Friday, July 8, 2022

samskrams

 #பேசும்_தெய்வம் -   நங்கநல்லூர் J.K. SIVAN


அந்த்யேஷ்டி  

மஹா பெரியவா  பற்றி எழுதும்போது நான் பிரயோ கிக்கும் தலைப்பு ''பேசும் தெய்வம்'' தெய்வத்தை நேரில் பார்த்ததில்லை, அதன் பேச்சை கேட்டதில்லை, கேட்டவர்கள்  சிலரும் அசரீரி யாக கேட்டதாகத் தான் தெரிகிறது.  ஆனால் ப்ரத்யக்ஷமாக தெய்வம் எப்படி இருக்கும், அதன் குரல் எப்படி இருக்கும், அது பேசும் விஷயங்கள் எவ்வளவு அறிவு பூர்வமானவை அற்புத மானவை, எப்படி அதிசயங்களை தன்னுள் கொண்ட ஆழ்ந்த புதையல் என்று அறிவேன்.   

நான் அவர் அருகே நின்று, அவர் பேசியதைக்  கேட்ட வன் . நான் பேச மாட்டேன். அவரைப் பேசவிட்டு கேட்பதில் தனி  ஆனந்தம்.  நிச்சயம் ஆணித்தரமாக சொல்லலாம் மஹா பெரியவா ஒரு பேசும் தெய்வம் தான்.

சுப்பண்ணா வாத்யார் என்று எல்லோருக்கும் தெரிந்த சுப்ரமணிய சாஸ்திரிகள் தொன்னுத்தி ரெண்டா வது வயதிலும்  விடிகாலையில் எழுந்து ஸ்னானம்  பண்ணி,  நித்ய கர்மாநுஷ்டானம் முடித்து தரையில் பத்மாசனம் போட்டு அமர்ந்து ஜபம் பண்ணுபவர். ரொம்ப பேச மாட்டார். தலையில் சிகை  வெள்ளை வெளேரென்று  துளியூண்டு. அதை  லாவி, கெட்டியாக பிடித்து ஒரு சின்ன அழகான மணி முடிச்சு போடுவார்.  உச்சிக்குடுமி சாஸ்திரிகளுக்கு ஒரு தனி தேஜஸை தந்தது. நெற்றி கைகளில், கழுத்தில், மார்பில் விபூதி இல்லாமல்  சாஸ்திரிகளை பார்க்கமுடியாது. பூணல் கூட எல்லோருடையதும் மாதிரி இல்லாமல் வெள்ளை யாக நிறம் மாறாமல் இருக்கும். தினமும் அதை ''அலசி, கசக்கி, தோய்ப்பவர்'' . யாரைப் பார்த் தாலும் பலகாலம் பழக்கம்  மாதிரி சிரிப்பார். 

அன்று  ஏகாதசி, விடிகாலை வழக்கமான கர்மாக்களை முடித்து  வாசலில் பெஞ்சில் உட்கார்ந்தவர் சட்டென்று பின்னால்  சுவற்றில் சாய்ந்தார்...  மூன்று பிள்ளைகளும் சேர்ந்து  ஜாம் ஜாம் என்று காரியம் பண்ணி கரை யேற்றி னார்கள். யாரும் அழவில்லை. கல்யாண சாவு. அனாயாச மரணம்.யாருக்கும் தொந்தரவு கொடுக்க வில்லை.

இப்போது விஷயத்துக்கு வருவோம்.இறந்து போனால்  இந்த தேகத்துக்கு ஏன் கார்யம் பண்ணுகிறோம்?

