Saturday, March 28, 2020

LALITHA SAHASRANAMAM








           ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் - (898-917) J.K. SIVAN


vīragoṣṭhīpriyā vīrā naiṣkarmyā nādarūpiṇī ।
vijñānakalanā kalyā vidagdhā baindavāsanā ॥ 167॥

tattvādhikā tattvamayī tattvamartha-svarūpiṇī ।
sāmagānapriyā saumyā sadāśiva-kuṭumbinī ॥ 168॥ or somyā

savyāpasavya-mārgasthā sarvāpadvinivāriṇī ।
svasthā svabhāvamadhurā dhīrā dhīrasamarcitā ॥ 169॥


வீரகோஷ்டீப்ரியா வீரா நைஷ்கர்ம்யா  நாதரூபிணீ |
விஜ்ஞான கலனா  கல்யா விதக்தா  பைந்தவாஸனா || 167 ||

தத்த்வாதிகா தத்த்வமயீ  தத்த்வமர்த்த ஸ்வரூபிணீ |
ஸாமகானப்ரியா  ஸௌம்யா  ஸதாஶிவ குடும்பினீ || 168 ||

ஸவ்யாபஸவ்ய மார்கஸ்தா ஸர்வாபத்வி நிவாரிணீ |
ஸ்வஸ்தா ஸ்வபாவமதுரா  தீரா தீர ஸமர்சிதா || 169 ||


            லலிதா ஸஹஸ்ரநாமம் - (898-917) அர்த்தம்

*898*  வீரகோஷ்டீப்ரியா   वीरगोष्टि-प्रिया -   ஸ்ரீ லலிதாம்பிகை  வீர மாதா அல்லவா.  வீரர்களுடன் சூழ்ந்து தான் காணப்படுவாள்.  வீரம்  என்றாலே  அதிக சக்தி.  ஐம்புலன்கள், உணர்ச்சிகளை வென்றவன் வீரன்.  அவற்றை வெல்வது  போர்க்களத்தில் ஒரு பெரும் படையை வெல்வது போல.  அப்படி வென்றவர்கள் ஜெயித்தவர்கள். வீர கோஷ்டி என்று சொல்லலாம். ஜிதேந்திரியர்கள்.  அப்படிப்பட்ட வீர கோஷ்டிகளை ரொம்ப பிடிக்கும் அவளுக்கு.


*899*  வீரா  -  சக்தி வாய்ந்த சதி  அவள்.  அவள் குடும்ப எ  வீர குடும்பம் தானே. கணவன்  மஹாதேவன். திரிபுராந்தகன். பிள்ளை கணேசன், சிவா கணங்களுக்கு  நாயகன். கணேசன், கணநாயகன்.  கணபதி.  ஆறுமுகன் சூரனை வென்றவன். வீரன். தேவர்களின் சென்னைக்கு அதிபதி. தேவசேனாபதி. அவள் வீரத்துக்கு கேட்கவேண்டும். எத்தனை ராக்ஷஸர்களை வதம்  செய்தவள்.

*900*  நைஷ்கர்ம்யா   -  नैष्कर्म्या   கர்மாவை கடந்தவள் .  அழியப்போகும் ஜீவன்களுக்கு தானே  கர்மா எல்லாம்.  அவள் எல்லாம் கடந்த ப்ரம்மம். 

*901*  நாதரூபிணீ | नाद-रूपिणी    நாதம் என்றால் சிவ சக்தியின் முதல் அசைவு. அதையே  சப்த ப்ரம்மம் என்று வேதம் கூறுகிறது.  ப்ரம்மம்  ரூபமற்றது. அது  ஒலி வடிவாக வழிபடும்போது அம்பாளாக  எதிரே நிற்கிறாள். நாத ப்ரம்மம் ஆகிறாள். ஒளியோடு ஒலிக்கிறாள். அக்ஷரத்திலிருந்து,  அதாவது  சப்தபிரம்மத்திலிருந்து பிரபஞ்சம் உருவாகிறது என்று முண்டாகஉபநிஷத் கூறுகிறது. 

