Saturday, May 12, 2018

NEETHI SATHAKAM


நீதி சதகம். 
                                                                                            
   சுபாஷிதம்.


संपत्सु महतां चित्तं भवत्युत्पलकोमलं ।

आपत्सु च महाशैल- शिलासंघात कर्कशम् ॥

Sampatsu mahataam chittam bhavatyutpalakomalam
Aapatsu cha mahaashaila shilaasanghaata karkasham 1.61

நேரம் நன்றாக இருந்தால், பெரிய மனிதர்களின் இதயம்  மென்மையாக, பூப்போல, ரோஜா இதழ் போல் இருக்கும். நேரம் அப்படி அமையாமல்  தொட்டதெல்லாம் தவறாக போனால், அவர்கள் இதயம் கருங்கல் போல், மலைப்பாறை போல் இறுகி விடும்.

वाञ्झा सज्जनसंगतौ परगुणे प्रीतिर्गुरौ नम्रता  
विद्यायां व्यसनं स्वयोषिति रतिः लोकापवादात् भयम्।
भक्तिः शूलिनि शक्तिरात्मदमने संसर्गमुक्तिः खले- 
ष्वेते येषु वसन्ति निर्मलगुणास्तेभ्यो महद्भ्यो नमः ॥

Vaajnjhaa sajjanasangatau paragune preetirgurau namrataa
Vidyaayaam vyasanam swayoshiti ratih lokaapavaadaat bhayam
Bhaktih shoolini shaktiraatmadamane samsargamuktih khale-
shwete yeshu vasanti nirmalagunaastebhyo mahadbhyo namah 1.62
நல்லோர்  நட்பு தேடுவோர், பிறரது நல்ல குணங்களை திறந்த மனத்தோடு வரவேற்பவர்கள்,  பெரியோர்களிடம், குருமார்களிடம்  மதிப்பு மரியாதை, பக்தியும்,  அறிவுப்பசியும்  உடையோர், தீயவர் நட்பினால், தீய பழக்கங்களால் அவப்பெருமை வராது ஜாக்கிரதையாக இருப்போர், சிவனிடம் தூய பக்தி கொண்டோர்,  மனத்திண்மை, கட்டுப்பாடு கொண்டவர்கள், தீயவரை அண்டாதிருப்போர்   -- இந்த குணம் கொண்ட  எந்தரோ மஹானுபாவுலு அந்தரிகி வந்தனமு  என்கிறார்  பர்த்ருஹரி.

विपदिधैर्यमथाभ्युदये क्षमा
सदसि वाक्पटुता युधि विक्रमः ।
यशसिचाभिरुचिर्व्यसनं श्रुतौ
प्रकृतिसिद्धमिदं हि महात्मनाम् ॥

Vipadi dhairyamathaabhyudaye kshamaa
Sadasi vaakpatutaa yudhi vikramah
Yashasi chaabhiruchirvyasanam shrutau
Prakriti siddhamidam hi mahaatmanaam 1.63
''துன்பம் வந்தால் நகுக''  மட்டும் போதாது. தைரியமாக அதை எதிர் கொள்ளவேண்டும், அஞ்சாமையுடன் அதை வெற்றி கொள்ளவேண்டும்.  அதே போல்  ஓஹோ என்று  இருக்கும்போது தலை பெரிதாகி கனமாகி விடாமல் அமைதி, பொறுமை மேற்கொள்ள
வேண்டும். மேடையில், கூட்டத்தில்  அறிவு பூர்வமாக  எல்லோரையும்  கவரும் வகையில்  உரையாற்றவேண்டும்.  யுத்தம் வந்தால் வீரத்தை நிலை நாட்டி வெற்றிவாகை சூடவேண்டும். பெருமை புகழ் வாகை சூட ஆர்வம் வேண்டும். ஞானம் எங்கிருந்தாவது  வரும் என்று தேட
வேண்டும்.  இந்த  குணங்கள் தான் வாழ்க்கையில்  வெற்றி பெறுபவர்களிடம், பெரியவர்களிடம் உண்டு.

संतप्तायसि संस्थितस्य पयसो नामापि न श्रूयते
मुक्ताकारतया तदेव नलिनीपत्रस्थितं राजते ।
मध्ये सागरशुक्तिमध्यपतितं तन्मौक्तिकं जायते
प्रायेणाधम मध्यमोत्तमगुनाः संसर्गतो देहिनाम् ॥

Santaptaayasi samsthitasya payaso naamaapi na shrooyate
Muktaakaaratayaa tadeva nalineepatrasthitam raajate
Madhye saagarashuktimadhyapatitam tanmouktikam jaayate
Praayenaadhama madhyamottamagunaah samsargato dehinaam 1.66

பழுக்க காய்ச்சிய  இரும்பின் மேல் விழும் ஒரு துளி நீர் கொப்புளித்து, ஆவியாகி  மறைகிறது.  அதே ஒரு துளி  தாமரை இலை மேல் விழுந்தால் ?  அழகாக முத்து முத்தாக விளையாடுகிறது. அதே ஒரு துளி முத்துச் சிப்பிக்குள் விழுந்தாள் விலையுர்ந்த முத்தாகிறது. 
இந்த ஒரு துளி ஜலம் போல் தான் மனிதர்களும். அவனது குணங்கள், பண்பு, சிறப்பு தான் அவன் யார்  என்று காட்டுகிறது. அவன் யாரோடு சேர்கிறான் என்பதில் தான் அவன் நாடியவன் சூடான இரும்பா, தாமரை இலையா, முத்துசிப்பியா என்று காட்டும்.  அதற்காக தானே  உன் நண்பன் யார் என்று சொல் நீ யார் என்று சொல்கிறேன் என்பது. 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...