Wednesday, July 20, 2022


 முன்னோருக்கு  ப்ரதியுபகாரம் - #நங்கநல்லூர்_JK_SIVAN 


எப்படி  தினமும் காலை படுக்கைவிட்டெழுந்து பல்தேய்த்தவுடன் முதலில் சூடான  காப்பி அவசியமாகி விட்டதோ, அந்த அளவுக்கு  பிராமணர்கள் காலையில் சீக்ரம் எழுந்து சந்தியாவந்தனம் செய்வது ஒரு பழக்கமாக வேண்டும்.  அதே போல் ஸ்ராத்தம்  தர்ப்பணம் போன்ற பித்ரு கர்மாக்களை விடாமல் செய்ய வேண்டும்.  பித்ரு சாபத்தால் தான் பிள்ளை குட்டி பிறப்பதில்லை. வம்சம் அழிவதைப் போல் கொடுமையான ஒரு தண்டனை கிடையாது.

அப்பா அம்மா  தாத்தா பாட்டி கொள்ளு தாத்தா  கொள்ளுப்பாட்டி என்று மூன்று தலைமுறைகளுக்கு தர்ப்பணம் செயகிறோம், அவர்கள் வசு, ருத்ரன், ஆதித்ய ஸ்வரூபங்களாக  எள்ளும் தண்ணீரும் நம்மிடம் பெற்றுக்கொள்கிறார்கள், தர்ப்பண மந்திரத்தில் ''த்ருப்தியத , த்ருப்தியத , த்ருப்தியதா'' என்று திருப்தி அடையுங்கள் என்று வேண்டிக்கொள்கிறோம்.  அவர்கள் ஆசி ரொம்ப அவசியம்.

காபி குடிக்க டம்ளர் டவரா இல்லாமல் முடியாது என்பது போல  பித்ருக்களுக்கு  த்ரிப்த்தியடையச் செய்ய  அவர்கள் ரூபமாக வந்த பிராமணர்களுக்கு  த்ரிப்தி யாக  தானம்  தக்ஷிணை தருகிறோம்.  இந்த த்ருப்தி  பித்ரு த்ருப்தியாகும். 

தங்கள் வாழ்நாளில்   நாம்  முழுக்க முழுக்க  சந்தோஷ மாக  சகலமும் கொடுத்து  தாம் பட்டினி கிடந்த அப்பா அம்மா தாத்தா பாட்டிகளுக்கு  நாம் உணவளிப்பது வருஷத்தில் ஒரே ஒரு நாள் ஸ்ராத்த திதி அன்று தான். அதை மனமுவந்து செய்ய துடிக்கவேண்டாமா?

வாழ்நாள் பூரா  நமது  சுகத்துக்கு, முன்னேற்றத்துக்கு  பாடுபட்டு  உண்மையாக  உழைத்த  உபகாரம் செய்த உத்தமர்களுக்கு   இது தான்  நமது பிரதியுபகாரம்  இல்லையா?     இதிலுமா அலக்ஷியம்? இது தான் நன்றிக்கடனா?  என்ற கேள்வி நம்மை நாமே கேட்க வேண்டிய அவசியம் உண்டாகிறது. 

இங்கு எவனோ ஒரு பிராமணனுக்கு தக்ஷிணை, ஆகா ரம்  தானம் அளித்தால் எப்படி முன்னோரை அது அடையும் என்ற பகுத்தறிவுக் கேள்விக்கும் ஒரு பதில் சொல்கிறார்கள்.  நாம் எப்படி வங்கியில் யாரிடமோ பணம் கொடுத்தால் அது எப்படி எங்கோ ஒரு தூர தேசத்தில் இருக்கும் பிள்ளைக்கோ பெண்ணுக்கோ அந்த ஊர்  பணமாக போய் சேருகிறது?  வங்கியில் உள்ளவரும் தூர தேசத்து  பெண்ணோ பிள்ளையோ இரண்டும் ஒன்றா?  என்று கேட்பது தான் அந்த பதில்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...