Wednesday, March 25, 2020

NARAYANEEYAM




ஸ்ரீ மந் நாராயணீயம் J K SIVAN
தசகம் 4 (9-15) ஸ்லோகங்கள்
அஷ்டாங்க யோகமும் பலனும்

9. त्वत्समाधिविजये तु य: पुनर्मङ्क्षु मोक्षरसिक: क्रमेण वा ।
योगवश्यमनिलं षडाश्रयैरुन्नयत्यज सुषुम्नया शनै: ॥९॥

tvatsamaadhivijaye tu yaH punarma~Nkshu mOksharasikaH krameNa vaa |
yOgavashyamanilaM ShaDaashrayairunnayatyaja suShumnayaa shanaiH || 9

த்வத்ஸமாதி விஜயே து ய: புநர்மங்க்ஷ மோக்ஷரஸிக : க்ரமேண வாயோக வம்யமநிலம் ஷடாய்ரயை - ருந்நயத்யஜ ஸுஷும்நயா ஷனை :|| 9 ||

ஹே குருவாயூரப்பா, உனக்கு பிறப்பே இல்லை. எங்களுக்கு? உன் திருப்பாதத்தில் மனம் திளைத்து சமாதியடைந்த யோகி ரெண்டு விதத்தில் மோக்ஷம் அடைகிறான். இந்த இப்பிறவியிலேயே இப்பொழுதே உடனே முக்தி (சத்யமுக்தி) அடைபவரும் உண்டு. பூவுலகம் தாண்டி மேலே தேவலோகங்கள் சென்று, தெய்வீகமான பல பிறவிகள் பெற்று பிறகு முக்தியடைவது.(க்ரம முக்தி)


ஹே குருவாயூரப்பா சமாதி நிலையடைந்த உன் பக்தன் என்ன செய்வான்? . உன்னை அடைய வேண்டும் அல்லவா? அது தானே முக்தி நிலை? பிராணாயாமம் செய்து, பிராணனை தன் வயப்படுத்தி - முதுகெலும்பினுள் நடுவில் தாமரைக் கொடி, நூல் போல் மெல்லியதாக இருக்கும் ஸுஷும்னா நாடியின் அடியிலிருந்து
தேகத்தில் உள்ள ஆறு ஆதாரங்கள் வழியாக - மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், அநாஹதம், விசுக்தி, ஆக்ஞை சக்கரங்கள்--வரிசையாக மேலே கிளம்பி-மெதுவாக மேலெழச் செய்து சஹஸ்ராரம் அடைவது தான் க்ரம முக்தி .

10. लिङ्गदेहमपि सन्त्यजन्नथो लीयते त्वयि परे निराग्रह: ।
ऊर्ध्वलोककुतुकी तु मूर्धत: सार्धमेव करणैर्निरीयते ॥१०॥

lingadehamapi santyajannathO liiyate tvayi pare niraagrahaH |
uurdhvalOkakutukii tu muurdhataH saardhameva karaNairniriiyate || 10

லிங்க தே ஹமபி ஸந்த்ய ஜந்ந்தோ லீயதே த்வயி பரே நிராக் ரஹ: | ஊர்த்வலோக்குது கீ து மூர்த தஸ் ஸார்த மேவ கரணைர்நிரீயதே | 10 ||

என்னப்பா உண்ணி கிருஷ்ணா ப்ரம்மலோகம் முதலான மற்ற தேவலோகங்களை அடையும் இச்சை இல்லாத உன் பக்தன் உன்னை அடைய என்ன செயகிறான் சொல்லட்டுமா ? பிராண
னைப் புருவ மத்தியில் கொண்டு நிறுத்திய பிறகு சத்யமுக்தி அடையும் யோகி தனது ஸ்தூல சரீரத்தையம் சூக்ஷ்ம சரீரத்தை யும் ஆஞ்ஞா சக்ரத்தின் மூலமாக கை விட்டு உன்னோடு கலந்து விடுகிறான். இதர காமங்களை விட்டு ஆறு ஆதாரங்களைக் கடந்தபின் லிங்க சரீரத்தையும் விட்டு பரமாத்மாவான தங்களிடம் லயித்துவிடுகிறான் (ஸாயுஜ்ய முக்தியை அடைகிறான்).

