Sunday, March 8, 2020

KALA BAIRAVASHTAKAM



காலபைரவாஷ்டகம்   J K  SIVAN 



ஆதி சங்கரர் 
                                               தேவராஜ  சேவ்ய மான...
                                     
இது வரை  கால பைரவர் அஷ்டகம் என்ற தலைப்பில் நிறைய  பைரவர்கள் பற்றிய தகவல்களை சேகரித்து அளித்தேன். இனி  ஆதி சங்கர பகவத் பாதர்  இயற்றிய  காலபைரவாஷ்டகம் ஸ்தோத்ரங்களுக்குள் செல்வோம்.

கிருsஷ்ண பக்ஷ அஷ்டமி  கால பைரவ  வழிபாட்டுக்கு  விசேஷமானது.

சிவ பெருமானை  எப்படி   த்யான  கோலத்தில்  மௌன  குருவாக கல்லால  மரத்தினடியில்  தக்ஷிணாமுர்த்தியாக   காட்சியளித்து வழிபடுகிரோமோ  அது போல்  அவரை ரௌத்ராகாரமாக  ஆதி மூல   கால  பைரவராகவும்  வழிபடுகிறோம். கோபமிருக்கும் இடத்தில் குணமுண்டு. பைரவர் கோபம் பக்தர்களிடம் இல்லை. பக்தர்களுக்கு  இடையூறாக இருப்பவர்கள் மீது.  காருண்ய மூர்த்தி கால பைரவர்.
காசி நகரத்தின் காவலனாக உள்ளவர் காலபைரவர். தோஷங்கள்  நுழையாத  ஊர்  காசி. காலபைரவரை தரிசிக்காமல் காசிக்கு போனால் ஒரு பலனுமில்லை.  சதியாக  தக்ஷனின் யாகத்தில் தீக்குளித்த உமையின் உடலைச்சுமந்து சிவன் கோர தாண்டவமாடியது அவள் உடல் சிதறி 51 முக்கிய இடங்களில் விழா அவை சக்தி பீடங்கள் என  போற்றப்படுபவை. ஒவ்வொரு  சக்தி பீடத்தின் வாசலிலும்  காவல் தெய்வமாக  ஒரு பைரவர் நிற்பார். 

கும்பகோணம்  -  திருப்பனந்தாள்  மார்கத்தில்   ஏறக்குறைய   10 -12  கிலோ  மீட்டர்    தூரத்தில்
 சோழபுரத்தில்  64 பைரவர்கள்  மகா  பைரவேஸ்வர  சிவன் கோவிலில்  அருள் பாலிக்கிறார்கள்.
காலத்தை நிர்ணயிக்கிறவர்  கால பைரவர் என்று ஒரு நம்பிக்கை.   ஆலய ரக்ஷகர்  பைரவர். அவரிடம் தான்ஆலயத்தை பூட்டி சாவி கொடுத்து வைக்கவேண்டும், திறக்கவேண்டுமானால் பெறவேண்டும்.  சிவாலயங்களில் இப்படி ஒரு ஏற்பாடு.

லக்ஷோப லக்ஷம்  பக்தர்கள்  இன்றும் மனப்பாடம் செய்து  பாராயணம் செய்யும் ஸ்லோகம்  காலபைரவாஷ்டகம்.  ஆதிசங்கரர்  இயற்றிய  முதல் அஷ்டகம்:

देवराजसेव्यमानपावनांघ्रिपङ्कजं
व्यालयज्ञसूत्रमिन्दुशेखरं कृपाकरम् ।
नारदादियोगिवृन्दवन्दितं दिगंबरं
काशिकापुराधिनाथकालभैरवं भजे ॥१॥

Deva raja sevya mana pavangri pankajam,
Vyala yagna suthra mindu shekaram krupakaram,
Naradadhi yogi vrundha vandhitham digambaram,
Kasika puradhi nadha Kalabhairavam bhaje.  
 1  

'கபாலத்தை  கையிலேந்திய  கயிலைவாசா,  மகா  தேவா, உனது  தாமரைப் பாதங்களை அர்ச்சிப்பவன்  வேறு  யாருமல்ல  ஸாக்ஷாத்  இந்திரன், தேவாதி தேவன்,   உனக்கென்று  ஒரு  தனி  ஆபரணம்,  யாரும்  அணிய  நினைக்காத  அரவ புரிநூல், ,  நாக யக்நோபவீதம்.   ஒளிவீசும்  மகுடம் வைரத்திலோ,  வேறு  எந்த  விலைமதிப்பில்லாத  கல்லோ, மணியோ  அல்ல. வளர்ந்து தேயும்,  பிறைச் சந்திரனே  உனது  ஜடாமுடியில்  ஒரு  கிரீடம்.  முகத்திலோ  சர்வ  சாந்தம்.  கருணை ப்ரவாஹம்  கங்கையோடு  போட்டி போட்டுக்கொண்டு.  மோனத்தில் ஞானமா, ஞானத்தில்  மோனமா  என்று  அறியமுடியாத உன்னை  போற்றிப்  பாடுபவர்  யார் இங்கே  நிற்கிறார்கள்  என   நீ அறிவாயா?   மூடின  கண்  திறந்தால்   தானே  தெரியும்.  திரிலோக  சஞ்சாரி  நாரத ப்ரம்ம ரிஷி.  யோகீ  ஸ்வரர்கள், முநிஸ்வரர்கள் அல்லவோ  சூழ்ந்து நிற்பவர்கள்.  .  திகம்பரேசா,  எண்  திசைகள்  தான்  உனது  ஆடை எனும்படியாக எங்கும்  பரந்த  உருவம்.   பனிமலை சிகரத்தில் ஒன்றாக உன்  தேகம்....காலபைரவா,  காசிகா  புராதிநாதா.  உனக்கு நமஸ்காரங்கள்.''  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...