Monday, October 1, 2018

NALA CHARITHRAM



ஐந்தாம் வேதம். (மஹா பாரதம்) J. K SIVAN
நள சரித்திரம்

நளன் அயோத்தி அடைந்தான்

''வைசம்பாயனரே, தமயந்தியை எப்படியோ சேதி தேசத்து ராணிஇடம் அடைக்கலம் புக செயது விதி அவளுக்கு ஒரு பாதுகாப்பு தந்தது என்று நீங்கள் சொன்னது மனதுக்கு கொஞ்சம் நிம்மதியை தந்தது. ஆனால் நளன் என்ன ஆனான். கார்க்கோடன் சொன்னபடி அவன் அயோத்தியா தேசத்துக்கு நடந்து சென்றானே?'' அது பற்றி சொல்லுங்கள் என்றான் ஜனமேஜயன்.

''ஜனமேஜயா, உன்னைப்போல தான் யுதிஷ்டிரனும் ஆவலாக இந்த கேள்வியை கேட்டதற்கு வ்ரிஹதஸ்வ ரிஷி என்ன பதில் சொல்கிறார். கேள்.
'' பத்து நாள் இரவு பகலாக நடந்து நளன் ருது பர்ணன் அரசாண்ட அயோத்யா தேசம் அடைந்தான்.
யாரப்பா நீ, உனக்கு என்ன தெரியும் சொல். வேலை கொடுக்கிறேன்'' என்றான் ராஜா ருதுபர்ணன்..

''மஹாராஜா, குதிரைகளை செலுத்துவதில், பராமரிப்பதில், தேர் ஓட்டுவதில், எனக்கு அனுபவம் ஜாஸ்தி. என்னைமாதிரி யாரும் தேரோட்ட முடியாது என்றான் நளன் .சமையல் கலையிலும் நான் வல்லவன். (இதிலிருந்து தான் நள பாகம் என்கிற வார்த்தை நல்ல சமையலுக்கு கிடைத்தது). என்னை ஆதரிக்குமாறு வேண்டுகிறேன்'' என்றான் நளன் .

இன்றுமுதல் எனது அஸ்வங்களை உன் பொறுப்பில் விடுகிறேன். வர்ஷ்நேயனும், ஜிவலனும் உனக்கு உதவி செய்வார்கள் என்றான் ருதுபர்ணன்.

தன்னுடைய கொட்டகையில் அமர்ந்து தூக்கமில்லாமல் இரவில் தினமும் நளன் தமயந்தியை நினைத்து, ''கானகத்தில் காரிருளில் காரிகையை கைவிட்டுச் சென்றவன்'' என்று தனது செயகையை நினைத்து வருந்தி பாடுவான். அவனது உதவியாளன் ஜிவலன் ஒரு நாள் இரவு, அவனை ஒரு கேள்வி கேட்டான்

'' நீ எப்போதும் யாரைப் பற்றியோ ஒரு சோகப் பாட்டு பாடுகிறாயே யார் அது ? என்று கேட்டான்.

''அதுவா, அது ஒரு முட்டாளைப் பற்றி. அவன் ஒரு முட்டாள் மட்டுமல்ல. , கொடியவன், பொறுப்பற்றவன். பசியிலும் தாகத்திலும் தவிக்கவிட்டு, கட்டின மனைவியின் துணியைக் கூட வெட்டி உடுத்துக்கொண்டு சென்றவன் ஒருவனைப் பற்றி'' அவனைப் பற்றி அவன் மனைவி நினைக்கிறாளோ என்னவோ, எங்கிருக்கிறாளோ, என்ன கஷ்டப்படுகிறாளோ?'' அவன் எங்கெங்கோ சுற்றி ஒரு இடத்தில் இப்போது நிலைத்து நிற்கிறான்'' என்று பூடகமாக சொல்லி அனுப்புகிறான்.

அங்கே தமயந்தியின் தந்தை விதர்பா நாட்டரசன் பீமராஜன் ஆட்களை அனுப்பி நளனையும் தமயந்தியையும் அவர்களுக்கு என்ன ஆச்சு, எங்கிருக்கிறார்கள் என தேடுகிறான்.



சுதேவன் என்கிற ஒரு பிராமணன் சேதி தேசத்திற்கு சென்றபோது தமயந்தியை அரசகுமாரி சுனந்தாவோடு பார்க்கிறான். சுதேவன் தமயந்தியின் சகோதரன் நண்பன். எனவே தமயந்தியை அவனுக்கு தெரியும். அவளை அணுகி அவள் பெற்றோர், குழந்தைகள் யாவரும் நலம் என அறிவிக்கிறான். அவனோடு பேசுவதையும் தமயந்தி முழுவதையும் பார்த்த இளவரசி சுனந்தா தனது தாய் சேதி ராஜ்ய ராணியிடம் விஷயத்தைச் சொல்ல, அவள் சுதேவனை விசாரித்து விஷயம் எல்லாம் அறிகிறாள். தமயந்தியின் தாயும் அந்த ராணியும் சகோதரிகள் என்பதை கன்னத்தில் ஒரு மச்சம் காட்டிவிட்டது. உறவு புலப்பட்டதல்லாமல் பலப்பட்டது. ஏதோ தமிழ் சினிமாவில் வருவதைப்போல சம்பவங்கள் விறுவிறுப்பாக நடக்கின்றன அல்லவா?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...