Thursday, May 24, 2018

GITANJALI



ரபீந்திரநாத் தாகூர் -  J.K. SIVAN 

                                                                    கீதாஞ்சலி
 ரவீந்திரநாத் தாகூரை புரிந்து கொள்வது சற்று கடினமாக இருக்கலாம். அவர் ஒரு வேதாந்தி. எண்ணற்ற வளமான கற்பனை அவர் சொல்லும் கருத்துகளை மூடி மறைத்தாலும் உன்னிப்பாக கவனித்தால் அவர் சொல்ல வரும் உயர்ந்த பக்தியம் சரணாகதியும்  வெளிப்படும்.
++


Obstinate are the trammels, but my heart aches when I try to break them.
Freedom is all I want, but to hope for it I feel ashamed.
I am certain that priceless wealth is in thee, and that thou art my best friend, but I have not the heart to sweep away the tinsel that fills my room
The shroud that covers me is a shroud of dust and death; I hate it, yet hug it in love.
My debts are large, my failures great, my shame secret and heavy; yet when I come to ask for my good, I quake in fear lest my prayer be granted.

என்னவென்று  சொல்வேன், இதை எப்படி சொல்வேன்?  என்னை சுற்றிலும்  வலை கெட்டியாக பின்னப்பட்டிருக்கிறது.  நான் எப்படி விடுதலை பெறுவேன்?  என் இதயம் வெடித்து விடும் போல் இருக்கிறது. ஒவ்வொருமுறையும் இதிலிருந்து  தப்ப நான் முயற்சிக்கும்போது,  என் பலஹீனம் தான் மிஞ்சுகிறது. தோல்வியை  விடாமல் தழுவுகிறேன்.  கிருஷ்ணா  ஏன் எனக்கு இப்படி ஒரு நிலை?

நான் என்ன கேட்கிறேன்? ஒரு சுதந்திர பறவையாக நானும்  ஒரு குருவியை, புறாவை, கிளியை போல் உலாவ முடியாதா? அது கிடைக்கும் என்று நம்பிக்கையைக்கூட  இழந்து வேதனையும் அவமானமும் படுகிறேன்!

கிருஷ்ணா  நீ  ப்ரபஞ்சமனைத்திலும் மஹா செல்வந்தன். என் உயிர் நண்பன். இருந்தும்  என்னைப் பார்த்தாயா  இதோ என் அறையில் இருக்கும்  ஒரு ஜரிகை தோரணத்தில் மனம் மயங்கி அதை கூட எடுத்து வெளியே  போடா மண் இல்லாத ஒரு அல்ப ஜீவன். 

இதோ இருக்கிறதே  ஒரு நீண்ட துணி.  அது தான்  எனது கடைசி ஆடை . அதுவே என்னோடு புறப்படப்போகிறது. கடைசித்  துணி. புழுதியும் மரணமும் கலந்த ஒரு கலவை. அதன் மீது வெறுப்பு தான் எனக்கு. இருந்தும் அதைதான் என்னால் வா  என்னிடம் என்று  அன்போடு தழுவ முடிகிறது.   

எங்கும் எதற்கும் எவரிடமும் நிறைய கணக்கில்லாமல் கடன் பட்டிருக்கிறேன். நான் கண்ட தோல்விகள் மலை அளவு. நான் பட்ட அவமானங்கள் என்னுடன் ரகசியமாக மறையட்டும். அப்பப்பா, அவற்றின்  சுமை,  கனம்,   என்னால் தாங்கமுடியவில்லையே. 

இதெல்லாம் புடைசூழ உன்னை தேடுகிறேன் கிருஷ்ணா, உன்னை வேண்டுகிறேன். எனக்கு நல்லதே செய். அமைதி கொடு.  ஒருவேளை  நீ  எனக்கு அடைக்கலம் கொடுக்க மாட்டாயோ, என் பிரார்த்தனையை செவிமடுக்கமாட்டாயோ  என்று எண்ணும்போதே  என் உடல் பயத்தில் நடுநடுங்குகிறதே.
++

He whom I enclose with my name is weeping in this dungeon. I am ever busy building this wall all around; and as this wall goes up into the sky day by day I lose sight of my true being in its dark shadow.

I take pride in this great wall, and I plaster it with dust and sand lest a least hole should be left in this name; and for all the care I take I lose sight of my true being.

என் பெயர் தாங்கிய ஒரு ஜீவனை, என்னை தான்,  இந்த இருட்டறையில் பார்க்கலாம். எந்நேரமும் என்னை சுற்றி சுவர் எழுப்பிக் கொண்டு தான் இருக்கிறேன். மேலே மேலே உயரமாக வானத்தை தொடட்டும் இந்த சுவர்கள். அதன் இருண்ட நிழலுக்குள் நான் எனது என்ற என் அடையாளமே மறையட்டுமே. 

என்னைச் சுற்றியுள்ள இந்த சுவர்களைப்  பார்த்தால்  பெருமையாகதான் இருக்கிறது எனக்கு. மண்ணும், தூசியும் , புழுதியும் தான் இந்த சுவர்களுக்கு நான் அடிக்கும் வண்ணம். ஒரு துளி ஓட்டை, துளை,  கூட தெரியக்கூடாது. அதன் வழியாக என் பெயர் நுழையக்கூடாது. நான் எதற்காக இவ்வளவு அக்கறையோடு இப்படி எல்லாம் செயகிறேன் தெரியுமா. '' நான்,  எனது '' என்பவை எல்லாம் எனக்கு கூட  கண்ணுக்கு த் தெரியக்கூடாது. 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...