Sunday, October 28, 2018

JKS THOUGHTS


        புரியாதது புரிந்தது!  - J.K. SIVAN

கையில் இருப்பதையெல்லாம்  டபார்  என்று கீழே போட்டுவிட்டு இதை செவி மடுக்கவேண்டும்: 


'' இதன் மூலம் சர்வ ஜனங்களுக்கும்  தெரியப்படுத்துவது  என்னவென்றால்,

 எங்கே எப்போது சந்தித்தாலும் பட்டண்ணாவிடம்  எதைக் கொடுத்தாலும் ,  தயவு செய்து ஒரு பேனாவையோ, அதோடு அவர் கேட்கிறாரே என்று ஒரு பேப்பரையோ மட்டும் யாரும் கொடுக்கவேண்டாம்.  அவர் கண்ணில் படும்படியான இடத்திலும் வைக்கவேண்டாம்.  கிடைத்தால் அதை உடனே அவர் உபயோகித்து,   தனது அடுத்த  கடிதமாக  ஹிந்துவுக்கோ,. டைம்ஸ் பேப்பருக்கோ,  அல்லது ஏதோ ஒரு பத்திரிகைக்கோ எழுதி அனுப்பி

விடுவார்.  பிறகு  அதை படித்தாயா என்று உங்களை  பிடுங்கி எடுத்துவிடுவார்.

என் அனுபவம் இது என்பதால் உங்களுக்கு தெரியப்படுத்த கடமைப் பட்டுள்ளேன்.

பட்டண்ணாவின்   "லெட்டர்ஸ் டு எடிடர்'' எப்படியும்  வாரத்திற்கு  ரெண்டு நிச்சயம். தெருவில் காகிதம் போடுவதால்  வரும் தீமைகளிலிருந்து , ரேஷன் அரிசியில் ஒரு கிலோவுக்கு எவ்வளவு கிராம் எடை குறைவு,  தெருவில் நாய்கள் எத்தனை சாயந்திரம் முதல் மறுநாள் காலை வரை உலவுகிறது, முதல்  உலகில் கச்சா
 எரிவாயு என்ன விலைக்கு விற்க வேண்டும், எப்படி இதில்  அமெரிக்கா அரேபிய நாடுகள் தவறு செய்கின்
றன என்பது வரை எழுதித் தள்ளுவார்.  எதெல்லாமோ பற்றி எழுதுவதால் அவருக்கே  என்ன எழுதினோம் என்பது அடிக்கடி மறந்து போய்விடும்.  

ரெண்டு மூன்று மாத காலமாக  பட்டண்ணா  ஊரில் இல்லை.அவரது மகள் அலமேலு அவரை பேரனைப் பார்த்துக் கொள்வதற்காக  கோயம்பத்தூர் கூட்டிச் சென்று விட்டாள் . பத்திரிகை உலகம் தப்பிக்க  அவளால் உதவ நேர்ந்தது தெய்வாதீனம். போற்றுதற்குரியது.

மூன்று மாதங்களுக்கு முன் அவர் என்னை சந்தித்தார். 

''உங்களுக்கு தெரியுமா  தாத்தா சார்,  ''நம்ம கோபாலாச்சாரி வீட்டுக்கு போனேன்  “ இந்தா பிள்ளையார் கோயில் பிரசாதம். நாளைக்கு பிள்ளையார் சதுர்த்தியாச்சே. ஹோமம் நடத்தினா ”  என்று விபூதி குங்குமம் கொடுத்தார்.உடனே  எனக்கு  ஒரு  எண்ணம் உதயமாயிற்று.. எடுத்தேன் பேனாவை.

''அன்புள்ள ஹிந்து /எக்ஸ்பிரஸ் /டைம்ஸ்  ஆசிரியருக்கு,''..................''இப்படிக்கு  வாசகன் பட்டண்ணா.''
நீளமான  பட்டண்ணா எழுதியதை நான்  இங்கே எழுதி உங்களிடம் அவதிப்பட விருப்ப
மில்லை என்பதால் கடைசியில் முடிவாக அமைந்த வாசகம் மட்டும் இது என்று சொல்லி நிறுத்திவிடுகிறேன்.

