Saturday, May 26, 2018

SIVAN SIR



ஒரு ரகசிய செய்தி -   ஜே.கே. சிவன் 





 - j.k. sivan

என்னை ''சிவன் சார்'' என்று நிறைய பேர் நட்போடு கூப்பிடும்போது ' வேண்டாம்  தாத்தா சார்'' என்றே கூப்பிடுங்கள் என்கிறேன்.  நான் ஏன் சங்கடத்தோடு நெளிய வேண்டும் என்பதற்கு ஒரு முக்ய காரணம் என்ன என்பதை நான் விளக்க வேண்டாமா?.

''சிவன் சார்'' என்பது ஒரு கனமான உயர்ந்த பெயர். அதற்கு என்று ஒரு தனி மரியாதை, மதிப்பு, கவுரவம் என்றும் உண்டு. எனக்கு நிச்சயம்  அந்த தகுதி கிடையாது.அதை நான் சுவீகரிக்க கூடாதே.  ஏன் தெரியுமா?'  இதோ காரணம் சொல்கிறேன்.

வேறொன்றும் இல்லை, ஒருவரை நீங்கள்  'இதோ இருக்கிறாரே இவர் ஒரு குபேரன், நாராயணன், அந்த சாக்ஷாத் ஹரிச்சந்திரன்'' என்றால் அவர் அதை ''ஆமாம் வாஸ்தவம்'' என்றா ஒப்புக்கொள்வார்? சங்கோஜம் வந்து ஒட்டிக் கொள்ளாதா?   மற்றவர் புகழ்வதற்கு தான் அருகதை அற்றவர் என்று அவருக்கே புரியாதா? இதே ப்ராப்ளம் தான் எனக்கு.

''சிவன் சார்'' என்ற பெயருக்கு உரியவர் ஒரு உன்னத கலி புருஷர். உங்களில் நிறைய பேருக்கு அவரைத் தெரியும், தெரிந்திருக்கும். அவரைப்பற்றி அறியாதவர்களுக்கு கீழ்க்கண்ட சில பாராக்கள் அவரை அறிமுகம் செய்விக்கும்.

அவரை ''சிவன் சார்'' என்றால் தான் தெரியும்.. உண்மைப் பெயர் எவருக்குமே தெரிய வாய்ப்பில்லை. . அவரது இயற்கைப் பெயர் பிரம்ம ஸ்ரீ சதாசிவ சாஸ்திரிகள். அது அவருக்கே கூட மறந்து போய்விட்டிருக்கும். . ரொம்ப நெருக்கமானவர்களுக்கு அவர் 'சாச்சு' . மஹா பெரியவாளே அவரை அப்படித்தான் கூப்பிடுவார்.

அப்படியென்ன அவரிடம் ஏதோ சக்தி? எதற்காக அவரை நாம் தெரிந்து கொள்ளவேண்டும்.
அவர் ஒரு அருமையான ஓவியர், போடோக்ராபர்.  இணைத்திருப்பது  போட்டோவா ஓவியமா என்று வியக்க வைக்கிறதே

இது தான் காரணமா ? இல்லை சார்.

சாச்சு, என்கிற சிவன் சார் மஹா பெரியவாளின் உடன் பிறப்பு. ஒரு யோகி. அமைதியாக த்யானத்தில் ஆன்மீக பணியில் ஈடுபட்டு வாழ்ந்தவர். இப்படி தனது சகோதரரின் பிரபலத்தின் நிழலில் தான் கொடி கட்டி பறக்காதவரை பார்க்க முடியுமா?. அப்படி யாரும் பண்ண பெரியவா அனுமதிக்க மாட்டார் என்பது வேறு விஷயம்.  சமீப காலத்தில் சித்தி அடைந்தவர் சாச்சு என்கிற சிவன் சார்.  இத்துடன் இணைத்துள்ளது சிவன் சார் தனது  தெய்வ சகோதரர் மஹா பெரியவாளை வரைந்த ஓவியம். யாரோ ஒருவர் வீட்டில் இருந்து இந்த உயிரோவியம் வெளியே வந்து நம்மை பிரமிக்க வைக்கிறதே.

திருச்சியில் இருந்து ஒரு அன்பு நண்பர் பிரசன்னம் அந்த படத்தை எனக்கு அனுப்பியதற்கு என்னோடு இந்த ரசாதத்தை அனுபவிக்கும் உங்களோடு சேர்ந்து அவருக்கு  நன்றி சொல்கிறேன்.

1 comment:

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...