Tuesday, October 23, 2018

YATHRA VIBARAM




கண்ணில் ரத்தம்.  1    J.K. SIVAN

​         




இந்த தீபாவளிக்கு  இந்த சிவன் கோவில்!  

ஆச்சு. இன்னும் பத்து பதினைந்து நாளில் ஊரே  கிடுகிடுக்கும்.  எங்கும் காதைப் பிளக்கும் பட்டாசு சத்தம் கதி கலங்க வைக்கும். நம்மை மட்டும் அல்ல.  தீபாவளி தெரியாத வழக்கம் போல் பசியோடு அலையும் 
 வாயில்லா  ஆடு மாடு நாய்  பறவை இனம் எல்லோரையுமே.

லக்ஷம் அல்ல கோடிக்கணக்கான ரூபாய் நிமிஷத்தில் கருகி சாம்பலாக​ப் ​ போகிறது. அய்யா அம்மா  துரைமார்களே, ஒரு சின்ன விண்ணப்பம்.  நமது தமிழ் நாட்டை  மட்டுமே எடுத்துக் கொள்வோம். எண்ணற்ற பழைய சிவாலயங்கள் வைணவ ஆலயங்கள் கவனிப்பாற்றற்று  பல நூற்றாண்டுகளாக ஒருவாறு சமாளித்து நின்றுவிட்டு  இப்போது கல்,  ​காரை எல்லாம் பெயர்ந்து எந்த நிலையிலும்  இடிந்து விழ​த் ​ தயார்.  இதையெல்லாம் கவனிக்க  இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் இருக்கிறார்களாமே  எங்கே​?​.  அவர்கள் கண்களில் ஏன் இதெல்லாம் படாமல்  பெரிய பெரிய  வருமானமுள்ள  கோவில்க​ளின் ​ள் நறுமணம் மட்டும் மூக்கில்  வாசனை தூக்குகிறது.

ஒரு கோவில் பற்றி தினமணி பத்திரிகை சமீபத்தில் வெளியிட்ட விபரம். இதைப் போல் நிறைய நிறைய கோவில்கள் பற்றி விஷயம் இருக்கிறது.  


''இங்கு கிழக்கு நோக்கிய மூன்று நிலை முதன்மை கோபுரத்துடன் உள்ளது சிவன்கோயில். இறைவன் சுந்தரேசுவரர் கிழக்கு நோக்கியும், இறைவி சௌந்தர்யநாயகி தென்முகம் கொண்டுள்ளார். கருவறை கோட்டத்தில் தென்முகன்(தக்ஷிணாமூர்த்தி என்று எழுதினால் என்ன?)  , சங்கு சக்கரங்களுடன் கூடிய துர்க்கை இருவர் மட்டுமே மட்டுமே உள்ளனர். பின்புறம் உள்ள மேற்கு திருமாளிகை பத்தியில் கம்பீரமான பெரிய விநாயகர் உள்ளார், அருகில் சிவலிங்கம் அதன் அம்பிகையும் உள்ளனர். அருகில் சிதைந்த நிலையில் முருகன் வள்ளி தெய்வானையுடன் உள்ள சன்னதி. மிகுந்த அழகுடன் பைரவர் மேற்கு நோக்கி அருள்புரிகிறார். அருகில் சூரியன் உள்ளார். 

முன்னூறு ஆண்டுகட்கு முன் மராட்டியர் காலத்தில் கட்டப்பட்டகோயில். முழுவதும் செங்கல் கொண்டு கட்டப்பட்டுள்ளது. இக்கோயில் வெட்டாற்றின் வட கரையில் உள்ளது, திருக்கருகாவூர் தென் கரையில் உள்ளது. 100 மீட்டர் இக்கரையில் சிதைந்து நிற்கும் இக்கோயிலை காண்பதற்கே ஆளில்லை. பெரும்பாலான நேரங்களில் பூட்டப்பட்டே இருக்கும்.

ஆண்டு அனுபவிக்கக் கூடி நின்ற சொந்தங்கள், கூடிக்களித்தபின் பாராமுகம் காட்டுவதைப் போல், அனைத்துத் தரப்பிலும் தனித்து விடப்பட்டு நிற்கிறது சிவன்கோயில். திருநல்லூர் சப்தஸ்தானங்களுள் ஒன்று இந்த மாளிகைத்திடல் ஆகும். பிற தலங்கள் - திருநல்லூர், கோவிந்தக்குடி,  ஆவூர், மட்டியான்திடல், பாபநாசம், திருப்பாலைத்துறை ஆகியவையாகும். இதெல்லாம் பழங்கதையாகிப்போனது. படங்கள் உதவி: கடம்பூர் விஜயன்.


இந்து அறநிலையத்துறை பதிவேட்டில் மட்டுமே இக்கோயில் உள்ளது. வேறெந்த லாபமும் இக்கோயிலுக்கு இல்லை. பல ஆண்டுகளாகப் பராமரித்து வந்த குடும்பம் நொடித்துப் போன நிலையிலும், பிற நபர்களின் உதவியைக் கோருவதில் ஈடுபாடு காட்டாமல் உள்ளது.

