Thursday, March 26, 2020

DISCIPLINE




                      ஆசாரம்  புரிகிறதா?   J K  SIVAN          


இப்போது  ஏன் என்று புரிந்திருக்குமே?  
 வெளியே போய்ட்டு வந்தா  கால் கை  அலம்பாமல்  வீட்டுக்குள்ளே வராதே. செருப்பெல்லாம் வாசலோடு தான்.   வீட்டுக்குள்ளே வரக்கூடாது.  சமையல் அறைக்குள் பூஜை அறைக்குள்  மற்றவர்  வரக்கூடாது.
 வீட்டு வாசலில் வேப்பமரம்.   விடிகாலையில்  எழுந்ததும் குளி .  படுக்கையை  சுற்றி வை. அதுமேல குளிச்சுட்டு உட்காராதே, படாதே.

பல் தேய்க்காமல், வாய் கொப்பளிக்காமல் காபி டீ   சாப்பிடாதே. எழுந்து  போய்  நன்றாக கை முகம் அலம்பி, பல்லை தேச்சுட்டு வாய் கொப்புளிச்சுட்டு வா  காபி தரேன்.
காப்பி   தண்ணீர்  எல்லாம்  தூக்கி குடிப்பது 

செத்த வீட்டிலே துக்கம் விசாரிச்சுட்டு  நேரா  வீட்டுக்குள்ளே வரக்கூடாது. பின்னாலே போய்  தீட்டு துணியை நனைச்சுட்டு    தலை  முழுகிட்டு அப்புறம் தான் வீட்டுக்குள் நுழையணும்.   
நீரில்லா  நெற்றி பாழ்.  சாம்பல் மஹிமை தெரிந்திருந்தது.  
வாசலில் தினமும் சாணி தெளிச்சு மெழுகி  அரிசிமாவு கோலம் போடுவது .. 
தொடாமல் பேசுவது.

யார் மேலேயும் படாமல் சமைத்து நைவேத்யம் பண்ணிட்டு காக்காய்க்கு போட்டுட்டு சாப்பாடு. வெளியே கண்டதை எல்லாம் வாங்கி சாப்பிடற பழக்கம் கிடையாது.  எச்சில் பத்து பார்ப்பதில்லை. பழைய உணவை வெளியே  வைத்துவிடு  நாய் காக்கை சாப்பிடட்டும். 
இலையில் சாப்பிடும் வழக்கம்.   
ஒருவர்  எச்சில் பண்ணி சாப்பிட்டதை இன்னொருவர்  தொடக்கூடாது, மேலே படக்கூடாது.   எச்சில் பண்ணால்  கையை அலம்பிண்டு வா.  
கெமிக்கல் பௌடர் எல்லாம் பூசிக்கொள்ளமாட்டார்கள். மஞ்சள் தேய்த்து குளிப்பது. 
உலர்ந்த ஆடைகளை  குளித்துவிட்டு அணிவது. பழைய ஆடையை  குச்சியால் தூக்கி பக்கெட்டில் நனைப்பது.  கோவிலில் பேசாமல் இருப்பது. 
தலைமுடி க்ஷவரம் பண்ணிக்கொண்டு வீட்டில் நுழையாமல் துணியை நனைப்பது, குளித்துவிட்டு வீட்டுக்குள் நுழைவது. சஷ்டி, ஏகாதசி .விரதம் அனுஷ்டிப்பது.  
வெளி இடங்களில்  வீட்டில் சாப்பிட்ட இலையை  தானே எடுத்து வெளியே  போடுவது.
புஸ்தகம் பக்கத்தை எச்சில் தொட்டு திருப்பினால்  உதை கிடைத்தது.  சிலர் ரூபாய் நோட்டுகளை எச்சில் தொட்டு எண்ணி பார்த்திருக்கிறேன். எத்தனை பேர் கை பட்ட நோட்டோ? இதெல்லாம் கூடாது என்று திட்டும்போது புரியவில்லை. 
ஓஹோ  கரோனா வந்தபிறகு   இப்போதாவது புரிந்தால் சரி.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...