Sunday, May 13, 2018

GAJENDRA MOKSHAM



நாராயணீயம் - கஜேந்திர மோக்ஷம். 3 -
J.K. SIVAN

Shlokam: 07

आर्तिव्यक्तप्राक्तनज्ञानभक्ति:
शुण्डोत्क्षिप्तै: पुण्डरीकै: समर्चन् ।
पूर्वाभ्यस्तं निर्विशेषात्मनिष्ठं
स्तोत्रं श्रेष्ठं सोऽन्वगादीत् परात्मन् ॥७॥

aartivyakta praaktana j~naanabhaktiH shuN
DOtkshiptaiHpuNDariikaissamarchan |
puurvaabhyastannirvisheShaatmaniShThaM
stOtra shreShThaMsO(a)nvagaadiitparaatman || 7

கஜேந்திரன் எப்போதும் நீரில் குளித்து அதிலிருந்து சில தாமரை மலர்களை பறித்து மானசீகமாக நாராயணனுக்கு பூஜை பண்ணி மலரை சாத்துவான். முதலையோடு போராடினாலும் அவனது வழக்கமான மலர் சூட்டும் பழக்கத்தை அவன் மறக்கவில்லை. நாராயணா, உன்னை மனதால் வேண்டியவாறு அவன் தன் உயிரைக் காப்பதற்கு முதலையோடு மன்றாடிக்கொண்டிருந்தான். அவனது பழைய ஜென்மத்தில் அற்புதமாக உன்னை பாடுவான். எனவே அந்த நினைவோடு உன்னை மனதார பாடிக்கொண்டும் இருந்தான்.
Shlokam: 08
श्रुत्वा स्तोत्रं निर्गुणस्थं समस्तं
ब्रह्मेशाद्यैर्नाहमित्यप्रयाते ।
सर्वात्मा त्वं भूरिकारुण्यवेगात्
तार्क्ष्यारूढ: प्रेक्षितोऽभू: पुरस्तात् ॥८॥

shrR^itvaa stOtraM nirguNasthaM samastaM
brahmeshaadyairnaahamityaprayaate |
sarvaatmaa tvaM bhuuri kaaruNya vegaat
taarkshyaaruuDhaH prekshitObhuuHpurastaat || 8
கஜேந்திரன் இவ்வாறு துதி பாடியது அவனுக்கு மட்டும் அல்ல, விண்ணுலகில் ப்ரம்மா, சிவன் தேவாதி தேவர்களுக்கும் முக்கியமாக நாராயணா உனக்கும் அல்லவா கேட்டது. ஆனால் மற்ற தெய்வங்கள் கஜேந்திரன் தம்மை துதித்து பாடவில்லை உன்னையே நினைத்து தான் வேண்டினான் என்று அறிந்து கொண்டதால் கஜேந்திரனுக்கு தமது உதவி தேவை இல்லை போல் இருக்கிறது என்று வாளா விருந்தார்கள்.

நீ என்ன செய்தாய்? உன்னை துதித்து கஜேந்திரன் வேண்டியது காதில் விழுந்தது, கருடனை அழைத்தாய், கையில் சுதர்சன சக்ரத்தோடு அவன் மேல் அமர்ந்தாய் திருக்கூட மலை காட்டின் நடுவே இருந்த அந்த குளத்திற்கு வந்து சேர்ந்தாய். உனது கருணையே கருணை நாராயணா!
Shlokam: 09
हस्तीन्द्रं तं हस्तपद्मेन धृत्वा
चक्रेण त्वं नक्रवर्यं व्यदारी: ।
गन्धर्वेऽस्मिन् मुक्तशापे स हस्ती
त्वत्सारूप्यं प्राप्य देदीप्यते स्म ॥९॥

hastiindraM taM hastapadmena dhR^itvaa
chakreNa tvaM nakravaryaMvyadaariiH |
gandharve(a)smin muktashaape sa hastii
tvatsaaruupyaM praapya dediipyatesma || 9

கண நேரத்தில் அங்கே நடந்ததை உணர்ந்தாய். நாராயணா, உன் தாமரை மலர்க்கை அதிலிருந்த சுதர்சன சக்ரத்தை ஏவியது. கண் இமைக்கும் நேரத்தில் முதலையின் கழுத்து துண்டாகியது. கஜேந்திரன் கால் முதலையின் பிடியிலிருந்து விலகியது. முதலையாக இருந்த கந்தர்வனும் தேவல ரிஷியின் சாபத்திலிருந்து விமோச்சனம் பெற்றான். கஜேந்திரனும் உன் அருளால் தெய்வீக ஒளி பெற்று உன்னை அடைந்தான். அவன் உன்னை அடைந்ததால் கஜேந்தரன் ''நீ யானான்'' என்று சொல்லட்டுமா?

Shlokam:10
तद्वृत्तं त्वां च मां च प्रगे यो
गायेत्सोऽयं भूयसे श्रेयसे स्यात् ।
इत्युक्त्वैनं तेन सार्धं गतस्त्वं
धिष्ण्यं विष्णो पाहि वातालयेश ॥१०॥

etad vR^ittaM tvaaM cha maaM cha prageyO gaayets
O(a)yaM bhuuyase shreyasesyaat |
ityuktvainaM tena saardhaM gatastva
M dhiShNyaM viShNO paahivaataalayesha ||

எங்கும் நிறை பிரமமான நாராயணா, குருவாயூரப்பா, ஒன்று மட்டும் இதன் மூலம் அனைவரும் அறியட்டும். அப்போது நீ என்ன சொன்னாய் என்று நினைவிருக்கிறதா?

யார் இந்த கஜேந்திர மோக்ஷம் ஸ்தோத்ரத்தை விடிகாலையில் பாடுகிறார்களோ, துளியும் சந்தேகத்துக்கு இடமில்லாமல், சகல சௌபாக்கியங்களும் பெற்று ஆனந்தமாக வாழ்ந்து அவர்கள் என்னோடு வைகுண்ட பதவி அடைவார்கள் '' என்னையும் ரக்ஷிப்பாய் கஜேந்திரனைப் போல குருவாயூரப்பா என்று நாராயணன் நம்பூதிரி இந்த ஸ்லோகத்தை பாடி முடிக்கிறார்.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...