க்ரமமுக்தி விரும்பும் யோகி பிரம்மலோகம் முதலிய தேவலோகங்களில் சிறிது காலம் அனுபவிக்க விருப்பம் கொண்டவன் (அதாவது கிரம முக்தியை அடைய விரும்புபவன்) ஐந்து பிராணன்கள், மனது, புத்தி, பத்து இந்திரியங்கள், சித்தம், அஹங்காரம் என்ற இத்தத்துவங்கள் அடங்கிய லிங்க சரீரத்துடனேயே கபால மோக்ஷம் அடைகிறான், சஹஸ்ரார வழியாக (பிரம்மரந்திரத்தின் வழியாக) வெளிக் கிளம்புகிறான்.

11. अग्निवासरवलर्क्षपक्षगैरुत्तरायणजुषा च दैवतै: ।
प्रापितो रविपदं भवत्परो मोदवान् ध्रुवपदान्तमीयते ॥११॥

agnivaasaravalarkshapakshagair uttaraayaNajuShaa cha daivataiH |
praapitO ravipadaM bhavatparO mOdavaan dhruvapadaantamiiyate || 11

அக் நிவாஸர வளர்க்ஷபக்ஷகை - ருத்தராயணஜுஷா ச தைவதை : 1 ப்ராபிதோ ரவிபதம் பவத்பரோ மோத வாந் த்ருவபதாந்தமீயதே | 11 ||

ஹே , பிரபஞ்ச நாயகா, குருவாயூரப்பா, க்ரமமுக்தி தேடும் உன் பக்தனான யோகி, தனது விருப்பத்திற்கேற்ப, சுக்லபக்ஷத்தில், பகலில், உத்தராயண புண்ய காலத்தில்
, தேகத்தை விட்டுவிட்டு சூர்ய கிரணங்கள் மூலம் ஜீவனை வெளியேற்றுகிறான். அக்னி பகல் இவற்றை நிர்ணயிக்கும் தேவதைகள் துணையோடு உத்தராயணத்தில், சூரிய மண்டலம் சென்று துருவன் இருக்கும் லோகத்தை அடைகிறான்.மீண்டும் இந்த பூமியில் பிறப்ப தில்லை. பீஷ்மர் அப்படித்தானே உத்தராயண காலம் வரை காத்திருந்து ஜீவனை வெளியேற்றினார்.

மேலே சொன்ன பிரயாண வழி : க்ரமமுத்தி அடையும் யோகியின் ஜீவனை அக்னி தேவதை தன் லோகத்தின் வழியே அழைத்துச் சென்று பகலுக்கு அபிமானியான தேவதையிடம் ஒப்படைத்து அந்த தேவதை சுக்லபக்ஷ அபிமான தேவதை, உத்தராயண அபிமானி தேவதை மற்றும் ஸம்வத்ஸராபிமானி தேவதைகளின் உதவியுடன் தேவலோக மார்க்கமாக சென்று வாயு தேவனை அடைகிறது. பிறகு வாயு லோக மார்க்கமாக சூர்ய, சந்திர தேவதைகள் லோகம் வழியாக வித்யுல் லோகத்தையும் அடைந்து அப்பறம் யோகியின் ஜீவன் துருவலோகம் அடைகிறது. இது தான் பாதை .

12 आस्थितोऽथ महरालये यदा शेषवक्त्रदहनोष्मणार्द्यते ।
ईयते भवदुपाश्रयस्तदा वेधस: पदमत: पुरैव वा ॥१२॥

aasthitO(a)tha maharaalaye yadaa sheShavaktradahanOShmaNaardyate |
iiyate bhavadupaashrayastadaa vedasaH padamataH puraiva vaa || 12

ஆஸ்தி, தோத, மஹராலயே யதா பேஷவக்த்ர த ஹநோஷ்மணார்த்யதே ஈயதே பவது, பாபரயஸ் ததா வேதஸ: பத மத : புரைவ வா ! 12 )

துருவலோகத்தையடைந்த பிறகு அங்கிருந்து மஹர்லோகத்தை அடைந்த தங்கள் பக்தன் ஆதிசேஷனின் முகங்களிலிருந்து வெளிவரும் விஷாக்னியின் வெம்மையினால் வருந்தும் பொழுதோ, அதற்கு முன்போ பிரம்மலோகத்தை அதாவது சத்தியலோகத்தை அடைகிறான்.

