Saturday, October 6, 2018

JKS 80

 என் பயணம் தொடரட்டும்......J.K. SIVAN 

                                                                                  என் பயணம் தொடரட்டும்......

எண்பதை  எட்டுவது ஒரு தனி அனுபவம்.  புரட்டாசி  மஹம்  நேற்று  6.10.2018   எனக்கு  79 கடந்து  காலம் என்னை எண்பதை எட்டி பார்க்கச்  செய்தது.  என்பது முடிந்து அடுத்த வருஷம்  ஆயிரம் பிறைகளை சந்தித்த  குரூப்பில் சேர்வேன்...... அது வரை  என்ன சாதித்தேன்?  திரும்பிப்பார்த்தால்   நீண்ட பாதை தெரியும். அடேயப்பா எத்தனை முள், கல், பள்ளம் மேடு. இதெல்லாமா  தாண்டி வந்திருக்கிறேன்.  ஏன்  இதை மட்டும் உன் கண் பார்க்கிறது. அங்கங்கே சில ஆனந்த மாக மரத்தடி நிழல், சுகமான தென்றல் காற்றும் உன்னை  மகிழ்வித்ததே  மறந்து விட்டாயா?  ஆமாம்  கிருஷ்ணன் எப்போதும் என்னை தாய்  குழந்தையின் கை  பிடித்து நடத்திச் செல்வது போல் தான் வழி நடத்தி இருக்கிறான்.  குழந்தை தடுமாறும்போதெல்லாம்  அதன் கையை அவன் விடவில்லையே.  அதனால் தான் அது பிடித்துக்கொண்டிருப்பது போதாது என்று அவன் கையும்  தாய் போல் அவன்  மேல் படர்ந்திருக்கிறது.

நான் நல்லது செயதிருந்தால் அது அவன் அருள். குறை இல்லாவிட்டால் மனிதன் இல்லை. அவன் தெய்வமாகிறானே. வீட்டில்  சில ஹோமங்கள்  குடும்பத்தோடு  சேர்ந்து நடத்தி அமைதியாக  எண்பதை  வரவேற்றேன். 

ஒரு ஆச்சர்யம்.  பரமாச்சார்யரை சதா நெஞ்சில் நிறுத்தி சப்தமின்றி அவரது பிடி அரிசி திட்டத்தை நிறைவேற்றிவரும் ஸ்ரீ ராம் நேற்று எதிர்பாராமல் என்னை வந்து சந்தித்தார். அவரது ஒவ்வொரு செயலும், சொல்லும் பரமாச்சாரியார்  உந்துதலில் தான்   ''பெரியவா சரணம் ''  என்று வெளிப்படும்.  அவர் ஏன்  திடீரென்று நேற்று என்னை காண நினைத்து என் வீடு  வந்து என்னை சந்தித்தார்!!   பெரியவா தனது தூதனை   சீடனை  தொண்டனை  அனுப்பி  வாழ்த்தினாரோ!   அப்படித்தான் படுகிறது.  ''எனக்கு உங்கள் 80வது பிறந்தநாள் தெரியாது. உங்களை இன்று பார்க்கவேண்டும் என்று ஒரு உந்துதல்....  மகா பெரியவா படத்தை  அவருக்கு என் ''பேசும் தெய்வம் '' புத்தகத்தோடு அளித்தபோது  அவர் சொன்ன வார்த்தை   ''பெரியவா தான் உங்களிடம் என்னை இன்று அனுப்பினார்......!

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...