*902* விஜ்ஞான கலனா   विज्ञान-कलना    விஞ்ஞானம் என்பது   பிரம்மத்தை அறியும்  கலை . கலனா  என்பது அந்த வித்தையை தெரிந்து அறிவது. ஞானம் பெறுவது.   அம்பாளை  அறிய  ப்ரம்ம ஞானம் வேண்டும். அதையும் அவளை வேண்டித்தான் பெற முடியும்.   பதினாலு வகை  வித்யை இருக்கிறது.   4 வேதங்கள்,  6  சாஸ்திரங்கள்,  சீக்ஷா , சந்தஸ்,  வ்யாகரணம், நிருக்தம், ஜ்யோதிஷம், கல்பம்.,    பூர்வ   உத்தர மீமாம்சம்,  நியாயம்,  இதிஹாச புராணங்கள்.  இவைகள் தெளிவாக  அறிவுறுத்துவதை அம்பாலின்  ப்ரம்ம சக்தியை. 

*903* கல்யா  कल्या    ரொம்ப  ஸ்ரேஷ்டமான, புனிதமான,  சுபமான, என்று பொருள். அம்பாள்  சர்வ சுபத்தையும் சுபிக்ஷத்தையும் தருபவள். 

*904* விதக்தா  विदग्धा    அம்பாள் புத்திசாலி என்கிறது இந்த நாமம். ஸ்ருஷ்டி, ஸ்திதி சம்ஹார  கிரியைகளுக்கு தேவையான சமயோசிதம், தெளிவு, அறிவு, கூர்மை, அழகு, பாங்கு , நேர்மை, கடினம், துணிவு, போன்ற அனைத்தும் அறிந்தவள் அம்பாள்.

*905*   பைந்தவாஸனா बैन्दवासना  -  பிந்துவை ஆசனமாக கொண்ட சக்தி தேவதை அம்பாள். ஸ்ரீ சக்ரத்தின் மைய பாகம்  பிந்து. மேரு கோணத்தின் உச்சி முனைக்கு நேரான மையத்தில் உள்ளது.  அந்த பிந்து   ''ஸர்வானந்த மயா சக்ரம்  பைந்தவ  ஆசனம்'' என உபாசகர்களால்  மேரு  முக்கோணத்தில்  அறியப்படுகிறது.  ஒன்பதாவது ஆவாரணத்தின்  நாயகி  ஸ்ரீ மஹா த்ரிபுர சுந்தரி.  யோனி முத்திரையால்  வழிபடப்படுபவள். ஷோடசி உபதேசம் பெற்றவர்கள்  அம்பாளை த்ரிகண்டா முத்திரையால் வழிபடுவார்கள். 

*906*  தத்த்வாதிகா तत्त्वादिका    தத்துவங்களுக்கு எல்லை தாண்டியவள். தத்துவங்களால் அறியமுடியாதவள் அம்பாள்.

*907* தத்த்வமயீ  तत्त्वमयी    தத்துவம் என்று இதைச் சொல்கிறோமே அது அம்பாள் தான்.   இருப்பது தத்துவங்கள் உண்டு. அந்தக்கரணம் நான்கு தத்துவங்கள் கொண்டது அதையும் சேர்த்தால்   24 தத்துவங்கள்.

*908*  தத்த்வமர்த்த ஸ்வரூபிணீ |  तत्त्वमर्थ-स्वरूपिणी  -  தத்    அது என்பது  ப்ரம்மம். த்வம்  என்றால் ஆத்மா . ஆத்மாவை அறிதல் தான் தான் பிரம்மத்தை அறிதல், அதுதான் தத்துவம்.   தத்வம்  அஸி  என்று  சாந்தோக்ய உபநிஷத்  சொல்வது நீ அதுவாக இருக்கிறாய் என்று பிரம்மமாக  ஒவ்வொரு ஆத்மாவும் இருப்பதை  குறிக்கும் மஹா வாக்கியம். எது அறிய வொண்ணா நுண்ணியதோ அது தான் சத்யம், அது தான் ப்ரம்மம். ஆத்மா. 

