Tuesday, October 16, 2018

AINDHAM VEDHAM



ஐந்தாம் வேதம்      J.K. SIVAN 
மஹா பாரதம் 

 

நிறைய  தீர்த்த  யாத்ரை ஸ்தலங்கள்''என்ன சந்தோஷமாக இருக்கிறது. மீண்டும் நளன்  தமயந்தியோடு தனது குழந்தைகளோடு நிஷத  நாடு திரும்பி ராஜ்யத்தை பெற்று நீண்டகாலம் அரசாண்டான் '' என்று அறியும்போது  என்று  கண்ணீரை துடைத்துக்கொண்டான் ஜனமேஜயன்.

''சரி மகரிஷி என் தாத்தாக்கள் என்ன ஆனார்கள் அப்புறம் ?   என் தாத்தாக்கள்   சரித்ரம் வியப்பூட்டுகிறதே.  அர்ஜுன கொள்ளுத்தாத்தா  தவம் செய்ய  தீர்த்த யாத்திரை   புறப்பட்டவுடன்   காம்யக  வனத்தில் நடந்த விவரங்கள் விருவிருப்பாக செல்கின்றன'' என்றான்  ஜனமேஜயன்.

''மேலே சொல்கிறேன் கேளுங்கள் அரசே''  என்று வைசம்பாயனர் தொடர்ந்தார்:

 ஒருநாள்  காலை  அருகே  இருந்த ஒரு குளத்தில்  நித்ய கர்மாநுஷ்டானம்   செய்ய சென்ற சகாதேவன்  நாரதரைக் கண்டு அவரை   வணங்கி    அழைத்து வந்தான்.

 ''அண்ணா,  நம்மைத்  தேடி   நாரத மகரிஷி  வந்திருக்கிறார்.''

 யுதிஷ்டிரனும் சகோதர்களும், துரோபதையும்  நாரதரை வணங்கி வரவேற்றனர்.

''  என்ன யுதிஷ்டிரா, உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி.   உனக்கு  நான்  என்னப்பா உதவி  செய்ய  முடியும்  சொல் ''  என்றார்  நாரதர்.

" மகரிஷி,  நாங்கள் தீர்த்த யாத்ரை செல்ல விருப்பம் கொண்டோம்.  தீர்த்த யாத்திரை பற்றி  விளக்க  வேண்டும்.''

'' தீர்த்த யாத்திரை  ஒரு மகத்தான  செயல்.   ஒரு தடவை,  கங்கைக் கரையில்  பீஷ்மன்   சில முனிவர்களோடு  பித்ரிய  விரதம் மேற்கொண்டபோது அவனது தவத்தில் மகிழ்ந்து பித்ருக்கள்,  தேவர்கள்  ரிஷிகள் திருப்தியடைந்தனர்.  புலஸ்திய   மகரிஷி அங்கே  இருந்தார்.  அவரை பீஷ்மன் வணங்கினான்.

''பீஷ்மா,  உனக்கு  என்ன  வேண்டும்  கேள் ''  என்றார்  புலஸ்தியர்.

''முநிஸ்ரேஷ்டா,    உலகமுழுதும்  தீர்த்த  யாத்ரை  செல்லும்  பலன் என்ன என்று  விளக்குங்கள் என்றான் பீஷ்மன் '

''விரதமிருந்து,   உடலை   வருத்தி,மனதை தியானத்தில்  செலுத்தி தீர்த்தங்களில் நீராடி வணங்குபவன் சாதாரணன் அல்ல.
 ஒன்று  அவன்  ரிஷியாக  அல்லது    ராஜாவாக  இருக்க வேண்டும். மற்றவரால் கடும் விரதம் தவம்  இருக்க முடியாது. புஷ்கரத்தில்  இவ்வாறு  தீர்த்த யாத்ரை  சென்றவன்  கை மேல்  பலன்   பெறுவான்.  பீஷ்மர்  அதைப்  பெற்றவர்.  பத்து அச்வமேத யாக பலனுக்கும் மேலானது  அது. புஷ்கரத்தில்  ஸ்நானம் செய்தவனுக்கு மறுபிறப்பு  இல்லை.   அதுவும் கார்த்திகை  பௌர்ணமி ஸ்நானம்  பண்ணினவன் பிரம்ம லோகம்  அடைவான்.கார்த்திகை   ஒரு மாதம் முழுக்க  எவன் புஷ்கரத்தில்  வசிக்கிறானோ,  அவன் நூறு  வருஷங்கள்  அக்னி ஹோத்ரம் பண்ணின  பலனை அடைகிறான்'' என்கிறார் நாரதர்.

சில  தீர்த்தயாத்ரை புண்ய  ஸ்தலங்கள் பேரையாவது  சொல்கிறேன்.  அவை ஒவ்வொன்றைப் பற்றியும்  சொல்ல பல நாள்  ஆகும்.

