Wednesday, March 18, 2020

LALITHA SAHASRANAMAM



ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் - .(880 -897) J.K. SIVAN


संसारपङ्क -निर्मग्न -समुद्धरण -पण्डिता । यज्ञप्रिया यज्ञकर्त्री यजमान-स्वरूपिणी ॥ १६४॥

ஸம்ஸாரபங்க நிர்மக்ன ஸமுத்தரண பண்டிதா |
யஜ்ஞப்ரியா யஜ்ஞகர்த்ரீ யஜமான ஸ்வரூபிணீ || 164 ||

धर्माधारा धनाध्यक्षा धनधान्य-विवर्धिनी । विप्रप्रिया विप्ररूपा विश्वभ्रमण-कारिणी ॥ १

தர்மாதாரா தனாத்யக்ஷா தனதான்ய விவர்தினீ |
விப்ரப்ரியா விப்ரரூபா விஶ்வப்ரமண காரிணீ || 165 ||

विश्वग्रासा विद्रुमाभा वैष्णवी विष्णुरूपिणी । अयोनिर् योनिनिलया कूटस्था कुलरूपिणी ॥ १६६॥

விஶ்வக்ராஸா வித்ருமாபா வைஷ்ணவீ விஷ்ணுரூபிணீ |

அயோனிர் யோனி நிலயா கூடஸ்தா குலரூபிணீ || 166 ||

லலிதா ஸஹஸ்ரநாமம் - (880-897) அர்த்தம்

*880* ஸம்ஸாரபங்க நிர்மக்ன ஸமுத்தரண பண்டிதா |सम्सार-पङ्क-निर्मग्न-समुद्धरण-पण्डिता - அம்பாள் நம்மை சம்சார பந்தங்களிலிருந்து விடுவிப்பவள். ஸம்ஸாரம் என்றால் மனைவி என்று அறிவோம். ஆனால் மனைவி மக்களோடு சுற்றங்களோடு வாழ்கிறோமே அந்த உலக வாழ்க்கை தான் ஸம்ஸாரம் . அதில் பொருளீட்டுவது தான் முக்கியமான அம்சம். அதற்காக எதை செய்யவேண்டுமானாலும் தயங்குவதில்லை. அவள் மீது மனதை பதித்தால் அவள் அருளால் இந்த ஸம்ஸார பந்தம் நீங்கும் என்று அனுபவசாலிகளான யோகிகள் கூறுகிறார்கள். கிருஷ்ணன் அர்ஜுனனிடம் சொன்னதை காது கேட்கிறதா? ''அர்ஜுனா, என் மீது மனதை செலுத்தியவனை வெகு விரைவாக நான் பிறப்பு இறப்பு எனும் பெருங்கடலிலிருந்து விடுவிப்பேன் “(Gīta XII.7)

.*881* யஜ்ஞப்ரியா यज्ञ-प्रिया - ஸ்ரீ லலிதை யாகங்களில் பக்தர்கள் அர்ப்பணிப்பதை விரும்பி ஏற்பவள். நவாவரண பூஜை யாகங்கள் அதனால் தான் ஸ்ரேஷ்டமானவை.

*882* யஜ்ஞகர்த்ரீ यज्ञ-कर्त्री - யஞம் என்பது அர்ப்பணிப்பது . எஜமானி. எஜமானனின் மனைவி அவள். யாகத்துக்கு சொந்தக்காரி. நமது வீடுகளிலே வைதிக காரியங்கள் மனைவி இல்லாமல் துவங்க முடியாது. யாகங்கள் மூன்று அக்னியினால், தீயால் உருவாகுபவை . ஆஹவனீயம், காருகபத்யம், தக்ஷிணாக்னி. வீட்டில் உபயோகப்படும் அக்னி. யாகங்களில் மூட்டப்படுவது, மூன்றாவது தென்திசைத்தீ. எல்லாமே களிமண் யாக குண்டத்தில். முற்காலத்தில் நமது வீடுகளில் அடுப்பு களிமண்ணால் செய்யப்பட்டு உபயோகித்தது ஞாபகம் வருகிறதா? இந்த அக்னிகளை வளர்ப்பவன் அக்னிஹோத்ரி.

*883* யஜமான ஸ்வரூபிணீ यजमान-स्वरूपिणी - அம்பாள் எஜமானன் ஸ்தானத்தில் இருப்பவள். சிவனின் அஷ்ட ரூபங்களில் ருத்ர ரூபம் அக்னி. மற்ற ஏழு உருவங்கள் பூமி, நீர், மனது, ஆகாசம், ஆத்மா, சூர்யன், சந்திரன் .யாகத்தீ. அம்பாள் யாகமானவள் . சிவன் அக்னி என்றால் அம்பாள் யாகத்தீ ஸ்வரூபம் அல்லவா?

