷ்ணா  எனக்கு என்று ஒன்றுமே இல்லையா?''
''ரொம்ப சரி  நீ சொல்வது  அண்ணா சாமி''''
எது தான் எனக்கு என்று சொந்தம் அப்போது?'''
'கணங்கள். நான் உனக்குமட்டும் அல்ல, உன்னைப்போல் எல்லோருக்கும் அளிக்கும் கணங்கள். அதை நீ அனுபவித்தாய் அல்லவா, அது தான் உன் இன்ப துன்பம் சொந்த பந்தம்  சர்வமும் ''

இறைவன் அளித்த நேரத்தை பொன்னே போல் போற்றி  அவன் அருளால் அவன் தாளை வணங்குவோமா,   வேலை வணங்குவதை தவிர வேறென்ன  வேலை  என்று ஒருவர் அழகாக பாடி இருக்கிறாரே

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...