Saturday, July 2, 2022

ORU ARPUDHA GNANI

 




ஒரு அற்புத ஞானி   -    நங்கநல்லூர்  J K  SIVAN
சேஷாத்திரி ஸ்வாமிகள்

சேஷாத்ரி ஸ்வாமிகள் எங்கிருக்கிறார், எப்போது எங்கே தென்படுவார் என்பது காற்றுக்குக்  கூட தெரியாது.   அவரை பல பக்தர்கள் தேடிய வண்ணம் இருப்பார்கள்.  அவரைப் பார்த்தாலே கூட  நமது கஷ்டங்கள் தீருமே என்று நினைப்பவர்கள்.  அப்படி இருக்கும்போது ஸ்வாமிகளை நேரில் பார்த்தவர், அவரோடு பேசியவர், அவர் பதிலை, உபதேசத்தைப் பெற்றவர் எவ்வளவு புண்யம் பண்ணவர்கள்!


ஒரு பக்தர்  ஸ்வாமிகளை வணங்கி கேட்டார்:  ''ஸ்வாமி , ஈஸ்வரனை எப்படி தியானம் பண்ணுவது?'' 

  ''இதென்ன கேள்வி?  பலாப்பழத்திலுள்ள பலாச்சுளை போல,  பலாக்கொட்டையை போல பண்ணணும்'' 

பக்தருக்கு புரியாமல் வாயைப் பிளந்ததை பார்த்துவிட்டு  ஸ்வாமியே விளக்கினார்.

''பலாக்கொட்டை  இருக்கு பார்த்தியா, அதை  ஈஸ்வரன் ன்னு  வைச்சுக்கோ. எப்படி அது   தன்னுடைய  பீஜ சக்தியால் அநேக மரங்கள், கோடிக்கணக்கான பழங்களை உற்பத்தி பண்ணுகிறது. அதுமாதிரி  தான்  ஈஸ்வரன்  தன்னுடைய மாயா சக்தியால்  அளவற்ற  ஜீவன்களை உண்டு  பண்ணுகிறான்.   சின்னதும் பெரிசுமாக, தித்திப்பு வேறே வேறே மாதிரி வெவ்வேறு நிறமாக, வெள்ளை, மஞ்சள், வெளிறிய கலர்  என்று  பலாப்பழ சுளையை
பார்க்கிறோமே, அது மாதிரி,   எவ்வளவோ உயிர்களை படைக்கிறான். 

பலாக்  கொட்டை மேலே உறை  இருக்கிற மாதிரி,   ஈஸ்வரன் ஒவ்வொரு ஜீவனையும்  அன்னமயம் முதலான  பஞ்ச கோசங்களை வைத்து மூடி இருக்கிறான்.  

பலாக்  கொட்டை மேலே இருக்கிற  உரையை  எடுத்துட்டு  அதைச் சுட்டு சாப்பிடறோமே. அது போல  பஞ்சகோசங்களை நீக்கணும். அப்போதான் பகவான் தெரிவான்.''

'சுவாமி  சுவாமி  ஆச்சர்யம்  சுவாமி''

''இன்னொண்ணும்  சொல்றேன் கேட்டுக்கோ.   நாம எல்லோருமே   ஒருத்தர் தான். ஒரே ஸ்வரூபம் தான். ஆனால் கண்ணாடியில்   பார்க்கும்போது, நாமும் தெரியறோம். நம்ம ஸ்வரூபமும் கண்ணாடியில் ஒண்ணு  தெரியறது.   அப்போ  ரெண்டாயிடுத்து.   அதுமாதிரி  ஆத்மா ஒண்ணு தான். அதை நிர்மலமான புத்தியில் பிரதிபலிக்க பண்ணினால் தான் ரெண்டா தெரியறது  ஒண்ணுனு  புரியும்.

 தியானத்தில் அனுபவிக்கிறோமே. அதுக்கு என்ன அர்த்தம்? தியானம் பண்றவன், தியானம், யாரை தியானம் பண்றோமோ   இந்த   மூணும் ஒண்ணாயிடணும் . அதை  தான்  த்ரிபுடி என்கிறோம்.   '' ஒன்றறக்''  கலந்து என்று தமிழ் பாட்டிலே வருமே அதுதான்  இது.  


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...