Monday, October 22, 2018

AZHWARGAL

அமுதன் ஈந்த ஆழ்வார்கள் J.K. SIVAN
கண்ணினுட் சிறு தாம்பு - 3
மதுர கவி ஆழ்வார்.

​ நம்பியைப் போல் உண்டோ?​

​ஒரு சிறிய அப்ளிகேஷன், லீவ் லெட்டர், கடிதாசு எழுத பல பேப்பர்களை பாதி எழுதி கிழித்துப்போட வேண்டி இருக்கும் நமக்கு ஒரே ஆச்சர்யமாக யிருக்கிறது எப்படி இந்த ஆழ்வார்கள் பனை ஓலைச் ​சுவற்றில், ஆணியால் குத்தி இவ்வளவு அழகிய தேனொழுகும் தமிழில் எழுதினார்கள் என்று. ? ஒரு ஓலை நறுக்கையும் வீணடிக்க முடியாது. மறுபடியும் ஓலை நறுக்கு தயார் பண்ண நேரமாகும். பனைஓலையை தேடிப்போக வேண்டும். ஒரு வார்த்தை எழுதி அடித்து ரப்பரால் அழிக்க வசதியும் இல்லை.

அப்படி எழுதிய எழுத்துக்கள் அமிர்தமாக அமைந்ததால் தானே அந்த எழுத்தாள ஆழ்வாருக்கு பெயரே ''மதுர'' கவி ஆழ்வார் என்று உலகம் நாமம் சூட்டியது.
​''​இன்று தொட்டும் எழுமையும் எம்பிரான்
நின்று தன் புகழ் ஏத்த அருளினான்
குன்ற மாட திருக் குருகூர் நம்பி
என்றும் என்னை இகழ்விலன் காண்மினே​''​ 6

வைணவ சிகாமணிகளே, வாருங்கள் இந்த அதிசயத்தை​க் ​ காண்பீர் !
என்றும் குறைவிலாத நிறைந்த பக்தியோடு, நம்பிக்கையோடு அவன் புகழ் பாட குன்றங்களும் அழகிய உயர் மாடங்களும் சூழ்ந்த எழில் மிக்க திருக் குருகூர் நம்பி என்னை குறையொன்றும் இல்லாதவனான அவன் தாள் சேர்ந்து அடி பணிந்து அவனைப் பாட அவனோடு என்னை மனமாற அன்போடு இணைத்துக் கொண்டான்.​ என்ன ஒரு அதீதமான குருபக்தி!​

கண்டு கொண்டென்னை காரி மாறப் பிரான்
பண்டை வல்வினை பாற்றி அருளினான்
எண் திசையும் அறிய இயம்புகேன்
ஒண் தமிழ் சடகோபன் அருளையே​ 7​

எட்டு திசையிலும் உள்ளவர்களே, உங்கள் காது கேட்க உரக்கச் சொல்லுகிறேன் கேளுங்கள். திருக்குருகூர் ​கேள்விப்பட்டதுண்டா? அந்த பெருமைவாய்ந்த ஊரில் காரி என்பவர் மகனாகப் பிறந்த மாறன் என்கிற வள்ளல் பெருமகனார் ஒரு அற்புதத்தை நிகழ்த்தினா​ரே, அதுவாவது தெரியுமா? . என்னைப் பிடித்து என் பல ஜன்ம பாபங்களை ஒரு கணத்தில் நீக்கி விட்டாரே.​ மந்திரவாதிகளில் சிறந்தவரோ? ​ நான் பதிலுக்கு என்ன செய்கிறேன்? சடகோபனாகிய ​ அந்த ​என் ​குருநாதர் குருகூர் ​நம்பியின் அருளையும், அவரது அழகிய தேன் சொட்டும் பாசுரங்க​ள் அத்தனையும், ​ இரவும் பகலும் அனவரதமாக என் வாய் மணக்க பாடியும் ,கேட்பவர் செவியினிக்க செய்தும் ஊரெங்கும் சென்று இசைக்கிறேன்​. எப்படி என் முடிவு? ​​ இதைத் தவிர வேறேதாவது ஒரு சிறந்த பாக்கியம்​ யாருக்காவது கிடைக்குமா சொல்லுங்கள்?

அருள் கொண்டாடும் அடியவர் இன்புற
அருளினான் அவ்வருமறையின் பொருள்
அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான்
அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே

உலகில் என் குருகூர் நம்பியைப் போல் அதி அற்புத சேவை ஒன்று செய்தவர் ​எவராவது ​உண்டா? ​எங்கே தெரிந்தால் விரல் விடுங்கள் பார்க்கலாம். ​திருமாலடியார் கேட்டு மனமும் செவியும் மகிழ நான்கு வேத சாரமா​கிய பாசுரங்களை அழகிய தமிழில் ஆயிரமாக இயற்றி​ப் ​ பாடி அனைவரையும் அந்த வேதனின் உலகில் கிடைக்கும் இன்பத்தை அடையச் செய்தானே​ என் குருநாதன் குருகூர் நம்பி, ​ இந்த கருணை, அருள் கொண்ட என் நம்பியை​க் ​ கொண்டாடாமல் நான் இருப்பேனா இல்லை, நாம் இருப்போமா?​ முடியவே முடியாதே.
ஆழ்வார் இன்னும் சொல்கிறார்.​



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...