Friday, July 1, 2022

YAKSHAPRASNAM

 #யக்ஷ_ப்ரஸ்னம்   -  நங்கநல்லூர்  J K  SIVAN


இது எத்தனையோ  ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாக கருதப்படும் ஒரு அற்புத நிகழ்ச்சி. பாண்டவர்களில் மூத்தவன், தர்ம புத்ரன் நீதி நேர்மை, நியாயம் தவறாதவன். பாரபக்ஷம்  அற்றவன், அவனது நான்கு அசகாய சகோதரர்களும் ஒரு விஷ நீர்நிலையில் அதை பாதுகாக்கும்  யக்ஷனின் சொல்லை மீறி பருகி மாண்டுவிட்டார்கள்.  அவர்களைத் தேடி வந்த தர்மபுத்ரன் நீரைப் பருக முயலும்போது யக்ஷன் தடுக்கிறான்.

''தர்ம புத்ரா, உன் சகோதரர்கள் என் சொல்லை கேட்காமல் மாண்டார்கள். நீயும் அவ்வாறு இறந்து போகாதே''

''நீ யார் என்று தெரியவில்லை, இருந்தாலும் உன் சொல்லை மதிக்கிறேன். நான் என்ன செய்யவேண்டும் சொல், ரொம்ப தாகமாக இருக்கிறேன். எனக்கு நீர் கொண்டுவர சென்றவர் கள்  இங்கே வந்து மாண்டு கிடக்கிறார்கள்.  நீ யார் என்ன சொல்லவேண்டுமா சொல்.'' என்கிறான் யுதிஷ்டிரன்.

''என் கேள்விகளுக்கு முதலில் பதில் சொல்லிவிட்டு  நீர் பருகு , விஷம் இருக்காது. சரியான பதில்களை சொன்னால் ஒரு தம்பி பிழைப்பான். ஜாக்கிரதை.
சரி கேள் என யுதிஷ்டிரன் இதுவரை கேட்ட  80 கேள்விகளுக்கு சரியான பதில் திருப்திகரமாக சொல்லிவிட்டான். இன்னும் இருக்கிறது:
81. எது  ஆகாரம் என்று கருதப்படுகிறது சொல்  ?  ஒன்றுக்கு  மற்றொன்று.  எது  உண்கிறதோ அதுவே  மற்றொன்றால் உண்ணப்படுகிறது. அது தான் ஆகாரம்.  82. அப்படியென்றால்  எது விஷம் ?.யாசகம்  வாங்கி அனுபவிப்பது.
 
83. எது  நீத்தோர்க்கு  செய்யப்படவேண்டிய  ஸ்லாக்கியமான  செயல்?
சிறந்த வேதமந்த்ரம் உணர்ந்த  சரியான  பிராமணனுக்கு  அன்னமளித்தல்,
   
84. நேம நியமம்  என்பதை சுருக்கமாக  விளக்கு?அவனவன்  தனக்கு  விதித்த, ஏற்றுக்கொண்ட  ஸ்வதர்மத்தை  விடாமல்  கடைப்பிடிப்பதே. 
85. தர்மம் என்பது என்ன?மனக் கட்டுப்பாடு 
86. சிறந்த பொறுமை  என்று எதைச் சொல்லலாம்?
துன்பம், இன்பம்,  உயர்வு, தாழ்வு, பெருமை, சிறுமை,எது வரினும் நிலை குலையாமல், அடக்கமாக  அமைதியாக எதையும்  சமநிலையோடு  ஏற்பது தன பொறுமையின் சிகரம் என்பேன்..
 
87.  ஞானம்  எது என  கருதுகிறாய்?
அண்டத்தை பிண்டத்தில்  காணும்  அறிவு . சத்யத்தை உணர்வது.
 
88."சமம் "என்ற வார்த்தைக்கு அர்த்தம் சொல் ?
மனத்திற்குள்  அடையும், காணும், வேற்றுமை இன்மை.
 
89. கருணை என்பது?எல்லோரும் இன்புற்றிருக்கவேண்டுவது.

90. எது  நேர்வழி?
எல்லோரிடமும்  மதிப்பும் அன்பும் கொண்ட எளிய வாழ்க்கை.

தொடரும் 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...