இத்தனை இடர்பாடுகளுக்கு மத்தியில் இயற்கை தன் கைங்கர்யத்தை ஆரம்பித்துவிட்டது. பூச்சுக்கள் முற்றிலும் உதிர்ந்துவிட்டன. செடிகளும் மரங்களும் வளர்ந்து விரிசல்களும் இடிபாடுகளும் நித்தமும் முன்னேற்றம் காண்கிறது. இங்கு கிழக்கு நோக்கிய மூன்று நிலை முதன்மை கோபுரத்துடன் உள்ளது சிவன்கோயில். பெரும்பாலான நேரங்களில் பூட்டப்பட்டே இருக்கும். கோயில் அருகில் இருக்கும் சாமிநாதன் என்ற பெரியவர்தான் கோயிலைப் பார்த்துக்கொள்கிறார்.

முன்னூறு ஆண்டுகளுக்கு முன் மராட்டியர் காலத்தில் கட்டப்பட்டகோயில். முழுவதும் செங்கல் கொண்டு கட்டப்பட்டுள்ளது. கோபுரம் விரிசல் காண ஆரம்பித்துவிட்டது. முகப்பு மண்டபம் இறைவன் இறைவி இருவரது கருவறைகளை இணைக்கிறது.

இறைவன் சுந்தரேசுவரர் கிழக்கு நோக்கியும், இறைவி சௌந்தர்யநாயகி தென்முகம் கொண்டுள்ளார்.

இக்கோயில் வெட்டாற்றின் வட கரையில் உள்ளது. திருக்கருகாவூர் தென் கரையில் உள்ளது. அங்கே கூடும் கூட்டமென்ன, கொண்டாட்டமென்ன, அன்னதான திட்டமென்ன, 100 மீட்டர் இக்கரையில் சிதைந்து நிற்கும் இக்கோயிலைக் காண்பதற்கே ஆளில்லை.

கோயிலில் நடமாட்டமே இல்லாததால் தென்புறம் உள்ள வில்வமரத்தில் பழங்கள் நூற்றுக்கணக்கில் சிதறிக்கிடக்கின்றன. கருவறை கோட்டத்தில் தென்முகன், சங்கு சக்கரங்களுடன் கூடிய துர்க்கை இருவர் மட்டுமே உள்ளனர்.

பின்புறம் உள்ள மேற்கு திருமாளிகை பத்தியில் கம்பீரமான பெரிய விநாயகர் உள்ளார். அருகில் சிவலிங்கம் அதன் அம்பிகையும் உள்ளனர். அருகில் சிதைந்த நிலையில் முருகன் வள்ளி தெய்வானையுடன் உள்ள சன்னதி. அடுத்தாற்போல் வாகன மண்டபம், அதில் மயில், சூரன், ரிஷப வாகனங்கள் உடைந்து கிடக்கின்றன. வடகிழக்கில் மகிஷாசுரமர்த்தினி, அம்பிகை இன்னும் சில சிலைகள் கிடத்தப்பட்டுள்ளன. மிகுந்த அழகுடன் பைரவர் மேற்கு நோக்கி அருள்புரிகிறார். அருகில் சூரியன் உள்ளார்.

​நண்பர்களே,  ஒரு உறுதி எடுத்துக் கொள்வோம்.  காசைக் கரியாக்கு முன்பு  ஒரு  சிறு பணம் அதிலிருந்து தனியாக இந்த  மாளிகை த்திடல் சிவாலய திருப்பணிக்கு எடுத்து வைக்க முடியுமா?  ஏன்  முடியாது? உடனடி தேவைகள். ​ இந்த கோயில் இருக்குமிடம்  கும்பகோணம்  அருகே  பாபநாசம்-    திருக்கருகாவூர்  சாலையில் எட்டு கி.மீ  தூரம் சென்று வெட்டாறு ஆற்றின் வடகரையில் இடது புறம் திரும்பினால் இந்த மாளிகைத்திடல் ஆலயம் நம்மை வரவேற்கும்.  

1. உடனடி​யாக  ஒரு  சில நண்பர்கள்  சென்று  ​ உழவாரபணிகள்​ துவங்கவேண்டும். ​  இன்னும் சில நாள் இந்த ஆலயம் நிற்க வழி கோல வேண்டும்.
​ ​2. தினசரி வழிபாடு​ விடாமல் நடக்க, தினமும் விளக்கேற்றி ஒரு  சொம்பு ஜலம்  அபிஷேகம்,  புது மாற்று வஸ்திரம், சில சிவாலய மந்திரங்கள் சொல்லி ஏதேனும் ஒரு சிறு நைவேத்தியம் படைக்க ஏற்பாடு பண்ணவேண்டும். ​
3. ​ யார் இந்த ஊரில் கொஞ்சம் பொறுப்பானவர்கள் என்று விசாரித்து  கோவிலில் என்ன சிக்கல் ஏன் யாரும் கவனிக்க வில்லை என்று அறிந்து ஆவன  செய்யவேண்டும். உடனே ​​பொறுப்பான சிலரைக்கொண்ட குழு அமைத்து  உள்ளூர் காரர்களே ஆலய ஜீரணோத்தாரண  ​திருப்பணி​க்கு  ஏற்பாடு செய்யவேண்டும். இதில் முக்கியமாக திருக்கருகாவூர் பாபநாசம் போன்ற பெரிய ஊரில் இருப்பவர்களே பொறுப்பேற்கவேண்டும்.  எல்லாம் செய்து முடித்தபின்  அறநிலை அதிகாரியை தேடிப்பிடித்து அவரிடம் ஒப்படைத்தால் வருமானம் வந்ததும் தக்கவிதத்தில் அதை பரிபாலனம் செய்வார்.

 படங்கள் உதவி: கடம்பூர் விஜயன்.

​​



  ​​ 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...