*884* தர்மாதாரா धर्मा-धारा - வாழ்வதற்கு சிறந்தது தர்ம வழி. அப்படித்தான் வேத சாஸ்திரங்கள் சொல்கிறது. ஒவ்வொருவருக்கும் ஸ்வதர்மம் உண்டு. ஒன்றே எல்லாவற்றுக்கும் எல்லோருக்கும் என்று இல்லை. ரிஷிகள் வாழ்ந்து காட்டிய பாதை. ஆசாரத்தில் இருந்து உருவாவது தர்மம். ஆசாரத்தின் உருவாக இருப்பவன் என்பதால் விஷ்ணு அம்சமான அச்சுதன்.

*885* தனாத்யக்ஷா धनाध्यक्षा - செல்வத்திற்கு அதிபதி குபேரன். யக்ஷர்கள் குபேரனின் உதவியாளர்கள். குபேரனுக்கு அதனால் யக்ஷேஸ்வரன் என்று பெயர். குபேரன் அம்பாள் ஸ்ரீ லலிதையின் பன்னிரண்டு பக்தர்களில் ஒருவன். ஆகவே தான் அம்பாள் குபேரனுக்கு தலைவியாக உள்ளதால் இந்த நாமம் பொருத்தமாகிறது.

*886* தனதான்ய விவர்தினீ - धन-धान्य-विवर्धिनी செல்வத்தையும் அமோகமான தானியங்களையும் அதிகரித்து தருபவள் அம்பாள்.

*888* விப்ரப்ரியா - विप्र-प्रिया - அம்பாளுக்கு கற்றோரை, பண்டிதர்களை ரொம்ப பிடிக்கும். ஆத்ம விசாரத்திற்கு ஞானம் கல்வி அல்லவோ முக்கியமான தேவைகள்.

*889* விப்ரரூபா विप्र-रूपा கற்றோரை, பண்டிதர்களை பிடிப்பது மட்டுமல்ல. அம்பாளே ஞானத்தின் வடிவம் என்று தெளிவாக சொல்கிறது இந்த நாமம். பசு வைக்கோல் முதலிய தீவனங்களில் வளர்கிறது. பிராமணனுக்கு வேதம் சாஸ்திரம், ஜபம், யாக யஞம்,ஹோமம், இதெல்லாம் தான் அவனை வளர்க்கும் ஆகாரம்.
*889* விஶ்வப்ரமண காரிணீ - ī विश्व-भ्रमण-कारिणी - விஸ்வம் என்பது அகிலம். எல்லையற்றது. பிரபஞ்சம் முழுதும். பிரம்மாண்டமானது. ப்ரம்மாண்டத்தில் எத்தனையோ ஐக்கியம். ப்ரம்மம் என்பது சர்வ வியாபியான ஒன்றே. அம்பாளை அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி என்கிறோம். ப்ரம்மம் அவள் தானே. ஆத்மா தான் ப்ரம்மம் ஒவ்வொரு உயிரிலும் இதயத்தில் உள் நின்று அவற்றின் கர்மாவுக்கு தக்கவாறு இயக்குவது.

*890* விஶ்வக்ராஸா- विश्वग्रासा . - பிரபஞ்சத்தை தன்னுள் வைத்திருப்பவள் என்பதை பிரபஞ்சத்தையே விழுங்குபவள் என்று சொல்லலாம் அல்லவா. இந்த நாமம் அந்த அர்த்தத்தை தருகிறது. கதோபநிஷத் இதை கருத்தில் கொண்டு தான் (I.ii.25) மனிதருள் ஸ்ரேஷ்டமானவர்கள் ஆத்மாவின் ஆகாரம் என்கிறது. மரணம் எல்லோரையும் கவ்வுகிறது. ஆனால் ஆத்மாவுக்கு அது தொட்டுக்கொள்ள ஊறுகாய் என்கிறது பிரம்மசூத்திரம். வேடிக்கையாக இல்லை? (I.ii.9)

*891* வித்ருமாபா विद्रुमाभा - பவழ நிறம். சிகப்பாக இருக்கும். ரத்தச் சொட்டு மாதிரி. மாதுளை முத்து மாதிரி அவளது நிறம். நேரில் பார்க்க எவ்வளவு ஆனந்தமாக இருக்கும்? இன்னொரு அர்த்தம் ஞான விருக்ஷம். . ஒரு மரத்திலிருந்து எத்தனை மரங்கள் உருவாகிறது. அம்பாள் ஞான குரு. பக்தர்களை உருவாக்குபவள்.

*892* வைஷ்ணவீ वैष्णवी - விஷ்ணுவின் சக்தி அம்பாள் தான். அதால் தான் அவளுக்கு வைஷ்ணவி என்று பெயர். வைணவர்களின் பெண்பால் என்று அர்த்தம் கொள்வது சாதரணமானது.