*909* ஸாமகானப்ரியா  सामगान-प्रिया    சாமம்  என்பது சாமவேதத்தை குறிக்கும் சொல். கானம்  என்பது போற்றி பாடல்கள். அம்பாள் ஸ்தோத்திரங்களை ரசிப்பவள் .வேதம் உட்பொருளானவள். இதை அறிந்த ராவணன் சிவனை நெருங்க  சாமானத்தை இசைத்து வரம் பெற்றான். கிருஷ்ணனும்   வேதங்களில் நான் சாமவேதம் என்கிறான்.

*910*  ஸௌம்யா   सोम्या   - சிவனும்  உமையும்  சேர்ந்தது தான் சௌம்யா.   சக்தி சிவன் சேர்க்கை.  நிறையபேர் இதை அறிவதில்லை.   சந்திரன் ஒளி போன்றவள் என்று அர்த்தம் கொண்டு நிறுத்திக் கொள்கிறார்கள்.

*911* ஸதாஶிவ குடும்பினீ   सदाशिव-कुटुम्बिनी  -  அம்பாளுக்கு குடும்பம் உண்டு. சதாசிவனின் குடும்பத்தவள் அம்பாள்  என்ற அற்புதமான  நாமம் அவளுக்கு.   சதாசிவ தத்வம் பிரபஞ்சத்தை பிரம்மத்தின் அங்கமாக உணர்வது.

*912* ஸவ்யாபஸவ்ய மார்கஸ்தா   सव्यापसव्य-मार्गस्था     வலது இடது மற்றும் நடு நிலை வழிகள்.  வேத சடங்குகளில் வலக்கரம் உபயோகிக்கிறோம்.  தாந்த்ரீக வழிமுறைகளில் இடது கரம் உபயோகிப்பார்கள்.  அம்பாளை எந்த வழிமுறையிலும்  பின்பற்றலாம்.  ஆத்மா  உடலை விட்டு  தேவலோகத்தத்துக்கோ, பித்ரு லோகத்துக்கோ  அதன் கர்மபலனை ஒட்டி அடைகிறது. வலதுபுறம் பூணலை போட்டுக்கொள்கைது ஸவ்யம் பண்ணிக்கொள்வது என்று சொல்கிறோம். அது தேவலோக பாதை போகும் வழியை காட்டும். இடது பித்ருலோகம் செல்லும் பாதை அதற்காக பூணலை இடது பக்கம் நோக்கி அணிகிறோம்.  தேவலோக பாதை ஒளிமயமானது.  நல்ல கர்மாக்கள் பண்ணாதவனை  அபசவ்யம் என்று திட்டுகிறோம். இருண்ட பாதை  அது. அம்பாள் எல்லா வழிகளையும்  கண்காணிப் பவள். 


*913* ஸர்வாபத்வி நிவாரிணீ |  सर्वापद्-विनिवारिणी  - அம்பாளை நெருங்கினாள் துர்பாக்யங்கள் விலகும். எல்லா ஆபத்துகளில் இருந்தும்  மீட்பவள்.  ஸவ்ய , அபஸவ்ய  மார்க்கத்திலிருந்து விடுதலை இல்லை.  அவளை சரணடைந்து வழிபட்டால் மலையென வரும் துன்பம் பனிபோல் விலகும். மனது ஒன்றி புனிதமாக அர்ப்பணிக்கும்  பிரார்த்தனை பலன் தரும்.  ஒரு தடவை ஒரு பெண்மணி ரமண மகரிஷியிடம் 

''சுவாமி, நான் நூறாயிரம்  வில்வ  தளங்களோடு பூஜை செய்தேன் ''  என்றாள் . 
''எதற்கு பாவம் ஒரு சில தாவரங்களின் இலைகளை  பிய்த்து  கொடுமை செய்தாய்?   உன்னை  நூறாயிரம் தடவை கிள்ளிக் கொண்டு  பூஜை செய்திருக்கலாமே''  என்றார் 