தேகத்தை விட்டு செல்லும்  ஜீவன் திருப்தி அடைய வேண்டும்.  ஸ்ராத்தம் , திதி, படையல் என்று சொல்வது சரி... உயிரற்ற கட்டை இந்த தேகத்துக்கு எதற்கு காரியம்?
மஹா பெரியவா இதை ரொம்ப  நன்றாக விளக்குகி றார்.
.
”உயிரோடு இருக்கிறவாளுக்கே  உபகாரம் பண்ண முடியலை . செத்துப்போனபின் பிணத்துக்கு என்ன ஸேவை வேண்டிக் கிடக்கு?   
ஏதோ வழக்கமான  ஒரு ஸம்பிரதாயம் என்பதால் செய்யாமல் விட்டால் ஏதாவது ஆகுமோ என்கிற பயம். யார் வீட்டில மரணம் இல்லை?
ப்ரேத ஸம்ஸ்காரம்  எதுக்கு பண்ணறோம்?
அநாதைப்  பிணம் என்றால்  முனிசிபாலிடிக்காரர்கள் அடக்கம் செய்யப் போகும்போது, நாமெதற்கு வலுவிலே தடுத்து,  நாங்கள் அதற்கு  ‘ஸம்ஸ்காரம் ’பண்ணுகி றோம்  என்று இழுத்து விட்டுக்கொள்கிறோம்?
உயிரற்ற  பிரேதம் என்றால் ஒருவித பயம், கூச்சம் ஏன்?  ஏன், எதற்காக நாமாக அனாதைப் பிரேத ‘ஸம்ஸ்காரம் என்று இழுத்து போட்டுக்கொள்ளவேண்டும்.?
உயிர்போன வெறும் கட்டைக்கு   என்ன பரோபகாரம் வேண்டியிருக்கிறது?”

மேலே கேட்டதெல்லாம்  சாதாரமனாக கேட்கும் நல்ல கேள்விகள்.

சாஸ்திரங்கள் என்ன சொல்கிறது? ஜீவன் சரீரத்தை விட்டுப் போய்விட்டாலும்,  அந்த சரீரத்தில், தேஹத்தில் , கண்ணில் ஸூர்யன், வாயில்அக்னி, கையில் இந்திரன் என்றெல்லாம் இருக்கிற தேவாம்சங்கள் உடனே அதனதன் மூலஸ்தானத்துக்கு எப்படி திரும்பிப் போகும்?  பிரேத சம்ஸ்காரம் மூலம்தான்அததை அதன் மூல  ஸ்தானத்துக்கு திருப்பி அனுப்பவேண்டும்.  அபர மந்த்ரங்கள் அர்த்தம் தெரிந்துகொண்டால் புரியும். 

உடலில் ஜீவன் இருக்கும்போது அதற்கு பதினாறு கலைகல். ஜீவனுக்கு  பதினைந்து கலைகள் தேஹத் துக்கு  ஒரு  கலை .  ஆகவே  உயிர் போன பின்னும் ஒரு கலை உள்ள அந்த உடலை ஈஸ்வரார்ப்பண மாக்கு வதற்கு தான் பிரேத ஸம்ஸ்காரம் அவசியம்.

உடலை எரிப்பதை 'அந்த்யேஷ்டி’- அந்திய இஷ்டி – அதாவது ‘இறுதியான வேள்வி’ என்று  சாஸ்திரம் சொல்கிறது.  கர்ப்பம் தரிப்பிலிருந்து ஒரு ஜீவனை ஒவ்வொரு பருவத்திலும் எப்படி சுத்தி பண்ண வேண்டும் என்பதற்காக சாஸ்த்ரங்களில் நாற்பது ஸம்ஸ்காரங்கள் (நன்றாக ஆக்குவது, சுத்தமாக்குவது) உண்டு.  உபநயனம், விவாஹம்  எல்லாமே ஜீவனை அந்தந்த நிலையில் பக்குவப்படுத்த  ஏற்பட்ட ஸம்ஸ்காரங்கள் தான்.

ஜீவாத்மாவுக்கான  40  ஸம்ஸ்காரம்   வாழ்நாளில்  கர்மாக்களை யஞமாக  ஈஸ்வரனிடம் அர்ப்பணிக்க  வழங்கப்பட்டவை..
இப்படி வாழ்க்கையையே யாகமாகப்  பண்ண, ஒருத்த னுக்கு,  மேலே சொன்ன சுப்ரமணிய சாஸ்திரி மாதிரி  வாழ்ந்தவர்  முடிந்த  பிறகு கடைசியில் மற்றவர்கள் செய்கிற யாகம்தான் –அவர் தேஹத்துக்கான   ''அந்தி யேஷ்டி''  ப்ரேத ஸம்ஸ்காரம்.''

பெரியவாளின் விளக்கம் புரிந்ததா?  இன்னும் நிறைய சொல்வேன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...