Friday, May 18, 2018

SUR SAGAR



சூர் சாகரம்: J.K. SIVAN

சுப்ரபாதம்.

சூரதாசரை அனுபவித்து சில நாட்கள் சென்றதால் ஒரு தாகம் ஏற்பட்டு சில பாடங்கள் சேமித்தேன். ஆங்கிலத்தில் தான் படிக்க வேண்டும். வ்ரஜ பாஷை தெரியாதே. ஒரிஜினலை ரசிக்க வழியில்லை.

Awake, O Krishna awake, the night has gone arise,
no longer laze breathe the pure air of early morn;
the cowherd-lads come and gaze at you,
and seeing you asleep,
depart as swarms of bumblebees
fly from the lotus clusters.

விழியற்ற ஸூர் தாஸுக்கு வெளி உலகம் பிறவியிலிருந்தே ''அப்படியே'' தான் இருந்தது. வெளிச்சம் தெரிந்தால் தானே இருட்டு எது என்று உணரமுடியும். பகல் தெரிந்தால் தானே இருள் எப்படி இருக்கும் என தெரியும். அவருக்கு எல்லாமே இருளா ஒளியா ? உருவமா அருவமா? அவர் கிருஷ்ணன் என்ற ஒரே வார்த்தையில் அவனை எப்படியெல்லாம் மனக்கண்ணால் துய்க்க முடியுமோ அப்படி அனுபவிப்பவர். அவனாகவே வாழ்பவர்.

காதில் எல்லோரும் பொழுது விடிந்தது என்ற சொல்லை உச்சரிக்கும்போது அது உறக்கமின்மை என்று மட்டுமே தெரியும். ஆகவே கிருஷ்ணனை தூங்கியது போதும் கிருஷ்ணா எழுந்திரு. இரவு முடிந்துவிட்டதே. படுக்கையை விட்டெழு. இதோ பார்த்தாயா கூட்டத்தை. உன் நண்பர்கள், கோபர்கள் பசுக்களோடு கன்றுகளோடு வாசலில் நிற்கிறார்களை. நீயில்லாமல் அவர்களுக்கு எப்படி பொழுது போகும். யாருக்கு தான் போகும்? என்னடா கிருஷ்ணா இன்னுமா தூக்கம்? என்று குரல் கொடுக்கிறார்களே. தாமரைமலர்களை சுற்றி வண்டுகள் கூட்டம் கூட்டமாக வட்டமிடுவது ஏன். அதன் தேனிலும் அழகிலும் மயங்குவதால் தானே. நீயும் அப்படித்தானே கிருஷ்ணா?

Listen, the birds sing
aloud with glee O sweet child,
life of my life,
my sole wealth,
O darling boy,
bards and minstrels
sing your praises,
saying 'victory! victory!'

கீச் கீச்சென்று எத்தனை பறவைகள், வண்டுகள் கீதம் ராகம் ராகமாக இசைக்கிறது. தம்புரா போல ஒரே ஆதார சுருதியில் சில வண்டுகளின் சுநாதம். என்ன உற்சாகம் அவற்றிற்கு. உன் காதில் விழுகிறதா? என் இனிய கண்ணா, என் உயிரின் உயிரே, என் செல்வமே, கோபியர் கொஞ்சும் கோபாலா, ஆஹா எத்தனை ரிஷிகள், முனிவர்கள், மஹான்கள் உன்னை வாயார ஜெய ஜெய கோவிந்தா, கோபாலா என்று வாய் மணக்க பாடுகிறார்கள். நானும் சேர்ந்து கொள்கிறேன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...