Sunday, July 3, 2022

swami desikan

 சுவாமி தேசிகன் நங்கநல்லூர் J.K. SIVAN

அடைக்கலப்பத்து பாசுரம் 10& 11

சுவாமி தேசிகனின் பக்தி ப்ரவாஹகமாக அவரது அடைக்கலப்பத்து தொகுப்பில் இன்று 10வ அது பாசுரத்தை அனுபவிப்போம். இந்த பதிவோடு அடைக்கலப் பத்து நிறைவு பெறுகிறது.

ஸ்வாமி தேசிகனைப் பற்றியும் அவர் இயற்றிய நூல்களைப் பற்றியும் கூற எத்தனை வாழ்நாள் எடுத்தாலும் போதாது. அவர் ஒரு யுக புருஷர். ஏதோ முடிந்தவரை அவரைப் பற்றி அப்பப்போ கொஞ்சம் சொல்லத்தான் என்னால் முடிகிறது. முடிந்த போதெல்லாம்நிச்சயம் பகிர்வேன்.

ஒரு ஆமை தன்னை ஆசனமாக தேசிகனை ஏற்றுக்கொள்ள சொல்லி அவர் மறுத்து, பிறகு வரதராஜன் நீ ஏற்றுக்கொள் என்று வற்புறுத்தி அந்த ஆமையை தேடும்போது அது ஒரு கற்சிலையாக மாறியிருந்தது. அந்த கூர்மாசனத்தின் மீது அமர்ந்து தேசிகன் த்யானம் செய்தார், பெருமாளை வழிபட்டார் என்று அறிந்தான். அந்த கூர்மாசன கல்லை 1929ல் சத்யகலம் ஆலயத்தில் ஸ்தாபிக்க ஸ்ரீ அபினவ ரங்கநாத சுவாமி எனும் பரகால மட ஜீயர் பொறுப்பேற்றார். சத்யகலம் ஆலயம் ஒன்றில் தான் தேசிகன் நின்று கொண்டிருக்கிற விக்ரஹம். மற்றெங்கும் அமர்ந்துகொண்டிருப்பவர். இடது கையில் சூரி எழுதிய ச்ருதப்ரகாசிகா ஸ்ரீ பாஷ்ய உரை. மைசூரிலிருந்து 70 கி.மீ. சத்தியகலம். இந்த விஷயம் முன்பே சொல்லி இருக்கிறேன்.

இனி அடைக்கலப்பத்து பத்தாவது நிறைவு பாசுரம்;

''திருமகளும், திருவடிவும், திருவருளும், தெள் அறிவும்,
அறுமை இலாமையும் உறவும், அளப்பரிய அடி அரசும்,
கருமம் அழிப்பளிப்மைப்பும், கலக்கம் இலா வகை நின்ற,
அருள் வரதர் நிலை இலக்கில், அம்பென நான் அமிழ்ந்தேனே ||10|''

சர்வ அழகும் சௌந்தர்யமும் சௌலப்யமும் போதாது என்று சங்கநிதி பதுமநிதி போன்ற அளவற்ற செல்வங்களுக்கு அதிபதியாக விளங்கும் திரு மகள் ஸ்ரீ மஹாலக்ஷ்மி ஹரிபக்தர்களுக்கு எளிதில் அருள்பவள். ஸ்ருஷ்டி ஸ்திதி சம்ஹார கார்யங் களோடு இணைந்தவள். அப்படிப்பட்ட ஸ்ரீ லக்ஷ்மியை மார்பில் தரித்த ஸ்ரீ வரதராஜன் என் மீது கருணை கொண்டு அருள்பவன். அவனை அடைந்து அவனோடு ஒன்றிட வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு போல் என் மனம் விரைகிறது. அவனைச் சரணடைய அவன் தாள்களில் விழுந்து வணங்குகிறேன்.''

''ஆறு பயன் வேறில்லா, அடியவர்கள் அனைவர்க்கும்,
ஆறும் அதன் பயனும் இவை, ஒரு காலும் பலகாலும்,
ஆறு பயன் எனவே கண்டு, அருள் ஆளர் அடியினை மேல்,
கூறிய நற்குண உரைகள், இவை பத்தும் கோதிலவே ||11||

எல்லா ஸ்தோத்ரங்களுக்கும் கடைசியில் ஒரு பல ஸ்ருதி உண்டு. இந்த ஸ்தோத்திரம், மந்திரம், பாசுரம் நீ மனமுவந்து நீ ஜெபித்தால் உனக்கு கைமேல் பலன் கிடைக்கும் என்று சொல்வதோடு அப்படி என்னென்ன பலன் கிடைக்கும் என்றும் சொல்வது தான் பல ஸ்ருதி.
இந்த அடைக்கல பத்து ஒன்றே போதுமே. வேறென்ன வேண்டும் பரமனை அடைய.

இதோ நான் இந்த பத்து ஸ்லோகங்களை சொல்லி வரதன் முன் நின்றேன். அவன் திருவடிகளை அடைந் தேனே . சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் பெருமாள் விஷ்ணுவே தான் ''உபாயம்'' அதாவது அவனை அடைய வழி, கடைசியில் அந்த வழியில் நாம் அடைவதும் அவனையே (உபேயம்).

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...