Sunday, May 20, 2018

NEETHI SATHAKAM

ராஜா  பர்த்ருஹரி   --   ஜே.கே. சிவன் 

                                                                      சுபாஷிதம் 

एते सत्पुरुषाः परार्थघटकाः स्वार्थान् परित्यज्य ये
सामान्यास्तु परार्थमुद्यमभृतः स्वार्थाविरोधेन ये ।
तेऽमी मानुषराक्षसा: परहितं स्वार्थाय निघ्नन्ति ये
ये तु घ्नन्ति निरर्थकं परहितं ते के न जानीमहे ॥

Ete satpurushaah pararthaghatakaah swaarthan parityajya ye
Saamaanyaastu paraarthamudyamabhritah swaarthaavirodhena ye
Te’mee maanusha raakshasaah parahitam swaarthaaya nighnanti ye
Ye tu ghnanti nirarthakam parahitam te ke na jaaneemahe 1.74

மனிதர்களில்  இரு வகை.  உயர்ந்த ரகத்தை சேர்ந்தவர்கள், மற்றவர்களுக்கு உதவ தமது வசதிகள், தேவைகளைக்கூட, மனப்பூர்வமாக  தியாகம் செய்பவர்கள். பண வசதி, செல்வம் குவிந்தவர்களாக இருக்கவேண்டும் இதற்கு  என்பதில்லை.  அடித்தட்டு மனிதர்கள், ஏழைகளுக்கும்  கூட  சிறந்த இதயம் உண்டு.  அவர்களிடம்  இருப்பது எதுவானாலும் அதை மறு யோசனை இன்றி மற்றவர்க்கு அள்ளி  தருபவர்கள்.  இந்த மாதிரி சில தெய்வங்களை  நான்  சந்தித்திருக்கிறேன்.  தனக்கென வாழா பிறர்க்குறியாளர்கள்  என்ற வள்ளுவர் வாக்கை நிரூபிப்பவர்கள்.  
ரெண்டாம் வகை  மனிதர்கள்----   மனிதர்களா அவர்கள்?, அரக்க கும்பல்.      தமது சுய நலனுக்காக  ஊரையே விற்று தின்பவர்கள்,  நமக்கு இவர்களை நிறைய  தெரியும், தினமும்  நாம் எங்கும்  சுவற்றிலும்  எவற்றிலும் காணும்,   கை கூப்பி நம்மை வணங்கும் வெள்ளை சட்டையர்கள்.   நீரில்லா  நெற்றி அற்றவர்கள். தயங்காமல் துரோகம் செய்பவர்கள். தனக்கு எந்த கெடுதலும் செய்யாத முகம் தெரியா மனிதர்களுக்கு கூட  இவ்வளவு கெடுதல் செய்யும்  இவர்களைபற்றி என்ன சொல்வது  என்று தலையை சொறிகிறார்  பர்த்ருஹரி'
भग्नाशस्य करण्डपिण्डिततनोः म्लानेन्द्रियस्य क्षुधा
कृत्वाखुर्विवरं स्वयं निपतितो नक्तं मुखे भोगिनः ।
तृप्तस्तत्पिशितेन सत्वरमसौ तेनैव यातः पथा
लोकाः पश्यत दैवमेव हि नृणाम् वृद्धौ क्षये कारणम् ॥

Bhagnaashasya karandapinditatanoh mlaanendriyasya kshudhaa
Kritwaakhurvivaram swayam nipatito naktam mukhe bhoginah
Triptastatpishitena satwaramasau tenaiva yaata pathaa
Lokaah pashyata daivameva hi nrinaam vriddhau kshaye kaaranam 1.86

பர்த்ருஹரி ஒரு வரிக்கதை ஒன்று சொல்கிறார். கேட்கிறீர்களா?
பாம்பு பிடாரன் ஒரு கொடிய கருநாகத்தை பிடித்து  விஷப்பல்லை நீக்கி பிரம்பு கூடையில் அடைத்து அது  சுதந்திரம் இழந்து  வாடுகிறது.  அப்போது ஒரு நாள் இரவு அந்த பிரம்பு கூடையை ஒரு கொழுத்த எலி கடித்து உள்ளே என்ன இருக்கிறதுஎன்று தெரியாமல் தலையை நுழைக்க, பசித்த  பாம்பு அல்வா போல் அதை விழுங்கிவிட்டு  அந்த  எலி ஏற்படுத்திய துவாரம் வழியாக சுதந்திரத்தை நோக்கி  சர சரவென்று ஓடியது. 

விதி ஒன்றே  நமது இன்பத்துக்கும் துன்பத்துக்கு காரணம்  என்கிறார் பர்த்ருஹரி.


छिन्नोऽपि रोहति तरुः
क्षीणोप्युपचीयते पुनश्चन्द्र: ।
इति विमृशन्तस्सन्तः
सन्तप्यन्ते न विलुप्ता लोके ॥

Chchhinno’pi rohati taruh ksheeno’pyupacheeyate punashchandrah
Iti vimrishantah santah santapyante na viluptaa loke  1.87


இயற்கையின் ஆச்சர்யமான செயல் எது தெரியுமா.  வெட்ட வெட்ட மீண்டும் துளிர்க்கும் செடி, மரம்,  தேய்ந்து தேய்ந்து மறைந்து மீண்டும்  வளரும் சந்திரன், அது போல தான் எத்தனை துன்பங்கள் வந்தாலும் மீண்டும் அமைதி, இன்பம் வளரும். இது நிச்சயம்.   

नेता यस्य बृहस्पतिः प्रहरणं वज्रं सुराः सैनिकाः
स्वर्गो दुर्गमनुग्रहः किल हरेरैरावतो वारणः।
इत्यैश्वर्यबलान्वितोऽपि बलिभिर्भग्नः परैः संगरे
तद्व्यक्तं वरमेव दैवशरणं धिक् धिक् वृथा पौरुषम् ॥

Netaa yasya brihaspatih praharanam vajram suraah sainikaah
Swargo durgamanugrahah kila harerairaavato vaaranah
Ityaishwaryabalaanwito’pi balibhirbhagnah paraih sangare
Tadvyaktam varameva daivasharanam dhigdhigvrithaa paurusham 1.88

புராணங்கள் பல பக்கங்கள் படித்தால் ஒரு உண்மை புரியும்.  தேவர்களின் தலைவன் இந்திரன் சக்தி வாய்ந்தவன். ப்ரஹஸ்பதியையே  குருவாக கொண்டவன்.  தேவர்களையே சேனையாக அடைந்தவன். எவராலும் தாக்க முடியாத  வஜ்ராயுதம் கொண்டவன்.  இருப்பினும் எதற்கு பலமுறை அசுரர்களிடம் தோற்றான்? சிவன் நாராயணன்  துணை நாடினான்? மனிதனோ தேவனோ  தனது சக்தியை  முழுதும் நம்பினால் மட்டும் போதாது. தெய்வத்தின் துணையும் வேண்டும் என்று காட்டவே.  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...