*914* ஸ்வஸ்தா  स्वस्था   ஸ்வஸ்தமாக இருப்பது  என்றால் இயற்கையாக எந்த உபாதையும் இல்லாமல் உள்ளமும்  உடலும் ஒன்றி சௌக்கியமாக இருப்பவள்.  எவ்வுயிரும்  தானேயாக   இருப்பவள்.  ஒரு தடவை சின்ன குழந்தை விநாயகன் ஒரு பூனையோடு விளையாடி அதன் உடலில் சில கீறல்கள் காயங்கள் உண்டானது.   சற்று நேரம்  கழித்து  அம்மா  பார்வதியிடம் சென்ற போது  அவள் முகத்தில் கை கால்களில் உடலில் கீறல்களும், ரத்த காயங்களும் கண்டு அதிர்ச்சி அடைந்தான். ''அம்மா யார் உனக்கு தீங்கு செய்தது. உன்னை காயப்படுத்தியது?  
'' வேறு யார் நீ  தான்?  அந்த பூனையை துன்புறுத்தினாய். அதன் உடலிலும்  நான் இருக்கிறேனே.  ஆகவே  எந்த உயிர்க்கு துன்பம் விளைந்தாலும் அது எனக்கு விளைந்தது ஆகும். நல்லதும்  அப்படியே'' என்றாள்  உமை.

*915* ஸ்வபாவமதுரா   स्वभाव-मधुरा  -  இயற்கையாகவே  அம்பாள் ம்ருது பாஷிணி.  கவர்ச்சியாக  காந்தமாக  கிரஹிப்பவள்.  ஞானிகளுக்கு ஒளிவிளக்கானவள் .

*916*  தீரா धीरा  - சக்தி ஸ்வரூபம்.  இங்கு சக்தி   வெறும் புஜபலம் அல்ல. ஞான சக்தி. அவள் இச்சா  சக்தி, க்ரியா சக்தி ஞானசக்தி அல்லவா.  அதனால் தானே அவளை திரிசக்தி என்கிறோம்.

*917* தீர ஸமர்சிதா  धीर-समर्चिता  பண்டிதர்கள், கற்றோர்,வித்துவான்கள்  போற்றுபவள்.  சகல ஞானமும் பெற வேண்டுவோர் வணங்கும்  அம்பாள்.
சக்தி பீடம்
                                            திருஈங்கோய்மலை 


ஈங்கோய்மலை  இப்போது திருவிங்கநாதமலை எனும் பெயருடன் திருச்சி – நாமக்கல் சாலையில் உள்ளது. திருவிங்கநாதமலை மரகதாசலஸ்வரர் கோயில் சம்பந்தர் தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலம். காவிரி வடகரைத் தலங்களில் 63வது சிவ க்ஷேத்திரம்.  கரூர் மாவட்டத்தில் குளித்தலையில் காவேரி நதியின்  வடகரையில்  உள்ள சிவாலயம்.   ரிஷி அகஸ்தியர்  ஈயின் வடிவில் வழிபட்ட ஸ்தலம்  இது ரத்தினாவளி சக்தி பீடம்.

இந்த மலைக்கு   மரகதமலை என்றும்  பெயர்.   காவிரியின் தென்கரையிலுள்ள கடம்பந்துறையைக் காலையிலும், திருவாட்போக்கியை நண்பகலிலும், இந்த ஈங்கோயை மாலையிலும் ஒரே நாளில் நடந்து சென்று வழிபடுவது ரொம்ப புண்யம்  என்று நம்பிக்கை. 