13, तत्र वा तव पदेऽथवा वसन् प्राकृतप्रलय एति मुक्तताम् ।
स्वेच्छया खलु पुरा विमुच्यते संविभिद्य जगदण्डमोजसा ॥१३॥

tatra vaa tava pade(a)thavaa vasan praakR^itapralaya eti muktataam svechChayaa khalu puraa vimuchyate sanvibhidya jagadaNDamOjasaa || 13

தத்ர வா தவ பதே தவா வஸந் ப்ராக்ருதப்ரளய ஏதி முக்ததாம் | ஸ்வேச்சயா கலு புராவி முச்யதே ஸம்விபித்ய ஜகதண்ட மோஜஸா || 13 ||

ஹே குருவாயூரப்பா! நான் புரிந்துகொண்டதை உன்னிடம் ஒருமுறை சொல்லிப்பார்க்கிறேன் என்கிறார் நாராயண பட்டத்ரி.

மேலே சொன்னபடி துருவபதத்தை , மஹர்லோகத்தை அடைந்த உன் பக்தன் க்ரமமுக்தி யோகி அப்புறம் பிரம்மலோகத் திலாவது அல்லது தங்களுடைய விஷ்ணு லோகத்திலாவது (வைகுண்டத்தில்) வெகுகாலம் வாழ்கிறான். மஹாப்பிரளயத்தின் போது ஆதிசேஷனின் தஹிக்கும் அக்னி மூச்சுக்கு காற்றில் இருந்து விலக உன்னை சரண் அடைகிறான். பிரம்மலோகம் செல்கி றான். அல்லது, தன் விருப்பப்படி பிரளயத்திற்கு முன்பே. ஆதி சேஷனின் அக்னி உஷ்ண காற்றை தவிர்த்து, தனது யோகபலத்தால் பிரம்மாண் டத்தைப் பிளந்து கொண்டு பிரம்மலோகம் செல்கிறான்.
(மஹாப்பிரளயம் என்பது பிரக்ருதி காரியங் களான மஹத், அஹங்காரம், ஐந்து தன்மாத்திரைகள் - இவைகள் அதனதன் காரணங்களில் ஒன்றுபடுவதேயாகும்).

14. तस्य च क्षितिपयोमहोऽनिलद्योमहत्प्रकृतिसप्तकावृती: ।
तत्तदात्मकतया विशन् सुखी याति ते पदमनावृतं विभो ॥१४॥

thasya cha kshithipayo mahodhanilth yo mahath prakruthi saptha kavaruthi
tattadaatmakatayaa vishan sukhii yaati te padamanaavR^itaM vibhO ||14

தஸ்ய ச க்ஷிதிபயோ-மஹோதநிலத் யோமஹத்ப்ரக்ருதி-ஸப்தகாவருதீ: |தத் ததாத்மகதயா வியந் ஸு, யாதி தே பத மநாவ்ருதம் விபோ | 14 ||

ஹே, நாராயணா , குருவாயூர் குட்டா, உன்னருளால் எனக்கு புரிகிறது. உன் பக்தன் பிரம்மாண்டத்தின் ஏழு திரைகளை (மண், நீர், தீ, காற்று, ஆகாசம், புத்தி, பரம்) ஒவ்வொன்றாக கிழித்து நுழைகிறான். அவனது ஸூக்ஷம உருவில் உன் விஸ்வரூப லீலைகளை உணர்கிறான். மகிழ்கிறான். உன்திருவடிகளை சேரவேண்டிய இடமாக முயன்று அடைந்து முக்தி பெறுகிறான்.


15 अर्चिरादिगतिमीदृशीं व्रजन् विच्युतिं न भजते जगत्पते ।
सच्चिदात्मक भवत् गुणोदयानुच्चरन्तमनिलेश पाहि माम् ॥१५॥
archiraadigatimiidR^ishiiM vrajan vichyutiM na bhajate jagatpate
sachchidaatmaka bhavadguNOdayaanuchcharantamanilesha paahi maam ||15

அர்ச்சிராதி கதிமி த்ரிஷிம் வ்ரஜன் விச்யு திம் ன பஜதே ஜகத்பதே சச்சிதாத்மக பவத் குணோதயா னுச்சரந்த மநிலேஷ பாஹிமாம் என்னப்பா, வாதபுரீசா, அப்புறம் லேசொல்றேன் கேள். உன் பக்தன் யோகி என்ன பண்ணுகிறான் தெரியுமா? உன்னை அடையும் வழியில் பல வித லோகங் களை கண்டு மகிழ்ந்து,உன் திருவடி சேர்ந்தபின் அவனுக்கு வேறு பிறப்பே கிடையாது. நானும் அப்படி அடைய தான் உன்னை இடைவிடாமல் பாடிக்கொண்டே இருக்கிறேன். என்னைக் காப்பாற்றுவது உன்னால் தானே முடியும்?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...