 நர்மதா,  பிரபாச  க்ஷேத்திரம், சரஸ்வதி சமுத்ரத்தில் சங்கமமாகும்  க்ஷேத்திர   ஸ்நானங்கள்  இதே  புண்ய  பலனை உடையவை.

வரதனா,த்வாரவதி, பிண்டாரக  தீர்த்த யாத்ரைகள்  ஸ்ரேஷ்டமானவை. சிவன் பிரத்யக்ஷமாக  இருக்கும் இடம் இவை. இதைத் தவிர,  சிந்து கடலில் சேரும் இடம், த்ரிமி , வருணா,  வசைத்ரா, துங்க  பத்ரா, குமாரிகா, ரேணுகா, பஞ்ச்லுமந்தா , பீமா, யோனி, விமலா, ஸ்ரீகுண்டா,விதஸ்தா, சப்த சாரு  தீர்த்தம். ரௌத்ரபாதா, தேவிகா, காமக்லியா, நவத்வீபா, ருத்ரகோடி, குருக்ஷேத்ரம், பரிப்ளாவம், ஷாலுகினி, சர்ப்பதேவி, கோடி தீர்த்தம்,  ஏக ஹம்சா, யக்ஷிணி, சரயு,  கங்கா, காவேரி, லோகோத்தாரா, கபில தீர்த்தம், தேவி தீர்த்தம்,  சுதீர்த்தம், மாத்ரி,  தசஸ்வமேதிகா, காசி, புண்டரிகா, த்ரிபிஷ்டபா, வைதரணி,  சர்வதேவ தீர்த்தம், மிச்ரகம், மனோஜவம், வ்யாசவனம், மதுவதி, கெளசிகி,  வ்யாசஸ்தாலி,வேதி,  விஷ்ணுபாதா, நைமிஷகுஞ்சா, கன்யா,  சோமா,  சப்தசரஸ்வதா, பார்கவி,  கபால மோசனா, அக்னி தீர்த்தம், ப்ரிதுதாகா, சத சஹஸ்ரகா, ரேணுகா, விமோசனா, பஞ்சவடி,  ஸ்வர்கத்வாரா , அநரகா,  வதரி,  ஏக ராத்ரா, ததீச்சா , சன்னிஹத்தி, தர்ம தீர்த்தம், சௌகந்திகவனம்,  ஈசானத்யுஷிதா, த்ரிசூலகட்டம்,   சாகம்பரி.  ஸ்வர்ணா, தூமாவதி , ரதவர்த்தம், தாரா, சப்தகங்கா,  கபிலவதா, கனகாலா, நாக தீர்த்தம், யமுனா, ருத்ராவர்த்தம், பத்ரகர்ணீஸ்வரா, அருந்ததிவடம், பிரம்மவர்த்தம், வீரப்ரமோக்ஷா, பிராம்மணி, நைமிஷம் ,க்ஷீரவதி, கோப்ரதாரா, கோமதி, அவிமுக்தா,  வாரணாசி, மார்கண்டேயா, அக்ஷய வடம், மகாநதி, தேனுகா, க்ரித்ர வடம், கயா,கண்டகி, விசாலா,  மகேஸ்வரி,  சோமபாதா, மகேஸ்வர பாதா, ஜாதிஸ்மரா, வாமனா,  ஸ்தனகுண்டா , தாம்பரபரணி,  கும்பகரணாஸ்ரமா, பாகீரதி, லலிதிகா, விரஜா,  சோனா, ஜோதிரதி, ரிஷபா, புஷ்பவதி, சம்பா, கேதாரம்,  ராமதீர்த்தம், கோகர்ணா, கோதாவரி, சப்தகந்தர்வா, மந்தாகினி, ஹரித்வாரா, ரிஷிகேசா,  ஸ்ரிங்கவேரபுரா, பிரயாகை, பிரதிஷ்டானபுரா, வாசுகி, போகவதி , த்வாரகா, இன்னும் எத்தனையோ  க்ஷேத்ரங்கள், நதிகள்,  ஆரண்யங்கள்  பேரை எல்லாம் புலஸ்தியர் பட்டியலிடுகிறார்.
(நான்  இத்தனை  பேர்களையும் சொன்னது எதற்காக என்றால்,  யாராவது  இதில் ஏதாவது ஒரு சில  க்ஷேத்ரம் போக நேரிட்டால்  உங்களுக்கு  பாக்கியம் என்று சொல்லத்தான். எல்லாவற்றிற்கும்  தீர்த்த யாத்ரை போவதென்றால்,  பல பிறவிகள் வேண்டும்.  ஆனால்  இவற்றில் ஏதாவது சிலதுக்கு  போனாலே  மறு பிறவி  கிடையாதே,  எப்படிப் போவது???)

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...