Tuesday, May 8, 2018

KRISHNA



மந்தைவெளியில் ஒரு மாய கிருஷ்ணன்
J.K. SIVAN


எல்லோராலும் சூர்தாஸைப் போல், ஊத்துக்காடு போல், பாரதி, கண்ணதாசன் போல் பாடமுடியாது என்றாலும் அவர்கள் பாடல்களை அனுபவித்து பாடலாம், கேட்கலாம், பேசலாம்.

பக்தியில் யாரும் அளவு குறைந்தவர்கள் இல்லை. வெளிப்படுத்திய முறை தான் அதிசயம், அபூர்வம்.

எனக்கு ஒரு நல்ல நண்பர். பல வருஷங்களுக்கு முன்பு பரனூரில் இருந்து கிருஷ்ணப்ரேமி அண்ணாவிடமிருந்து அவருக்கு ஒன்றிரண்டு கிருஷ்ணன் விகிரஹங்கள் அவர் கையாலேயே ஆசிர்வாதத்துடன் பெற்றார். நாள் தவறாமல் மணிக்கணக்காக அலங்காரங்கள் செயது, தொட்டில் கட்டி, ஊஞ்சலில் வைத்து ஆட்டி, வித வித ஆடைகள் தயாரித்து, ஆபரணங்கள் பூட்டி சுவை மிக்க நைவேத்தியங்கள் படைத்து, பாடி, ஸ்தோத்திரங்கள் சொல்லி மகிழ்பவர். அவரது கிருஷ்ணனின் படங்களை எனக்கு அனுப்புவார். ஆனந்தமாக இருக்கும்.

இன்று ஒரு சூர்தாஸ் கவிதையோடு நேற்று என் நண்பரிடமிருந்து வந்த அந்த கிருஷ்ணன் படங்களும் அனுப்புகிறேன் பாருங்கள்.

சூர் சாகரம் :

''யார் சொன்னது என்னால் பார்க்க முடியாது என்று? புறக்கண் மட்டும் தான் கண்ணா? அகக்கண்ணுக்கு யாருமே கண்ணாடி தேடி போட்டுக்கொள்ளவேண்டாமே நன்றாக தெரியுமே? நான் பார்க்கிறேன் தெரிகிறதா?

கூட்டம் கூட்டமாக தாமரைகள் மலர்ந்திருக்கிறதே. எத்தனை வித வண்ண வண்ண சிறிதும் பெரிதுமான வண்டுகள் அதை மொய்த்துக்கொண்டிருக்கிறது. உரக்க ரீங்கார சப்தம் ஆனந்தமாக கேட்கிறதே. அது எப்படி இருக்கிறது என்று சொல்லட்டுமா? உலக பந்த பாசங்களை வெறுத்து கிருஷ்ணா உன் மீது ஆனந்தமாக நாமசங்கீர்த்தனம் பாடுவார்களே அது போல்!

''Clusters of lotuses burst into bloom
the bumblebees humming with sweet sound
leave the lotuses;
as though the devout renouncing worldly ties,
in your love drowned
chant your name as they go about.

உன் அம்மா யசோதை இதோடு நான்கு தடவை உன்னை உலுக்கி ''எழுந்திரடா கிருஷ்ணா, பொழுது விடிந்துவிட்டதே என்று எழுப்புவது எனக்கு தெரியும். அவள் அன்பு, பாசம் உனக்கு மட்டுமா புரியும், எனக்கும் தெரியும். உன் உறக்கம் நீங்கி நீ விழித்தாய். அந்த பார்வையில் என் உலக பந்த பாசங்கள் அனைத்துமே தூர விலகி விட்டதே.
என் மாயை அகன்றுவிட்டதே. என் மன சஞ்சலங்கள்அழிந்துவிட்டன, கோவிந்தா என்கிறபோது எனக்கு எவ்வளவு ஆனந்தம், பரமானந்தம்.

Hearing his mother's words with love
drenched the Lord of Mercy arose from his bed;
the world's woes vanished,
maya's net was rent.

Says Suradasa,
'Seeing his lotus face delusion fled;





all doubts and dualities were destroyed and I found in Govinda eternal joy.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...