Monday, May 28, 2018

KALA BAIRAVAR



             கால பைரவாஷ்டகம். 3 - J.K. SIVAN 


புராணம் என்ன சொல்கிறது?

சிவபெருமானை பிரிந்த ஆதி சக்தி பிரம்மாவின் மானசீக குமாரனான பிரஜாபதிதட்சன் மகளாக பிறந்தார். ஆகவே அவர் தாட்சாயினி என்றும் சதி தேவி என்றும் அறியப்பட்டார். பருவ வயதில் சிவபெருமானின் மீது காதல் கொண்டு, தந்தை தட்சனின் விருப்பமின்றி   சிவ பெருமானை திருமணம் செய்து கொள்கிறார். ஆணவம் கொண்டிருந்த பிரம்ம தேவரின் தலையை கொய்து பூசையின்றி போக சாபம் அளித்தமையினால் சிவபெருமான் மீது பிரம்ம குமாரனான தட்சன் கோபம் கொண்டிருந்தார். அதனால் சிவபெருமான் தாட்சாயினிக்கு அழைப்பு அனுப்பாமல் யாகமொன்றை தொடங்குகிறார்.  தனது கணவன் பரமசிவனை தக்க மரியாதையோடு அழைக்காத காரணத்தால் தந்தை  மூட்டிய  அந்த யாகத்தீயில் சதிதேவி விழுந்து இறக்கிறார்.

விஷயம்  சிவபெருமான் காதில் எட்டுகிறது.  கடும் கோபத்தோடு  சிவன்  சதிதேவியாரின் பூத உடலோடு அலைவதைக் கண்ட திருமால், சிவபெருமானை அந்த மாயையிலிருந்து அகற்றுவதற்காக சக்ராயுதத்தினால் திருமால் அவ்வுடலை தகர்த்தார். சதி தேவியாரின் உடல்கள் பல்வேறு பாகங்களாக பூமியில் சிதறுண்டது. அவ்வாறு சிதருண்ட சதிதேவியின் உடல் பாகங்களை சிவபெருமான் சக்தி பீடமாக மாற்றினார். தாராகாசுரன் போன்ற அரக்கர்களிடமிருந்து சக்தி பீடங்களையும், அங்குவரும் பக்தர்களைக் காக்கவும் ஒவ்வொரு சக்தி பீடத்திற்கும் ஒரு பைரவரை காவல் தெய்வமாக நியமனம் செய்தார்.

குத்தாலம் என்றவுடனே இந்த கோடையில்  ஜிலுஜிலு என்ற நீர்வீழ்ச்சி நினைவுக்கு வந்தால் நான் சொல்லும் கோவிலை அங்கே காணமுடியாது. இந்த குத்தாலம் தஞ்சாவூர் ஜில்லா வில் இருக்கிறது ஊர். அதிலிருந்து ரெண்டு கி.மீ. தூரம் சென்றால் ஒரு சின்ன காலபைரவ க்ஷேத்ரத்தை காணலாம்.  அந்த ஊருக்கே  க்ஷேத்ரபால புரம் என்று தான் பெயர். 


ஊருக்கே பிரதான கோவில் பைரவர் கோயில் தான்.  அவருக்கு  ஆனந்த கால பைரவர் என்று பெயர். பைரவர் என்கிறாரே கோபம் பொங்க  உக்ரமானவர் என்று தான் நமக்கு தெரியும்.  ஆனால் க்ஷேத்ரபாலபுரத்தில் அவர் ஆனந்தமாக இருக்கிறார். காரணம் இங்கே தான் அவருக்கு பிரமனின் ஐந்தாம் சிரத்தை கொய்த ப்ரம்மஹத்தி தோஷம் நீங்கியது.(முதலில் சிவனைப் போலவே பிரம்மாவுக்கும் ஐந்து தலை. தானும் சிவன் போலவே என்று இறுமாந்து  சிவனை அலட்சியம் செய்த ப்ரம்மாவின் ஐந்தாம் தலையை  சிவனின் அம்சமான பைரவர் கொய்ததால்  பைரவருக்கு  ப்ரம்மஹத்தி தோஷம் பிடித்து இந்த ஆலயத்தில் தான் அது நீங்குகிறது.   

பைரவருக்கு என்றே தனியாக உள்ள கோவில் இந்த தேசத்திலேயே இந்த சின்ன  க்ஷேத்ரபால  கிராமத்திலே தான்.  மேற்கே பார்த்த ஆலயம்.  ஸ்வேத விநாயகர் இருக்கிறார்.  பைரவர் நான்கு  கரங்களில் கபாலம், சூலம், பாசம், டமருகம் எல்லாம்  ஏந்தி நிற்கிறார். பைரவரைப் பார்த்தபடி நந்தி தேவர்.  அந்த கிராமத்தைச்  சேர்ந்த நமது முகநூல் நண்பர் ஒருவர் எனக்கு அந்த கோவிலை பற்றி படங்கள், விவரங்கள் அனுப்புவதாக சொல்லி காத்திருக்கிறேன். வந்ததும் இன்னொரு கட்டுரை தருகிறேன்.

பைரவர் தனது ப்ரம்மஹத்தி தோஷம் நீங்க சிவனை வேண்டியபோது ''நீ  பூலோகம் செல்.  அங்கே  திருவலஞ்சுழி சென்று பிக்ஷை எடு.என்னை நினைத்து வழிபடு''  என்கிறார்.

திருவலஞ்சுழி ஒரு அற்புதமான க்ஷேத்ரம்.  கும்பகோணம், சுவாமிமலை அருகில் இருக்கிறது.   இந்திரன் தேரோடு அங்கே வந்து அது புதைந்தது.   கல் சிற்பங்கள் நிறைந்த  புதைந்த அற்புதமான தேர் அங்கே காணலாம். ஸ்வேத விநாயகர்  (வெள்ளை கடல் நுரைப் பிள்ளையார் இன்னும் இருக்கிறார். சென்று காணலாம்) . பைரவர் அங்கே செல்கிறார். வெள்ளைப் பிள்ளையாரை சந்திக்கிறார்.

''கணேசா,  நான் உன் தந்தை ஆணைப்படி என் ப்ரம்ம ஹத்தி தோஷம் நீங்க  இங்கே வந்துள்ளேன் நீ எனக்கு உதவி செய்'' என்கிறார் பைரவர்.

''பைரவரே, உமது கையில் உள்ள சூலத்தை  அதோ அந்த பக்கம் தூக்கி எறியும்'' என்கிறார் ஸ்வேத விநாயகர்.
''பைரவர் எறிந்த சூலம் விழுந்த இடம் தான் க்ஷேத்ரபால புரம். அமைதியான சின்ன ஊர். 

'' பைரவரே  நீங்கள் அங்கே போய்  தியானம் செய்யும்''  என்கிறார் விநாயகர். க்ஷேத்ரபாலகனான காலபைரவர் தங்கிய இடம் ஆகையால் அந்த ஊர்  இன்றும் க்ஷேத்ரபாலபுரம் என்று அழைக்கப்படுகிறது. 

பைரவ மூர்த்தி அறுபத்து நான்கு பணிகளைச் செய்யும் பொருட்டு அறுபத்து நான்கு பைரவராக தோற்றமளிக்கின்றார்.
அவர்கள் யார் என்று அறிவோம்:

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...