நக்கீரதேவ நாயனார் என்னும் பத்தாம் நூற்றாண்டுப் புலவர் திருஈங்கோய்மலை எழுபது என்னும் நூலைப்  பாடியுள்ளார். நான் இன்னும் அதைத் தொடவில்லை.
இவ்வாலய  மரகதாசலேஸ்வரர் பற்றி ஒரு கதை.   ஆதிசேஷனும் வாயுவும்  யார் வலிமை உள்ளவர் என்று போட்டி போட்டு  கடுமையான யுத்தம் இருவருக்கும்.  அச்சமயம், ஆதிசேஷனால் முழுவதுமாக மூடப்பட்டிருந்த மேரு மலையிலிருந்து வைரம், சிவப்பு மணி, மரகதம், மாணிக்கம் மற்றும் நீலம் ஆகியவை சிதறி விழுந்தன. அவ்வாறு மரகதம் வீழ்ந்த இடமே திரு ஈங்கோயில். ஆகவே  சிவன் பெயரும்  மரகதாசலேஸ்வரர்.

ஏனைய மணிகள் வீழ்ந்த இடங்களும் சிவத்தலங்களே: வைரம் திருப்பாண்டிக் கொடிமுடியிலும், மாணிக்கம் திருவாட்போக்கியிலும் (இது திரு ஈங்கோய் மலைக்கு அருகிலேயே உள்ளதாகும்), நீலம் பொதிகை மலையிலும், சிவப்புக் கல் திருவண்ணாமலையில் வீழ்ந்தனவாம்.
பார்வதி தேவி இங்கு சிவனை வழிபட்டமையால், இது சிவசக்தி மலை எனவும் வழங்குகிறது.
மரகத நாதர் பெயருக்கேற்றவாறு,  பச்சை மாமலை போல  பளபளக்கும்  வண்ணம் கொண்ட சிவலிங்கம்.   சிவராத்திரி அல்லது அதற்கு முதல் நாளன்று, ஆதவனின் கதிர்கள் இம்மரகத நாதர் மீது படிகிறது.     கார்த்திகை மாதத்து திங்கட் கிழமையன்று  பக்தர்கள்  இங்கும் அருகே அமைந்துள்ள வாட்போக்கி மலை (சொக்கர்)  கடம்பந்துறை (கடம்பர்) ஆகிய மூன்று சிவஸ்தலங்களையும்  ஒரே நாளில் தரிசிப்பது  விசேஷமாக உள்ளது.  'காலையில் கடம்பர், மதியம் சொக்கர், அந்தி வேளை ஈய்ங்கோ நாதர்' என்ற வரிசையில் தரிசிக்கிறார்கள்.   இக்கோவிலில் திரிபுவனச்சக்ரவர்த்தி எனப்பட்ட வீரதேவர் காலத்து   ஏழெட்டு  கல்வெட்டுக்கள் உள்ளன.  சோழ மன்னர்கள் இத்திருக்கோயிலுக்கு இறையிலி அளித்ததை  சொல்கிறது.

 திருஞான சம்பந்தர் இத்தலத்தைப் பற்றிப் பாடிய பாடல்கள் பன்னிரு சைவத் திருமுறைகளில் முதலாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளன. அவற்றில் ஒன்றினைக் கீழே காணலாம்:

வினையாயினதீர்த் தருளேபுரியும் விகிர்தன்விரிகொன்றை
நனையார்முடிமேல் மதியஞ்சூடும் நம்பானலமல்கு
தனையார்கமல மலர்மேலுறைவான் தலையோடனலேந்தும்
எனையாளுடையான் உமையாளோடும் ஈங்கோய்மலையாரே.
பரக்கும்பெருமை இலங்கையென்னும் பதியிற்பொலிவாய
அரக்கர்க்கிறைவன் முடியுந்தோளும் அணியார்விரல்தன்னால்
நெருக்கியடர்த்து நிமலாபோற்றி யென்றுநின்றேத்த
இரக்கம்புரிந்தார் உமையாளோடும் ஈங்கோய்மலையாரே.

அடியும் முடியும் அரியும் அயனும்
படியும் விசும்பும்பாய்ந் தேறி - நொடியுங்கால்,
இன்ன தெனவறியா ஈங்கோயே ஓங்காரம்
மன்னதென நின்றான் மலை.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...