Friday, October 12, 2018

SITHTHARGAL

அம்மணி அம்மன்.2     J.K. SIVAN 




அந்த பெண் குழந்தை  சென்னம்மா சொன்னது போல் எட்டாவது நாள்  செங்கம்  நவாப் அவளைத்தேடி பரிவாரத்தோடு வந்தான். அவனுக்கு தெய்வ பக்தி உண்டு.  இது தெய்வீக குழந்தை இதை வளர்க்கலாம் என்று ஆசைப்பட்டான். ராணியாக்க  நினைத்தான்.  சென்னாம்மா  நீப்பத்துறை சென்றுவிட்டாள் என அறிந்ததும் அங்கே சென்றான்.    அவளை  சப்த கன்னிகையர்  குகைக்கு அனுப்பிய  துறவி வெள்ளியப்ப செட்டியாரை சந்திக்கிறான்.

''நவாப், அந்த பெண் சென்னம்மா  பார்வதி தேவி அவதாரம். பக்தர்களை காக்க பிறந்தவள். அவளை நீங்கள் ராணியாக்க முயற்சிக்க வேண்டாம். அவள் வணங்க தக்கவள்  என்கிறார் செட்டியார்.

''அவளை நான்  சந்திக்க முடியுமா?''
''இல்லை நவாப், அவள் சப்த கன்னிகையர் பாதுகாவலில் இருக்கிறாள் ''
''அடாடா, இவ்வளவு அருமையான தெய்வீக குழந்தையை நான்  வளர்க்க ஆசைப்பட்டது தவறு தான்''  நவாப் உணருகிறான்.''

அதிசயமாக  நவாப் ஒரு முடிவுக்கு வந்துவிட்டான். இனி நான் என் செங்கம் அரண்மனை திரும்ப மாட்டேன். இங்கேயே  இந்த குகை வாசலில் காவலாளியாக பணி புரிகிறேன். அந்த பெண்ணை பாதுக்காக்க வேண்டியது என் கடமை'' என்று அங்கேயே தங்கிவிடுகிறான்.

சிறிது காலத்தில்  துறவி வெள்ளியப்ப செட்டியார் கைலாயபதவி அடைந்து  அவர் ஜீவ சமாதி அடைந்த இடம்  ஒரு ஆலயம்.   நீப்பத்துறை கிராமம் செல்பவர்கள் அங்கே செட்டியார் ஜீவசமாதி மேல் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் ஆலயம் இருப்பதை கண்டு தரிசிக்கலாம். 

அம்மணி அம்மனின் முதல் பிறவி இவ்வாறு சென்னம்மாவாக இருந்தது.  பார்வதி தேவி அடுத்து எடுத்த பிறவி தான் அருள்மொழி என்ற  அம்மணி அம்மன்.  இந்த பிறவியில் அவள் தவம் செய்வதற்காகவே பிறந்தவள் என்பதால்  தாண்டவன் எனும் மாமனை மணந்தும் உடனே பிரிந்து விட்டாள் . திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் அவருக்கு சேவை செய்து வாழ்ந்தாள் .

பார்வதியாக  சிவனின் கண்களை மூடியது தவறு என்றுணர்ந்து  அதற்கு பரிகாரமாக அருணாச்சலேஸ்வரரரான  பரமசிவனுக்கு பணிவிடை செய்து ஜபதபங்களுடன் வாழ்க்கை. 

ஒருநாள் சிவனின் கட்டளை அவளுக்கு கனவில் கிடைத்தது.  '' நீ  இந்த ஆலயத்தின் வடக்கு  கோபுரத்தை கட்டி முடி ''

அருணாச்சலேஸ்வரர் ஆலய நிர்மாணத்தின் பொது வல்லாள  மஹாராஜா முக்கால்வாசி வேலைகளை தனது காலத்தில் முடித்துவிட்டான். வடக்கு வாசல் கோபுரம் மொட்டையாக நின்றுவிட்டது.  வல்லாளனின் மனைவிகள் மல்லா,  சல்லா என இருவர்.   அவர்கள்   மகாராஜாவை  வடக்கு கோபுரத்தை ஏன் முடிக்கவில்லை என்று கேட்டபோது  ராஜா  ''அதை நிறைவேற்ற ஒரு பெண் பிற்காலத்தில் வருவாள் '' என்று அறிந்தேன் என்கிறான்.  அந்த பெண் தான்  அம்மணியம்மாளோ?.

அம்மணி அம்மாளுக்கு  அருணாச்சலேஸ்வரனின் கட்டளை கிடைத்ததும்  முதலில் பிரமிப்பாக இருந்தது. நானா? இந்த பெரிய ஆலயத்தில் வடக்கு கோபுரத்தை காட்டும் அளவுக்கு எனக்கு வசதி உண்டா?  ஏன் என்னை சிவன் இந்த வேலைக்கு தேர்ந்தெடுத்தான்.  ஏதோ ஒரு காரணம் இருக்கவேண்டும்.  ஆகவே இதை உடனே சிரமேற்கொண்டு  ஆரம்பிக்கவேண்டும் என்று முடிவெடுத்தாள் .  எல்லோரிடமும் சிவனின்  கட்டளையை எடுத்து சொன்னாள் .  பலர் சிரித்தனர். சிலர் பக்தியோடு அவள் சிரத்தையை மதித்து பொன்னும் பொருளும் கொடுத்தார்கள்.  மிகுந்த பிரயாசையோடு  ஒவ்வொரு நிலையாக கட்ட ஆரம்பித்தாள்.

திருவண்ணாமலை வணிகர்கள், பொதுமக்கள் எல்லோரும் உதவ முன்வந்தனர். பணம் போதவில்லை.  அவர்களிடமே எவ்வளவு தான் கேட்பது.   அம்மணி மனதில் மைசூர் மஹாராஜாவிடம் சென்று அவர் உதவியை கேட்டு  இந்த கோபுரத்தை முடிப்பது என்று எண்ணம் தோன்றி மைசூர் நடந்தாள்.

ஒருநாள் காலை மைசூர் மஹாராஜா அரணமலைவாசலில் நின்றாள். காவலாளிகளிடம் சொல்லி அரசரை சந்திக்க அனுமதி கேட்டாள் . அவர்கள் உள்ளே விடவில்லை. 

பிரதம காவல்காரன் பரம ஏழையாக தோற்றம் அளித்த இந்த பெண்ணை எப்படி உள்ளே அனுமதிப்பது என்று ''அதோ இந்த மரத்தின் கீழ் நிழலில் உட்கார்'' என்று ஒரு இடம் காட்டி அங்கே காலையிலிருந்து மதியம் வரை உட்கார்ந்திருந்தாள்.

அவள் அங்கேயா  உட்கார்ந்தி ருந்தாள்.....?


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...