*893* விஷ்ணுரூபிணீ - विष्णुरूपिणी - லலிதை விஷ்ணுவின் வடிவம் என்று விஷ்ணுஜ் சஹஸ்ரநாமம் முதலான ஸ்தோத்திரங்கள் போற்றுகிறது. ''நான் பிறப்பு இறப்பு அற்றவன் என்றாலும் என்னுடைய யோக மாயையினால் வெவ்வேறு ரூபங்களாக தோன்றி இந்த பிரபஞ்சத்தை கட்டி மேய்க்கிறேன்'' என்கிறான் கீதையில் கிருஷ்ணன். ... அவன் பசுக்களை பராமரிப்பவன் அல்லவா. நம்மை அப்படி பரிபாலிக்கிறான். அவனே அவள் தானே. ஆகையால் அம்பாளுக்கு இப்படி ஒரு நாமம்.
*894* அயோனிர் - अयोनिः - ஒரு தாய் வயிற்றில் பிறக்காத ஞானம் மிக்க தெய்வீக உருப்பெற்றவள். கர்ப்ப வாசம் அற்றவள்.
*895* யோனி நிலயா - योनि-निलया - முண்டக உபநிஷத் (III.i.3) ''ருக்மசரணம் கர்த்தாரமீசம் புருஷம் ப்ரம்ம யோனிம்'' என உறைக்கும்போது ஒளிமிகுந்த ப்ரம்மம் தான் காரணமாக ஸ்ரிஷ்டிக்கிறது, அதை ஹிரண்ய கர்பன் பரமாத்மா'' என்கிறோம். ப்ரம்ம ஸுத்ரமும் இதையே (I.iv.27) பிரம்மத்தை தான் யோனி, ஆதார காரணம் என்கிறது.

*896* கூடஸ்தா कूटस्था - புரிபடாதது - மாயையினால் தோன்றும் அறியாமை. சம்சாரத்தில் அறியாமையால் தானே உழல்கிறோம்.

*897* குலரூபிணீ - कुल-रूपिणी - உயர்ந்த, சிறந்த சுயநலமற்ற எண்ணங்கள் உடையவர்கள் உயர்குலத்தோர், சக்தி அப்படிப்பட்டவன் அவளுக்கு நம்மை, பக்தர்களை விட்டு வேறு எந்த சிந்தனையும் இல்லையே. இன்னொரு உள்ளர்த்தம் குலா என்றால் மூலாதார சக்ரம். கௌலன் என்றால் குரு. மூன்று வகை அதில். ஜபம், பூஜை, ஹோமம் இதில் சம்பந்தப்பட்டவர் அடித்தட்டு வகை. நடுத்தரம் என்பது தியானம் சமாதி இந்த விதத்தில் ஈடுபடுபவர். ஆத்ம ஞானிகள் ப்ரம்ம வித்யை அறிந்தவர்கள் முதல் ரகம்.அவர்கள் இரக்கம், கருணை, அன்பு, தயை நிரம்பியவர்கள். அம்பாள் முதல் ராகத்தில் முதன்மையானவள் .

சக்தி பீடம்

பர்வதவர்த்தினி-ராமேஸ்வரம் (சேது பீடம்)

இந்தியாவில் இருக்கும் சக்தி பீடங்களில் வட இந்தியாவில் பத்ரிநாத், கிழக்கு பக்கம் பூரி ஜெகன்னாத், மேற்கு பக்கம் குஜராத்தில் துவாரகை தென்னிந்தியாவில் தமிழகத்தில் இராமேஸ்வரம் ஆகியவை வெகு முக்கியமான ஸ்தலங்கள். இராமேஸ்வரம் ஒன்று தான் சிவாலயம் மற்ற மூன்றுமே விஷ்ணு ஸ்தலங்கள்.

இராமநாதபுரம் இராமசுவாமி திருக்கோயில். மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றிலும் சிறப்பு பெற்றது. ராமேஸ்வரம் என்று அறியப்படுவது. பன்னிரண்டு ஜோதிர் லிங்கங்களில் தமிழகத்தில் ஒரே சிவாலயம் இராமேஸ்வரம். அம்மனின் சக்தி பீடங்களில் இது சேதுபீடம் என்று அழைக்கப்படுகிறது.

ராமர் ராவணனை வதம் செய்து சீதையை மீட்டு திரும்புகையில், ராவணனைக் கொன்றதால் உண்டான ப்ரம்ம ஹத்தி தோஷம் நீங்க ராமேஸ்வரத்தில் பரிஹாரம் பண்ண முடிவெடுத்தார். ''ஹனுமா, உடனே நீ காசிக்கு போய் ஒரு சிவலிங்கம் கொண்டுவா'' என்று அனுப்பினார். அனுமன் திரும்ப தாமதமாகி விட்டதால் சீதை ராமேஸ்வரம் கடற்கரையில் இருந்த மணலைக் கொண்டு லிங்கம் செய்கிறாள். அந்த லிங்கம் தான் ராமலிங்கம். அதற்கு பூஜை செயது ப்ரம்மஹத்தி தோஷம் விலகுகிறது.

