Thursday, July 7, 2022

ஒரு பாசக் குரல்



 ஒரு பாசக் குரல் -- நங்கநல்லூர் J K SIVAN


நினைத்த காரியங்கள் நடை பெறாமல் போகும்போது மனதுக்கு வருத்தம் உண்டாகிறது. நண்பர்களைப் பார்க்கவேண்டும், பேசவேண்டும், அவர்களோடு நிறைய க்ஷேத்ரங்கள் எல்லாம் கூட்டமாக செல்ல வேண்டும். நிறைய நல்ல நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும். எல்லோருக்கும் நல்ல பொழுதாக போகவேண்டும்.. இப்படி எத்தனையோ வருஷங் கள் கழித்தவனுக்கு ரெண்டு மூன்று வருஷங்களாக நான்கு சுவர்களுக்குள் சிறை வாசம்... கொரோனா பாதகன் கொடுத்த தண்டனை..

ஒருவனுக்கு வயிற்றுவலி, என்னென்னவோ மருந்துகள் டாக்டர் கொடுத்தான் பயனில்லை. ரெண்டு வருஷமாக வயிற்றுவலி... மெஷின் மாதிரி மருந்து சாப்பிட்டுக் கொண்டே வருகிறான்.

டாக்டரிடம் சென்றபோது ''என்ன கோவிந்தன் வயிற்று வலி எப்படி இருக்கிறது..?'
'அப்படியே தான் இருக்கிறது..'
'முன்பு போல் நீங்கள் கவலைப்பட்டு அழுகிறீர்களா. அவஸ்தைப் படுகிறீர்களா?''
அவ்வளவாக அப்படி செய்வதில்லை டாக்டர்..
''குட். வெரிகுட்...
வயிற்றுவலி யோடு வாழ கற்றுக்கொண்டு விட்டீர்கள். அது இனி உங்களுக்கு நன்றாக பழக்கமாகி விட்டது.'' என்கிறார் டாக்டர்.

அதுபோல் கொரோனாவால் நான் தனியனாகி விட்டேன். ஒரே ஒரு உற்சாகம். அதிக நேரம் கம்பயூட்டரில் எல்லோருடனும் பழக, பேச பார்க்க முடிகிறதே. நேர்ல பார்க்கறது போலவே செலவில் லாமல் உற்சாகம்.... பழக்கமாகிவிட்டது. தேங்க்யூ கொரோனா டாக்டர்...

நேற்று அளவிடமுடியாத ஆனந்தம். வெகுநாள் கழித்து அன்பு தோய்ந்த பாசக்குரல்.

''சிவன் சார், சௌக்கியமா?'
'''யாரு அரும்பாக்கம் ஸ்ரீநிவாஸனா... ரொம்ப சந்தோஷம். நீங்க எப்படி இருக்கேள் ?
''இன்னிக்கு நானும் பார்யாளும் 49 வருஷ மணவாழ்க்கை கடந்து கோல்டன் ஜுபிளீ க்குள் தலை நீட்டுகிறோம்...'
''ஓஹோ அப்படியா. ரொம்ப சந்தோஷம்... சொல்லவே இல்லையே''
''மற்றவளுக்கு எல்லாம் வாட்ஸாப் செய்தி. உங்களுக்கு நாங்கள் போன்ல பேசி சொல்லி, உங்களுடைய ஆசீர்வாதம் வாங்கணும் னு பிளான்''
''சபாஷ்..மனமார்ந்த வாழ்த்துக்கள், கிருஷ்ணன் அருள் நிறைய உண்டு. நான் உங்க கனகாபிஷேகத் துக்கு சாப்பிட வருவேன். இப்போவே சொல்லிட்டேன்''
. என்றேன்.
எத்தனையோ கோவில்களுக்கு ஸ்ரீனிவாசன் தம்பதி யோடு காரில் சென்று தரிசித்து இருக்கிறேன். நிறைய கட்டுரைகள் அதைப் பற்றியெல்லாம் உங்களுக்கு எழுதி இருக்கிறேன்.இன்னும் நிறைய நங்கள் சேர்ந்து போக வேண்டும். கிருஷ்ணன் வழிகாட்டினால் ஸ்ரீனிவாசன் கார் ஜம்மென்று அதிவேகத்தோடு அந்த வழியில் செல்லாதா?

ஸ்ரீனிவாசன் போன்ற நல்லிதயங்கள் நூறு ஆண்டுகள் வாழ்ந்தால் அவர்கள் மூலம் எத்தனையோ அற்புத கோவில்களைப் பற்றி அறியமுடியும் அல்லவா?

ஸ்ரீனிவாசனுக்கு 70 வயது பூர்த்தி ஆனபோது நான் அவர்களோடு செட்டிநாட்டில் காரைக்குடி அருகே தேவகோட்டையில் இருந்தோம். அங்கே அற்புதமான மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் அவருக்கு அர்ச்சனை, வடைமாலை கேசரி எல்லாம் ஏற்பாடு செய்தவள் எங்களது அருமை நண்பி தேவகோட்டை வித்யா கிருஷ்ணன். இப்போது மணமாகி கட்டார் என்கிற ஊரில் அரபு நாட்டில் உள்ளாள்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...