Tuesday, October 2, 2018

ADVICE TO ELDERS





பெரிசுகளுக்கு அட்வைஸ் - J.K. SIVAN

என்னோடு பழகுபவர்கள் 75க்கு மேல் வயதானவர்கள். கண்ணாடி பாத்திரங்கள். ஜாக்கிரதையாக கையாளவேண்டியவர்கள். விழுந்தால் நொறுங்கும். ஓட்டமுடியாது. இருக்கும் வரை அழகாக பளிச்சென்று உபயோகமாக இருந்துவிட்டு போகவேண்டியவர்கள்.

எவனோ கணக்கெடுத்து அமெரிக்காவில் சொன்னானாம். பாதிக்குமேல் கிழங்கள் படி மேலே ஏறும்போது நிலை குலைந்து கீழே விழுந்து மறுபடி எழுந்திருக்காதவர்கள்.

ஆகவே சில விஷயங்களில் ஜாக்கிரதை அவசியம் என்று தோன்றுகிறது. வயோதிக வாலிபர்களே உங்களுக்கு கொஞ்சம் முக்கியமான விஷயம் சொல்கிறேன். இதெல்லாம் பலர் அனுபவத்தால் அறிந்து கொண்டவை. நிச்சயம் பலன் தரக்கூடியவை:

1. மாடிப்படி ஏறவேண்டாம். ஏறவேண்டி இருந்தால் கைப்பிடியை பிடித்துக்கொண்டு ஏறவும். சொந்த சக்தி மீது அனாவசியமாக நம்பிக்கை வேண்டாம். ''காலை'' வாரிவிடும். உண்மையாகவே.,
2. காக்கை போல் வேகமாக தலையைஅப்படியும் இப்படியும் அசைக்காதே. சிலபேர் தானாகவே தலை ஆட்டி சுளுக்கு எடுப்பார்கள். தலை தப்பாது. ஜாக்கிரதை.மெதுவாக அசைக்கவேண்டும். உடலில் கொஞ்சம் சூடு ஏறட்டும் முதலில். உடம்பை அப்புறம் மெதுவாக அசைப்போம்.

3. டக்கென்று குனிந்து கால் விரலைத் தொட முயற்சிக்காதே. முதலில் விலா, இடுப்பு எல்லாம் உன் ஆதிக்கத்துக்கு வந்தபிறகு ட்ரை பண்ணுவோம். தொப்பைக்கு காலை தொட பிடிக்காது. எதிர்க்கும். தொட விடாது.

4. நின்று கொண்டு பேண்ட் போட்டுக்கொள்ள முயற்சிக்காதே. உட்கார்ந்து கொண்டு ஒவ்வொரு காலாக உள்ளே விடு. குப்புற தள்ளி விடும். அப்புறம் ''அழைத்து வா, எடுத்து போ''

5. படுக்கையில் மல்லாக்க படுத்துக் கொண்டு அப்படியே எழுந்திருக்காதே. ஒருக்களித்து படுத்து கையை ஊன்றிக்கொண்டு மெதுவாக இடது பக்கமாக எழுந்திரு. வலது பக்கம் சௌகர்யம் என்றால் அந்த பக்கமாக.

6, உடமபை முறுக்கிக்கொண்டு உடல் பயிற்சி பண்ணுகிறேன் என்று எதையாவது பண்ணி டாக்டர் வீடு போகாதே. உன் சேமிப்பு உனதல்ல அப்புறம்.
7. பின் பக்கமாக நடப்பது நகர்வது ஓடுவது எல்லாம் முன்பு சின்னவயதில் செய்ததே போதும். இப்போது வேண்டாம். பின் மண்டை உனக்கு துரோகம் செய்து விடும். அதை நம்பி கீழே விழாதே.

8, இடுப்பை குனிய வைத்து கனமான தண்ணீர் பக்கெட் ,அரிசி, காஸ் சிலிண்டர் எல்லாம் தூக்காதே. முழங்காலை மடித்து தோப்புக்கர்ணம் போடுவது போல் குனிந்து தான் தூக்கவேண்டும். முழங்கால் மடங்காது என்றால் தூக்கவே வேண்டாம். திட்டுவார்கள் திட்டட்டும். காது கொடுத்து கேட்காதே.

9, ஏதோ ஆபிஸ் போக நேரமானது போல் வேகமாக படுக்கையிலிருந்து விருட்டென்று எழுந்திருக்காதே. ரெண்டு மூணு நிமிஷம் ஆகட்டும். சுதாரித்துக்கொண்டு பிறகு எழுந்திரு. ரத்த ஓட்டம் முன்பு போல் வேகமாகே மேலே ஏறாது. உனக்கு மட்டும் அல்ல, உன் உடம்புக்கும் ரொம்ப வயதாகி விட்டது. ஞாபகம் இருக்கட்டும்.

10. பாத் ரூமில் சௌகர்யமாக உட்கார்ந்துகொண்டு நிதானமாக உன் காலைக்கடனை கழித்து விட்டு வா. அவசரமோ, வயிற்றை பிசைந்து மூச்சை இழுத்து முக்கி முனகி தொந்தரவு செய்யாதே. வருவது எப்போதும் இயற்கையாக வந்து விடும்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...