"  இதுவரை முப்பது வருஷமாக ஏராளமான கோயில்கள் சென்றுள்ளேன். அங்கே இதுவரை 3000 தடவை மந்த்ரங்கள் , அதுக்கும் மேலேயும்,  சொல்லுவதை கேட்டுள்ளேன். எனக்கு இன்னி தேதி வரை ஒரு மந்திரம் கூட நினைவில் இல்லையே. கோயிலுக்கு போவதாலோ, மந்த்ரங்கள் கேட்பதாலோ, பூஜைகளை அந்த அர்ச்சகர்கள் செய்வதாலோ ஒரு பயனும் இல்லை என்பது அடியேன் அபிப்ராயம். நேரம் தான் வீண்."   ஒரு சாதாரண  அப்பாவி பக்தன்  பட்டண்ணா ''

பட்டண்ணா மூட்டிய தீ புகைவிட்
டு
 பத்திரிகை (யில்)  எரிய ஆரம்பித்தது.
விடுவார்களாஏகப்பட்ட பட்டண்
ணாக்கள்?  அவனை ஆதரித்தும் சுட்டெரித்தும் ரொம்ப  நாள்  ஹிந்துவில் கிழி கிழி என்று வறுத்து எடுத்து
 எழுதினார்கள். 

ஹிந்து 
ஆசிரியருக்கு முதலில் விஷயம் சூடு பிடித்ததில் பரம சந்தோஷம். சில நாட்களில் இது ஹனுமார் வாலாக வளராது இருக்க ஒரு வாசகர் எழுதியதால்  இந்த விவகாரம்  நிறைவு பெற்றது:

அந்த வாசகர் என்ன எழுதினார் அப்படி?  

"இந்த  விஷயத்தை 
ஆரம்பித்த திரு
 பட்டண்ணாவுக்கும் அவர் ஆதரவாளர்களுக்கும்:    இதில்  அதிகமாக ஈடுபட  எனக்கு விருப்பமில்லை  என்பதாலும்  எழுத எனக்கு அனுபவமில்லாதாலும்  சுருக்கமாக  நான் சொல்ல விரும்புவது இது ஒன்றே. 

எனக்கு கல்யாணமாகி இதுவரை முப்பது ஆண்டுகள். என் மனைவி கோகிலா குறைந்தது 32000 தடவையாவது சமைத்து நான்  இன்று காலை வரை சாப்பிட்டிருக்கிறேன். சத்தியமாக இன்று காலை அவள்  என்ன சமைத்தாள் எதை சாப்பிட்டேன் என்று நினைவில்லை. கத்திரிக்
காயா வெண்டக்காயா குழம்பிலே? தெரியாது.  நினைவில் இல்லை. ரெண்டும் ஒன்று போல் அவள் சமைப்பதாலும்  கண்டுபிடிப்பது சிரமம். இருந்தும் வேறு வழியின்றி
  தினமும் சாப்பிட்டு விட்டு தான் ஆபிஸ் போகிறேன். ஒண்ணு மட்டும்  நிச்சயம். கோகிலா சமைக்கும் வீட்டு சாப்பாடு இல்லாவிட்டால் நான் இதை எழுத இன்று இருந்திருக்க மாட்டேன். ஹோட்டல் சாப்பாடோ வேறு எதுவோ என்னை நோயுற்று அவதிப்பட வைத்தி
ருக்கும். அழைத்து வா  எடுத்துப்போ  ஆஸ்பத்திரி அனுபவம் கிடைத்தி
ருக்குமோ என்னவோ?

கோவிலுக்கு போவதும் இதுபோலவே தான்.  மந்திரம் புரிகிறதோ இல்லையோ, பூஜை பிடிக்கிறதோ இல்லையோ,  அது என்னை ஏதோ புரிபடாத சந்தோஷத்தில் திருப்தியில் அமைதியில் ஆழ்த்துகிறது. இந்த அனுபவத்தை வார்த்தையால் சொல்லவோ எழுதவோ முடியாது. அனுபவித்தால் அந்த இன்பமே அதன் பலன்.  இதை முடிப்பதற்கு  முன்னாலே பட்டண்ணாவுக்கும்  மற்றும் எல்லோருக்கும்  இங்கிலிஷில் ஒரு வார்த்தை:

Let  us  remember this: “When  we  are DOWN to nothing,  God is UP to something! Faith sees the invisible, believes the incredible  and  receives the impossible!  Let us Thank God for our physical and our spiritual nourishment -- ராமசேஷன்.''

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...