Sunday, March 15, 2020

PESUM DEIVAM




பேசும் தெய்வம்   பாகம் 3  J K SIVAN


                                   பூஜை பண்ணும்போது...         


நான்  இதுவரை சந்திக்காத, வெகு ஆர்வத்தோடு சந்தித்து வணங்க விரும்பும் ஒரு சிறந்த மனிதர்  ஸ்ரீ வரகூரான்  நாராயணன். வரகூர்  என்றவுடன் என் மனதில் நிழலாடுபவன் ஸ்ரீ க்ரிஷ்ணனாகிய நாராயணன், அடுத்தது கிருஷ்ண லீலா தரங்கிணி இயற்றி அளித்த  நாராயண தீர்த்தர். அதற்கு பிறகு வரகூர் நினைவு படுத்துவது இந்த வரகூரானை . அவர் அற்புதமாக எங்கிருந்தெல்லாமோ தேடி மகா பெரியவா சம்பந்தப்பட்ட  சம்பவங்களை அளிக்கிறார்.  அதில் ஒன்று எங்கெல்லாமோ சுற்றி யார் மூலமோ என்னிடம் வந்ததை சற்று சுருக்கு என் வழியில் தருகிறேன்.

ஒரு நவராத்ரி விழா  முடியும் சமயம் சரஸ்வதி பூஜை கொண்டாடுகிறார்கள்.  காஞ்சி மடத்தில் மஹா  பெரியவா வழக்கம்போல ஸ்ரீ சந்திர மௌலீஸ்வரர்  பூஜை  பண்ண பிறகு  சரஸ்வதி பூஜை ஆரம்பம்.

பூஜையின் போது யாரோ ஒரு வைதிகர், பூஜா கல்ப புஸ்தகத்தை பிரித்து படிக்கிறார்.  கிரமமாக  சங்கல்பம்,  ஆவாஹனம்,  பிராண பிரதிஷ்டை , சர்வ அங்க பூஜை  எல்லாம் முடிந்து  சரஸ்வதி அஷ்டோத்ரம் சொல்லும்போது மஹா பெரியவா   ஒவ்வொரு நாமாவளி சொல்லி  ''நமஹ: '' உச்சரிப்பின்  போது  ஒவ்வொரு  புஷ்பமாக அர்ச்சனை பண்ணுகிறார் பெரியவா
.'ஓம் ப்ரஹ்ம ஜயாயை நம:' என்ற  நாமத்தை வைதிகர் உச்சரிக்கிறார்.  அங்கிருந்த எல்லோர்  காதிலும்  கணீரென்று வார்த்தை காதில் விழுகிறது.

மஹா பெரியவா கையிலிருந்து  புஷ்பம்  ஏன் சரஸ்வதி பாதங்களில் விழவில்லை,   எதற்காக அப்படியே  மஹா பெரியவாவின் கை  அந்தரத் தில் நிற்கிறது?

 இதெல்லாம் கவனித்துக்கொண்டே  அஷ்டோத் ரம் சொல்லும் வைதிகர்  ''ஒருவேளை  பெரியவா காதில் விழவில்லையோ? என்று மறுபடியும் அந்த  நாமத்தை சொல்கிறார்.

'ஓம் ப்ரஹ்ம ஜயாயை நம:'

ஹுஹும்.... பெரியவா  கையிலிருந்து  ஏனோ  புஷ்பம் புறப்பட்டு சரஸ்வதி பாதம் சேரவில்லை....
வைதிகர்  திரும்ப திரும்ப   அந்த நாமத்தை சொல்கிறார்...... மஹா பெரியவா புஷ்பத்தோடு  உயர்த்திய  கையோடு  அசையாமல்  இருக்கிறார்...மௌனம்...  அதிர்ச்சி... காரணம் புரியாமல்  உயர்ந்த புருவங்கள்....கவலை... என்ன  ஆயிற்று?''என்ன தவறு நடந்தது?

மா
னேஜர் விசுவநாத அய்யர் காதுக்கு  விஷயம் எட்டி அவர்  பூஜை மண்டபத்துக்கு ஓடி வருகி றார்.

"மறுபடியும் படியுங்கோ..."
வைதிகர், மறுபடியும், 'ஓம் ப்ரஹ்ம ஜயாயை நம:' புஷ்பமும்   மஹா பெரியவா விரல் நுனியிலேயே நிற்கிறது.  கை  புஷ்பத்தோடு உயர்ந்த நிலையில் அசையாமல்.....

இன்னொரு பண்டிதர்  இப்போது குரல் கொடுக் கிறார்.'

ஓம் ப்ரஹ்ம ஜாயாயை நம:'   

அடுத்த கணம்   மஹா பெரியவா கையிலிருந்த புஷ்பம்   சரஸ்வதி தேவியின் பாதத்தை  அடைகிறது. 

இந்த இரண்டு நாமங்களுக்குள்  அப்படி என்ன பெரிய வித்தியாசம்?

ப்ரஹ்ம ஜயாயை நம: என்றால், பிரம்மாவை ஜயித்தவளே , ஸரஸ்வதி  உனக்கு நமஸ்காரம் என்று அர்த்தம்
.
ப்ரஹ்மஜாயாயை நம: என்று,ஒரு 'கால்' போட்டுச் சொன்னால்,பிரம்மாவின் பத்னிக்கு நமஸ்காரம் என்று பொருள்.

இதிலிருந்து என்ன புரிந்துகொள்கிறோம்.? 

அடேயப்பா..... மஹா பெரியவா  ஏதோ  மெஷின் மாதிரி , நம்மைப் போல்,  பூஜை பண்ணுகிறவர் இல்லை...முழுமனத்தையும் பூஜையில் செலுத்தி, அர்த்தம் தெரிந்து, புரிந்து  பூஜை மட்டுமல்ல எதையுமே  சொல்பவர், செய்பவர். 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...