ஹனுமான் கொண்டு சிவலிங்கம் சீதை செய்த மணல் லிங்கம் அருகே பிரதிஷ்டை செய்யப்பட்டு அதற்கு தான் அன்றுமுதல் இன்றுவரை பூஜைகள் ராமேஸ்வரத்தில் நடைபெறுகிறது.
அனுமன் கொண்டு வந்த லிங்கம் காசி விஸ்வநாதர் என்று பெயர் பெற்றுவிட்டது. அவருக்கு தான் இன்றும் முதல் அபிஷேகம். ராமன் தொழுத ஈஸ்வரன் என்பதால் சிவனுக்கு ராமேஸ்வரம் என்றும் பெயர்.

கிழக்கு பார்த்த ராமலிங்கம். இந்த லிங்கத்தின் மீது அனுமனின் வால்பட்ட தழும்பை காண முடிகிறது என்கிறார்கள். என் கண்ணுக்கு தெரியவில்லை. .

மூலவர் ராம
லிங்கம் சன்னிதிக்கு இடது புறம் காசி விஸ்வநாதர். முன் மண்டபத்தில் இரா மன், சீதை, இலட்சுமணனும் இவர்களுக்கு தெற்கே ஆஞ்சநேயரும் அருள் பாலிக்கிறார்கள். இராமநாதருக்கு வலப்பக்கம் அம்பிகை பர்வதவர்த்தினியின் சன்னிதி அமைந்தி ருக்கிறது.

இங்கே ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்படிக லிங்கத்துக்கு, தினமும் காலை 5 மணிக்கு அபிஷேகம் அற்புதமாக நடைபெறுகிறது. நான் கண்ணார தரிசனம் செய்தேன் . அம்பாள்
பர்வதவர்த்தினி அம்பிகை பீடத்துக்குக் கீழே, ஆதிசங்கரர் ஸ்தாபித்த ஸ்ரீ சக்கரம் அமைக்கப் பட்டுள்ளது. பதஞ்சலி முனிவர் முக்தியடைந்த தலம் இது.

ஒரு சமயம் இக்கோயில் லிங்கம் மணலால் செய்யப்பட்டதல்ல அப்படியிருந்தால் இந்நேரம் அது கரைந்திருக்கும் என்று வாதம் செய்யப் பட்டது. பாஸ்கரராயர் என்னும் அம்பாள் பக்தர் தண்ணீரில் கரையும் உப்பைக் கொண்டு லிங்கம் பிடித்து, அபிஷேகம் செய்தார். '' சாதாரண மனிதன் என்னால் உப்பில் செய்த லிங்கமே நீரில் கறையாதபோது, சீதா தேவியார் பிடித்து வைத்த லிங்கம் எப்படி கரையும்?? என்ற அவர் கேள்விக் கு இன்னும் பதில் இல்லை.

பாஸ்கரராயர் செய்த உப்பு லிங்கத்தை ராம நாதர் சன்னிதிக்கு பின்புறம் இப்போதும் காணலாம். உப்பின் சொரசொரப்பை இப்போதும் அந்த லிங்கத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

பித்ருக்கள் பூமிக்கு கூட்டமாக வந்து தம் சந்ததியினர் அளிக்கும் தர்ப்பணம், ஸ்ரார்த்தம், பிண்டம் முதலான காரியங்களை செய்தவர் களுக்கு தமது ஆசிகளைப் பரிபூரணமாக வழங்குவார்கள். பிதுர் காரியம் செய்ய சிறந்த தலமாக இராமேஸ்வரம் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தலத்தில் உள்ள மூன்றாம் பிரகாரம், உலக அளவில் புகழ்பெற்றவை. இராமேஸ்வர கடல் அக்னி தீர்த்தம் என்றழைக்கப் படுகிறது. சீதையின் கற்பை நிரூபிக்க இராமன் தீயில் இறங்க சொன்னார். சீதையைத் தீண்டிய பாவம் நீங்க அக்னி பக்வான் இத்தலத்தில் நீராடி தோஷம் கழித்தார். இராமநாதசுவாமியின் தலத்தில் உள்ள 22 தீர்த்தங்களிலிலும் நீராடினால் நன்மைகள் நாடிவரும்.

பிரார்த்தனைகளைப் பக்தன் மறந்தாலும் கோயில் தீர்த்தத்தில் நீராடினால் உரிய பலன் கேட்காமலேயே கிட்டும். இறைவனின் அருளும், இறந்தோர்களின் அருளும் பரிபூரணமாக கிடைக்கும் .

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...