Thursday, October 4, 2018

SWAMI DESIKAN



சுவாமி  தேசிகன் 750   J.K. SIVAN 
                                                      
          வா  பயமில்லாமல் வா...                                                           

இதோடு எல்லாம் போகட்டும். இனிமேல் எனக்கு எந்த பயமும் இருக்கக்  கூடாது. தைர்யமாக எதையும் சந்திக்கவேண்டும். உயிரே போனாலும் போகட்டுமே.  எதற்கு இந்த பயம்?தலை நரைக்க ஆரம்பித்து விட்டதே. எந்த சக்தியும் எதிர்க்கட்டும். பயமே வேண்டாம்.   சுவாமி தேசிகன்  பயமில்லாமை  ஸ்தோத்ரம் எழுதும்போது வயது 60க்கு மேல்.   இருபதுக்கு மேலான  அபீதித்வம்  ஸ்லோகம் இனிமேல் படிக்கப்போகிறோம்..

மைசூரை சேர்ந்த கோபண்ணா உடையார் 1360  முஸ்லிம்களை துரத்தி அடித்து விரட்டினார். ஸ்ரீரங்கம் மீண்டும் வைணவர்கள் வசம் வந்தது. நம்பெருமாளை ஜாக்கிரதையாகி  திருப்பதியிலிருந்து  ஸ்ரீரங்கம் கொண்டு வந்தாச்சு.  அப்புறம்  ஒரு ஒன்பது வருஷம்  வாழ்ந்த  சுவாமி தேசிகன் 1369ல்  தனது 101வது வயதில்,  குமார வரதாச்சார்யர் எனும் மகனின் மடியில் தலை வைத்து,  காலை ப்ரம்மதந்த்ர ஸ்வதந்தர ஜீயர் மேல் நீட்டி வைத்துக்கொண்டு  படுத்தார்.  வைகுண்டம் அருகில் தெரிந்தது..  திருப்பாற்கடல் ஓவென்று இரைச்சலுடன் கண்ணில் பட்டது.  ஆதிசேஷன் மெதுவாக அசைந்து அசைந்து நீரில் மிதந்தான். அவன் மேல் நாராயணன் படுத்திருந்தாலும்  அவன் பார்வை சுவாமி தேசிகன்மேல் படுத்தது.

நீயா  நாராயணா?
நான் நாராயணன் மட்டும்  இல்லை உன் வரதன், காஞ்சிபுரம் வரதராஜன்,
அடடா  என் தேவராஜா,  
இல்லை சரியாகப்பார்க்கவில்லை  நீ  தேசிகா  இப்போது என்னை உற்றுப்பார்''
''அம்மா   ரங்கநாயகி  என்ன கண்கொள்ளாக்  காட்சி இது,  இது உன்னருகே  என்  ரங்கநாதன் அல்லவோ,
வா தேசிகா என்னோடு.... 
ஸ்வாசம்  திருவாய் மொழி பாசுரம் ஒலிபோல்  தோன்றவே  மெதுவாக தனது புத்ரன்  வரதனை கண்கள் அண்ணாந்து பார்த்தன.  கண்ணீர் மல்க வரதனுக்கு நூறு வயது நிறைந்த தந்தையை பார்த்தார்......
'வரதா,  திருவாய் மொழி பாசுரங்களை பாடு''.  வரதனின் குரலில்  பாசுரம் தேனாக  காதில் பாய,     கேட்டுக்கொண்டே   சுவாமி தேசிகன்மீண்டும் கண்களை மூடினார்.
நாராயணன்  திருப்பதி வெங்கடேசனாக இப்போது சங்கு சங்கரம் தங்கி அவர் எதிரே நின்றான்.  என்  வேங்கடநாதா.''....
வெஙகடேசா.... டாண்  டாண்  என்று  கண்டாமணி ஒலி  வைகுண்டம் பூரா ஒலித்தது.  திருப்பதியா  வைகுண்டமா என்றே தேசிகனுக்கு தெரியவில்லையா, தேசிகன்  தெரியவில்லையா... அவர் கண்டாமணியாகி விட்டாரா...... வந்தவழியாகவே வா..?
கண்டாமணி அவதாரமான சுவாமி தேசிகன்  பரமபதம் அடைந்தார்.

என் மகன்.... என் மகன்  ....என்று  ரங்கநாயகி தாயார்  ஸ்வாமிதேசிகனின் சந்நிதி தமக்கு அருகிலே,  எதிரிலேயே, இருக்கவேண்டும் என்று கட்டளையிட இன்றும் நாம் அவரை ஸ்ரீரங்கத்தில்  அவள் சந்நிதி எதிரிலேயே தரிசிக்கிறோம். 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...