Wednesday, May 16, 2018

GITANJALI




கீதாஞ்சலி - J.K. SIVAN

I must launch out my boat. The languid hours pass by on the shore---Alas for me!
The spring has done its flowering and taken leave. And now with the burden of faded futile flowers I wait and linger.

The waves have become clamorous, and upon the bank in the shady lane the yellow leaves flutter and fall.

What emptiness do you gaze upon! Do you not feel a thrill passing through the air with the notes of the far-away song floating from the other shore?

கிருஷ்ணா எனக்கு நேரமாகி விட்டதடா. என் படகை இழுத்து நீரில் இறக்கி நான் வெகு தூரம் பயணம் செய்யவேண்டும். காற்று பலமாக வீசுகிறது. மழையும் வரலாம். வரட்டுமே.
வெகுநேரம் வெயிலில் சுடு மணலில் படகை சுத்தம் செய்து .சோர்வாகிவிட்டது.

வசந்த கால தென்றல் வந்தது. போனது. நன்றாக எங்கும் பூத்துக் குலுங்கச் செய்துவிட்டு காய்ந்த மலர்களை என்னருகே உதிர்த்து விட்டு போய்விட்டது. நான் இனி இந்த காய்ந்த மலர்களை, வாடிய இதழ்களை அள்ளி தூர வீசவேண்டியது தான் அவற்றின் குறுகிய வாழ்க்கை சரித்திரமா ?

அலைகள் கொந்தளிக்கிறது. ஓ வென்று இனம்புரியாத ஒரு இரைச்சல். நான் கடலில் சற்று தூரம் சென்றுவிட்டாலும் திரும்பிப் பார்க்கிறேன். கரையில் எங்கோ வெகு தூரத்தில் நிற்கும் அந்த வயதான மஞ்சள் பூ மரம் காற்றில் கிளைகளை ஆட்டி காய்ந்து போன மஞ்சளாக மாறிய இலைகளை உதிர்க்கிறது.

என்னைச் சுற்றி எல்லையற்ற நீர். அமானுஷ்யம். எதை நான் வெறித்து பார்க்கிறேன்? கிருஷ்ணா, காற்றில் இப்படி அலைகளின் சப்தத்தை ஸ்வரமாக தாளமாக வைத்து உன் குழலோசை அவற்றின் ஊடே எங்கோ எதிர்க்கரையில் மரங்களிடையே இருந்து காற்றில் மிதந்து என் காதில் விழுவதாக தோன்றுகிறது.

++++

The deep shadows of the rainy July, with secret steps, thou walkest, silent as night, eluding all watchers.

Today the morning has closed its eyes, heedless of the insistent calls of the loud east wind, and a thick veil has been drawn over the ever-wakeful blue sky.

The woodlands have hushed their songs, and doors are all shut at every house. Thou art the solitary wayfarer in this deserted street. Oh my only friend, my best beloved, the gates are open in my house---do not pass by like a dream.

மழை அறிகுறி ஜூலை மாதம் நன்றாகவே தெரிந்து விடும். கிருஷ்ணா, வாடைக்காற்று உடலை ஊடுருவி செல்லும். நீ எதிலும் சம்பந்தம் இல்லாதவன். இரவைப் போலவே அமைதியானவன். யார் பார்த்தால் என்ன, பார்க்காவிட்டால் என்ன? நினைப்பவனுக்கு நீ மனதில் தோன்றுபவன்.

இன்று என்னவோ காலைவேளையே ஒளி குன்றி இருக்கிறது.கிழக்கே இருந்து தொடர்ச்சியாக பலமான காற்று வீச்சு. மரங்களின் அசைவு ஒலியோடு. புழுதி தரையிலிருந்து மேலே எழும்பி காற்றில் புகைமண்டலம் போடுகிறது. நீல வானமே தெரியவில்லை. ஒரு பெரிய கருப்பு திரை.

அடர்ந்த காடுகளில் இருந்து மூங்கில்கள் உராய்ந்து காற்றில் உன் வேணுகானமாக ஏதோ இனிமையான சப்தம் கேட்கிறது. காற்றில் திசை மாறி எங்கோ சென்று எங்கிருந்தோ மீண்டும் மீண்டும் என் செவியில் நுழைகிறது. எங்கள் கிராமத்தில் வீடுகளே கம்மி. அதில் எல்லாவற்றிலும் கதவுகள் ஜன்னல்கள் எல்லாமே மூடி விட்டார்கள். காற்று கதவுகளை பிய்த்துக்கொண்டு பறக்குமே. கிருஷ்ணா, ஜன தவறநடமாட்டமே இல்லாத இந்த தனிமையான ஒற்றையடிப்பாதையில் நீ ஒருவன் மட்டும் வழி தவறி வந்தவனா? அல்லது வழக்கமான வழி தெரிந்து வந்தவனா?

கிருஷ்ணா, என் கதவுகளை மற்றவர்கள் போல் நான் மூடி வைக்க வில்லை. திறந்தே வைத்திருக்கிறேன். நீ ஒருவனே என் நண்பன். உண்மை அன்பன். வா கிருஷ்ணா வா, என் நெஞ்சக்கதவும் வாசலைப்போலவே திறந்து இருக்கிறது. நீ வருவாய் என்று. வா. கனவு போல் கண் சிமிட்டி மறையாதே.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...